என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற"

    • போலீசார் கொங்கலம்மன் கோவில் வீதியில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
    • புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது.

    ஈரோடு, நவ. 28-

    தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனையத் தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி ஈரோடு டவுன் போலீசார் கிழக்கு கொங்கலம்மன் கோவில் வீதியில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொ ண்டனர்.

    அப்போது அங்குள்ள பலசரக்கு கடை ஒன்றில் தடைசெய்யப்பட்ட பான்மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் கடை உரியமையாளரான ரகுவீர் சிங் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவரிடம் இருந்து ரூ.1,628 மதிப்பிலான 2.305 கிலோ கிராம் புகையிலை பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.

    ×