search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Celebration of"

    • கார்த்திக்கை தீபத் திரு நாள் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு பவானி மற்றும் பெருந்துறை பகுதி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது
    • பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி உடனமர் ஆதிகேசவ பெருமாள் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து தீபம் ஏற்றப்பட்டது

    பெருந்துறை

    கார்த்திக்கை தீபத் திரு நாள் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு பவானி மற்றும் பெருந்துறை பகுதி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    இதையொட்டி பெரு ந்துறை வேதநாயகி உட னமார் சோழீஸ்வரர் கோவி லில் சுவாமிகளுக்கு சிறப்பு கள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    பெருந்துறை அடுத்த திங்களூர் அப்பிச்சிமார் மடத்தில் உள்ள அப்பிச்சி மார்ஐயன், ராக்கியண்ணன் மற்றும் மசிரி அம்மன் சாமிகளுக்கு சிறப்பு பூஜை கள் நடைபெற்றது. மேலும், கோவில் சார்பில் படியாக அரிசி, கொள்ளு, உப்பு, புளி மற்றும் மிளகாய் ஆகியவை ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்ளுக்கு வழங்க ப்பட்டது. மக்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்க ப்பட்டது. போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பெருந்துறை அடுத்த விஜயமங்கலம், பெரிய வீரசங்கிலி கிருஷ்ணர் ஆலய வளாகத்தில் உள்ள கார்காத்த அம்மன் மற்றும் அமிர்தவல்லி தாயார் சன்னி தானத்தில் கார்த்திக்கை தீப திருநாளை முன்னிட்டு சிறப்பு விளக்கு பூஜை நடை பெற்றது. இதில் திரளான பெண்கள் மற்றும் சிறுமிகள் கலந்துக் கொண்டனர்.

    பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது சங்கமேஸ்வரர் கோவில். இந்த கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு ராஜ கோபுரம் முன்பு சொக்கப்பனை எற்றி வைத்து விழா நடை பெறுவது வழக்கம்.

    அதே போல் கார்த்திகை தீப விழாவை யொட்டி பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி உடனமர் ஆதிகேசவ பெருமாள் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து தீபம் ஏற்றப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து கோவில் வெளிப்பகுதியில் உள்ள ராஜகோபுரத்தின் முன்பு சொக்கப்பனை எறிப்பு நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் பவானி எம்.எல்.ஏ., கருப்பணன், பவானி நகர் மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன், தி.மு.க. நகர செயலாளர் நாகராசன், அ.தி.மு.க. நகர் செயலாளர் சீனிவாசன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    ×