பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது

ணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டத்திற்காக பவானி போலீசார் கைது செய்தனர். ரொக்க பணம் 14,180 ரூபாய் பறிமுதல் செய்தனர்.
பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது
Published on

பவானி:

பவானி அருகில் உள்ள சின்னியம்பாளையம் கிராமத்தில் பணம் வைத்து சீட்டாட்டம் நடைபெறுவதாக பவானி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பவானி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சின்னியம்பாளையம் டாக்டர் தோட்டம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பணம் வைத்து சீட்டாட்டத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் பவானி சின்னியம்பாளையம் பகுதியில் வசிக்கும் செல்வராஜ் மகன் மோகன் (40), ராமசாமி மகன் தர்மன் (40), சின்னுசாமி மகன் அய்யாசாமி (28), செல்வன் மகன் அய்யாதுரை மற்றும் சின்னுசாமி மகன் விஜயகுமார் (78) என்பது தெரியவந்தது.

இவர்கள் 5 பேரும் 52 சீட்டுகள் கொண்ட சீட்டுக்கட்டு மூலம் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டத்திற்காக பவானி போலீசார் கைது செய்தனர்.

மேலும் ரொக்க பணம் 14,180 ரூபாய் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com