search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "abandoning concrete project"

    • கீழ் பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் சார்பில் கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் போடும் திட்டத்தை ரத்து செய்யக் கோரி இருசக்கர வாகன பிரச்சார பேரணி நடைபெற்றது
    • கடைமடை வரை முறையாக தண்ணீர் செல்ல ஆண்டு தோறும் கால்வாயை தூர் வார வேண்டும்

    பெருந்துறை

    ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்கள், கீழ் பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் சார்பில் கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் போடும் திட்டத்தை ரத்து செய்யக் கோரி இருசக்கர வாகன பிரச்சார பேரணி நடைபெற்றது.

    இப்பேரணி கோபி அருகே உள்ள குருமந்தூரில் இருந்து புறப்பட்டு இறுதி யாக சென்னிமலையில் நிறைவடைந்தது. இப்பேர ணிக்கு பெருந்துறை அடுத்த காஞ்சிக்கோவில், பெத்தா ம்பாளையம் ரோடு பிரிவில் வரவேற்பு அளிக்கப்பட்டது.பின்னர் பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு தண்ணீர் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது.

    நம்பியூர் அடுத்த குரும ந்தூர் மேடு பகுதியில் கீழ்பவானி வாய்க்காலில் 34 கசிவு நீர் திட்ட பாசன விவ சாயிகளை பாதுகாக்க கோரியும், கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை நிறுத்த க்கோரியும், கால்வாயில் உள்ள பழைய கட்டுமான ங்களை உள்ளது உள்ளபடி சீரமைக்க வேண்டும்.

    கடைமடை வரை முறையாக தண்ணீர் செல்ல ஆண்டு தோறும் கால்வாயை தூர் வார வேண்டும் போன்ற பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி கீழ்பவானி பாசன பாது காப்பு இயக்கம் சார்பில் நம்பியூர் அருகே உள்ள குருமந்தூர் மேடு பகுதியில் கான்கிரிட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இருசக்கர வாகன பேரணி நடந்தது. பேரணியை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தொடங்கி வைத்து பேசினார்.

    இந்த பேரணி நம்பியூர் அருகே உள்ள குருமந்தூர் பகுதியில் இருந்து தொடங்கி கவுந்தப்பாடி, கோபி ச்செட்டிப்பாளையம், ஒத்த க்குதிரை வழியாக வந்து சென்னிமலையில் நிறைவடைந்தது. இருசக்கர வாகன பேரணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள் மற்றும் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×