search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் தொழிலாளர்களுக்கான விழிப்புணர்வு பிரசாரம்
    X

    பெண் தொழிலாளர்களுக்கான விழிப்புணர்வு பிரசாரம்

    • பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பத ற்கான பிரசாரம் தொடங்கி நடந்து வருகிறது
    • சத்தியமங்கலத்தில் நடந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் 150-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்

    சத்தியமங்கலம்

    கார்மெண்ட்ஸ் மற்றும் அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கம் கடந்த 5 வருடங்களாக பெண் தொழிலாளர்களின் நலனுக்காக பணிபுரிந்து வருகிறது. உலக அளவில் பெண்களுக்கு நடக்கும் வன்முறைகளில் 3 ஒரு வன்முறை பணியிடங்களில் நடப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.

    எனவே உலக முழுவதும் இதனை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பத ற்கான பிரசாரம் தொடங்கி நடந்து வருகிறது. பெண் தொழிலாளர்களுக்காக பணி புரியும் கார்மெண்ட்ஸ் மற்றும் அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கம் முதல் கட்ட பிரச்சா ரத்தை தொடங்கியுள்ளது.

    கோபி, நம்பியூர், டி. என். பாளையம், அவிநாசி, பெருந்துறை, ஈரோடு, திருப்பூர் போன்ற பகுதி களில் நடத்த திட்டமிட்டு உள்ளது.

    இதை தொடர்ந்து சத்தியமங்கலத்தில் நடந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் 150-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பிரசாரத்தை சங்கத்தின் பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

    ரீட் அமைப்பின் தலைவர் கருப்புசாமி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். சங்கத்தின் தலைவர் கல்பனா வரவேற்றார். செயலாளர் ஜானகி தொகுத்து வழங்கினார். நிர்வாக குழு உறுப்பினர் மகேஸ்வரி நன்றி கூறினார்.

    இதில் பெண்கள் தங்கும் விடுதிகளை பதிவு செய்ய வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு பி.எப்., இ.எஸ்.ஐ., மகப்பேறு சலுகைகள் போன்ற நல த்திட்டங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரி க்கைகள் வலியுறுத்த ப்பட்டன.

    Next Story
    ×