என் மலர்
ஈரோடு
- இன்று கூடிய ஜவுளி சந்தையில் வெளி மாநில வியாபாரிகள் ஓரளவு வந்திருந்தனர்.
- மொத்த வியாபாரம் 40 சதவீதம் நடைபெற்றது.
ஈரோடு:
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே தினசரி ஜவுளி சந்தை வார ஜவுளி சந்தை நடைபெற்று வருகிறது. திங்கட்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை வரை வாரச்சந்தை விடிய விடிய நடைபெற்று வருகிறது.
வார ஜவுளி சந்தை தென்னிந்திய அளவில் புகழ்பெற்றது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து மொத்த துணிகளை கொள்முதல் செய்து செல்வார்கள்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மழை பரவலாக பெய்து வருவதால் ஜவுளி சந்தை வியாபாரம் மந்த நிலையில் நடைபெற்று வந்தது.
கடந்த வாரம் வெளி மாநில வியாபாரிகள் வரவில்லை. இதனால் மொத்த வியாபாரம் பாதிக்கப்பட்டது.
ஆனால் இன்று கூடிய ஜவுளி சந்தையில் ஆந்திரா, தெலுங்கானா, கேரளா வியாபாரிகள் ஓரளவு வந்திருந்தனர். இதனால் மொத்த வியாபாரம் 40 சதவீதம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் இன்று வியாபாரிகள் வரவில்லை. இதனால் வியாபாரம் மந்த நிலையில் நடைபெற்றது.
உள்ளூர் வியாபாரிகளும் வராததால் ஜவுளி சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. எனினும் நாளாக நாளாக வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கும் என நம்பிக்கை தெரிவித்தனர்.
இதேபோல் சென்ட்ரல் தியேட்டர் பகுதியிலும், பி.பி. அக்ரஹாரம் பகுதியிலும் ஜவுளி சந்தை நடைபெற்று வருகிறது.
- இரும்பு பொருட்களை கொள்ளையடித்து சென்ற 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு பெருந்துறை சாலையில் பிரபல கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த கட்டுமான நிறுவ னத்துக்கு சொந்தமான இடத்தில் கட்டுமானத்துக்கு பயன்படுத்தியது போக டன் கணக்கில் பழைய இரும்பு பொருட்கள், உடைந்த இரும்புகள், இரும்பு பெயிண்ட் ட்ரம்கள் குடோனில் வைத்து அதனை பழைய இரும்பு வியாபாரிகளிடம் மொத்தமாக விற்பனை செய்து வந்தனர்.
இந்நிலையில் ஈரோடு அக்ரகாரம் பகுதியை சேர்ந்த பழைய இரும்பு வியாபாரி அலாவுதீன் பாஷா அங்கு பணியாற்றும் காவலாளி ராஜேஷ் என்பவர் மூலமாக கட்டுமான நிறுவனத்தில் இருந்து பழைய இரும்பு பொருட்களை ஏற்கனவே கொள்முதல் செய்து வந்துள்ளார்.
இந்த நிறுவனத்தில் டன் கணக்கில் பழைய இரும்பு பொருட்கள் இருப்பதை அறிந்து கொண்ட அலாவுதீன் பாஷா தனது நண்பர்கள் உதவியுடனும், இரவு நேரத்தில் காவலாளி ராஜேஷ் உதவியுடனும் உள்ளே புகுந்து 5 டன் மதிப்பிலான இரும்பு பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து கட்டுமான நிறுவனத்தின் சார்பில் வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் கட்டுமான நிறுவனத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான 5 டன் இரும்பு பொருட்களை கொள்ளையடித்து சென்ற ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த பழைய இரும்பு வியாபாரி அலாவுதீன் பாஷா, அகமது பாஷா, சிராஜுதீன் ஆகிய 3 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் கட்டுமான நிறுவனத்தில் பழைய இரும்பு பொருட்களை திருடி சென்ற சம்பவத்தில் தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
- அரிசி கடத்தலில் ஈடுபடும் சக்திவேலை குண்டர் சட்டத்தில் அடைக்க கோரி கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
- கலெக்டர் ராஜகோபால் சுன்கரா குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.
ஈரோடு:
குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு த்துறை தலைவர் ஜோசி உத்தரவுப்படி கோவை மண்டல எஸ்.பி. பாலாஜி, ஈரோடு சரக டி.எஸ்.பி சுரேஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெ க்டர் பன்னீர் செல்வம் தலைமையில் போலீசார் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகின்றனர்.
அதன்படி பவானி அருகே உள்ள குருப்ப நாயக்கன்பாளையம் நேதாஜி நகரை சேர்ந்த சக்திவேல் (35) என்பவர் சம்பவத்தன்று காரில் 2 டன் ரேஷன் அரிசியை விற்பனை க்காக கடத்தி சென்றதாக ஈரோடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சக்திவேல் மீது ரேஷன் அரிசி கடத்தியதாக ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் ஏராளமான வழக்குகள் நிலைமையில் உள்ளன.
இந்நிலையில் ரேஷன் அரிசி கடத்தலில் தொடர்ந்து ஈடுபடும் சக்திவேலை குண்டர் சட்டத்தில் அடைக்க கோரி இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
இதனையேற்று கலெக்டர் ராஜகோபால் சுன்கரா சக்திவேலை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.
அதன் பேரில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சக்திவேல் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை சிறைத்துறை அதிகாரிகளிடம் போலீசார் வழங்கினர்.
- ணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டத்திற்காக பவானி போலீசார் கைது செய்தனர்.
- ரொக்க பணம் 14,180 ரூபாய் பறிமுதல் செய்தனர்.
பவானி:
பவானி அருகில் உள்ள சின்னியம்பாளையம் கிராமத்தில் பணம் வைத்து சீட்டாட்டம் நடைபெறுவதாக பவானி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பவானி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சின்னியம்பாளையம் டாக்டர் தோட்டம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பணம் வைத்து சீட்டாட்டத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் பவானி சின்னியம்பாளையம் பகுதியில் வசிக்கும் செல்வராஜ் மகன் மோகன் (40), ராமசாமி மகன் தர்மன் (40), சின்னுசாமி மகன் அய்யாசாமி (28), செல்வன் மகன் அய்யாதுரை மற்றும் சின்னுசாமி மகன் விஜயகுமார் (78) என்பது தெரியவந்தது.
இவர்கள் 5 பேரும் 52 சீட்டுகள் கொண்ட சீட்டுக்கட்டு மூலம் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டத்திற்காக பவானி போலீசார் கைது செய்தனர்.
மேலும் ரொக்க பணம் 14,180 ரூபாய் பறிமுதல் செய்தனர்.
- போலீசார் கொங்கலம்மன் கோவில் வீதியில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
- புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது.
ஈரோடு, நவ. 28-
தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனையத் தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி ஈரோடு டவுன் போலீசார் கிழக்கு கொங்கலம்மன் கோவில் வீதியில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொ ண்டனர்.
அப்போது அங்குள்ள பலசரக்கு கடை ஒன்றில் தடைசெய்யப்பட்ட பான்மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் கடை உரியமையாளரான ரகுவீர் சிங் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து ரூ.1,628 மதிப்பிலான 2.305 கிலோ கிராம் புகையிலை பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.
- வீட்டில் கீதா திடீரென தூக்குபோட்டு கொண்டார்.
- மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு அடுத்துள்ள லக்காபுரம் புதுவலசு பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (33). இவரது மனைவி கீதா (28). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
கணவன், மனைவி இருவரும் லக்காபுரத்தில் உள்ள தறிப்பட்டறையில் வேலை பார்த்து வந்தனர்.
இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை வீட்டில் கீதா திடீரென தூக்குபோட்டு கொண்டார்.
இதையறிந்த சசிகுமார் உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே கீதா இறந்து விட்டதாக தெரிவித்து ள்ளார்.
இதுகுறித்து, கீதாவின் தந்தை பழனிசாமி (50) அளித்த புகாரின் பேரில் மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
- கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 700 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 81.26 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,367 கன அடியாக நீர்வந்து கொண்டிருக்கிறது.
பவானிசாகர் அணையில் இருந்து இன்று முதல் மீண்டும் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 700 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் அணை பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் மற்ற அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 32 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 4.65 அடியாகவும், வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 29.86 அடியாகவும் உள்ளது.
- தண்ணீர் தொட்டியின் மீது பாம்பு ஒன்று நெளிந்து கொண்டிருந்தது.
- தீயணைப்பு வீரர்கள் அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
சென்னிமலை:
சென்னிமலை அடுத்துள்ள எம்.ஜி.ஆர்., நகர் 3-வது வீதியில் வீட்டில் மூடப்பட்டுள்ள தரை தள தண்ணீர் தொட்டியின் மீது பாம்பு ஒன்று நெளிந்து கொண்டிருந்தது.
இதனை கண்ட வீட்டின் உரிமையாளர் சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
நிலைய அலுவலர் சதீஸ்குமார் தலைமயைில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பாம்பு பிடிக்கும் கருவியின் உதவியுடன் பாம்பை உயிருடன் பிடித்தனர்.
5 அடி நீளம் கொண்ட அந்த கட்டு விரியன் பாம்பை தீயணைப்பு வீரர்கள் அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
- குழந்தைகள் நலக்குழுவின் மூலமாக ஒரு ஆண் குழந்தையை தத்து பெற்றிருந்தார்.
- கமலபாபு அளித்த புகாரின் பேரில் மொட்டக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு வெண்டி பாளையம் பாலதண்டாயுதம் வீதியில் ஹெல்பிங் ஹார்ட் டிரஸ்ட் எனும் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் ஒருங்கிணைப்பாளர் கமலபாபு (32).
இவர் கோவையில் உள்ள குழந்தைகள் நலக்குழுவின் மூலமாக ஒரு ஆண் குழந்தையை தத்து பெற்றிருந்தார். பிறந்த 16 நாட்களேயான அந்த குழந்தைக்கு கடந்த 25-ந் தேதி இரவு 11.15 மணியளவில் திடீரென மூக்கில் ரத்தம் வந்து உடல் நிலை சரியில்லாமல் போனது.
உடனடியாக குழந்தையை ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து கமலபாபு அளித்த புகாரின் பேரில் மொட்டக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- மலை கிராம பழங்குடியின மக்கள் அந்தியூர் எம்.எல்.ஏ. ஏஜி வெங்கடாச லத்திடம் தங்களுக்கு புதிய வீடுகள் கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கை மனுவினை வழங்கினர்
- பழங்குடியினர் நல வீடுகள் கட்டும் திட்டத்தின் முதல் கட்டமாக 39 வீடுகள் கட்டிட பணி துவக்க ஆணைகள் வழங்கப்பட்டது
அந்தியூர்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலை கிராம பழங்குடியின மக்கள் அந்தியூர் எம்.எல்.ஏ. ஏஜி வெங்கடாச லத்திடம் தங்களுக்கு புதிய வீடுகள் கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கை மனுவினை வழங்கினர்.
அவர்களின் கோரிக்கை களை தமிழ்நாடு முதலமை ச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொண்டு சென்று தொடர் நடவடிக்கையால் பர்கூர் மலை கிராமங்களில் உள்ள மலைவாழ் பழங்குடி யின மக்களுக்கு புதிய வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய ப்பட்டு உத்தரவு பிறப்பிக்க ப்பட்டது.
அதன் அடிப்படையில் சோழர்கனைப் பகுதியில் பழங்குடியினர் நல வீடுகள் கட்டும் திட்டத்தின் முதல் கட்டமாக 39 வீடுகள் கட்டிட பணி துவக்க ஆணைகள் வழங்கப்பட்டது. இதில் சோழகனை, ஒந்தனை, குட்டையூர், அக்கினி பாவி உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்களைச் சேர்ந்த பகு திகளில் வசிக்கும் 36 பழங்கு டியின மக்களுக்கு ஒரு வீட்டிற்கு ரூ.4 லட்சத்து 95 ஆயிரம் என்ற மதிப்பில் புதிய வீடுகள் கட்டிட பணி துவக்க ஆணைகளை அந்தி யூர் எம்.எல்.ஏ. ஏஜி வெங்க டாஜலம் வழங்கினார்.
மேலும் பொதுமக்கள் தங்களது பகுதிகளுக்கு சரிவர குடிநீர், மின் விள க்குகள், சாலை வசதிகள் போன்ற பல்வேறு அடி ப்படை வசதிகள் இன்றி மிகுந்த சிரமப்படுவதாக கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை கேட்டறிந்த எம்.எல்.ஏ. உங்கள் கோரி க்கை குறித்து மாவட்ட கலெ க்டர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவ ணன் மற்றும் அரசு அலுவ லர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பத ற்கான பிரசாரம் தொடங்கி நடந்து வருகிறது
- சத்தியமங்கலத்தில் நடந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் 150-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்
சத்தியமங்கலம்
கார்மெண்ட்ஸ் மற்றும் அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கம் கடந்த 5 வருடங்களாக பெண் தொழிலாளர்களின் நலனுக்காக பணிபுரிந்து வருகிறது. உலக அளவில் பெண்களுக்கு நடக்கும் வன்முறைகளில் 3 ஒரு வன்முறை பணியிடங்களில் நடப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.
எனவே உலக முழுவதும் இதனை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பத ற்கான பிரசாரம் தொடங்கி நடந்து வருகிறது. பெண் தொழிலாளர்களுக்காக பணி புரியும் கார்மெண்ட்ஸ் மற்றும் அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கம் முதல் கட்ட பிரச்சா ரத்தை தொடங்கியுள்ளது.
கோபி, நம்பியூர், டி. என். பாளையம், அவிநாசி, பெருந்துறை, ஈரோடு, திருப்பூர் போன்ற பகுதி களில் நடத்த திட்டமிட்டு உள்ளது.
இதை தொடர்ந்து சத்தியமங்கலத்தில் நடந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் 150-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பிரசாரத்தை சங்கத்தின் பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
ரீட் அமைப்பின் தலைவர் கருப்புசாமி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். சங்கத்தின் தலைவர் கல்பனா வரவேற்றார். செயலாளர் ஜானகி தொகுத்து வழங்கினார். நிர்வாக குழு உறுப்பினர் மகேஸ்வரி நன்றி கூறினார்.
இதில் பெண்கள் தங்கும் விடுதிகளை பதிவு செய்ய வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு பி.எப்., இ.எஸ்.ஐ., மகப்பேறு சலுகைகள் போன்ற நல த்திட்டங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரி க்கைகள் வலியுறுத்த ப்பட்டன.
- கார்த்திக்கை தீபத் திரு நாள் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு பவானி மற்றும் பெருந்துறை பகுதி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது
- பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி உடனமர் ஆதிகேசவ பெருமாள் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து தீபம் ஏற்றப்பட்டது
பெருந்துறை
கார்த்திக்கை தீபத் திரு நாள் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு பவானி மற்றும் பெருந்துறை பகுதி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
இதையொட்டி பெரு ந்துறை வேதநாயகி உட னமார் சோழீஸ்வரர் கோவி லில் சுவாமிகளுக்கு சிறப்பு கள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பெருந்துறை அடுத்த திங்களூர் அப்பிச்சிமார் மடத்தில் உள்ள அப்பிச்சி மார்ஐயன், ராக்கியண்ணன் மற்றும் மசிரி அம்மன் சாமிகளுக்கு சிறப்பு பூஜை கள் நடைபெற்றது. மேலும், கோவில் சார்பில் படியாக அரிசி, கொள்ளு, உப்பு, புளி மற்றும் மிளகாய் ஆகியவை ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்ளுக்கு வழங்க ப்பட்டது. மக்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்க ப்பட்டது. போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர்.
பெருந்துறை அடுத்த விஜயமங்கலம், பெரிய வீரசங்கிலி கிருஷ்ணர் ஆலய வளாகத்தில் உள்ள கார்காத்த அம்மன் மற்றும் அமிர்தவல்லி தாயார் சன்னி தானத்தில் கார்த்திக்கை தீப திருநாளை முன்னிட்டு சிறப்பு விளக்கு பூஜை நடை பெற்றது. இதில் திரளான பெண்கள் மற்றும் சிறுமிகள் கலந்துக் கொண்டனர்.
பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது சங்கமேஸ்வரர் கோவில். இந்த கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு ராஜ கோபுரம் முன்பு சொக்கப்பனை எற்றி வைத்து விழா நடை பெறுவது வழக்கம்.
அதே போல் கார்த்திகை தீப விழாவை யொட்டி பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி உடனமர் ஆதிகேசவ பெருமாள் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து தீபம் ஏற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கோவில் வெளிப்பகுதியில் உள்ள ராஜகோபுரத்தின் முன்பு சொக்கப்பனை எறிப்பு நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் பவானி எம்.எல்.ஏ., கருப்பணன், பவானி நகர் மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன், தி.மு.க. நகர செயலாளர் நாகராசன், அ.தி.மு.க. நகர் செயலாளர் சீனிவாசன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.






