என் மலர்
ஈரோடு
- ஈரோடு அருகே வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இதுகுறித்து, சதீஷ்குமாரின் தந்தை அளித்த புகாரின்பேரில், சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
காரைவாய்க்கால் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (64). இவரது மகன் சதீஷ்குமார் (35). இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
ஆனால், கருத்துவேறுபாடு காரணமாக மனைவியைப் பிரிந்து, கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த ஆயிஷா பேகம் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு கொல்லம்பாளையம் பகுதியில் வசித்து வந்தார். தினமும் மது குடிக்கும் சதீஷ்குமார் இரவு சாப்பிட்டு விட்டு, மதுபோதையில் கதவைத் தாழிட்டுக் கொண்டு, அவரது படுக்கை அறையில் தூங்கச் சென்றுள்ளார்.
இந்த நிலையில், வழக்கம் போல காலை 6 மணியளவில் அவரை எழுப்புவதற்காக அவரது மனைவி கதவைத் தட்டியுள்ளார். ஆனால், சதீஷ்குமார் கதவை திறக்கவில்லை. இதையடுத்து, அக்கம்பக்கத்தினரின் உதவியுடன், வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே பார்த்தபோது, மேற்கூரை சட்டத்தில், தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சதீஷ்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, சதீஷ்குமாரின் தந்தை அளித்த புகாரின்பேரில், சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கொடுமுடி மகுடேசுவரர் வீர நாராயணப் பெருமாள் கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கோ வில்களில் ஆடி கிருத்திகை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
- சிறப்பு அபிசேகம் செய்ய பட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. தொ டர்ந்து சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
கொடுமுடி:
கொடுமுடி மகுடேசுவரர் வீர நாராயணப் பெருமாள் கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கோ வில்களில் ஆடி கிருத்திகை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி கொடுமுடி மகுடேசுவரர் கோவில், ஊஞ்சலூர் நாகேஸ்வரர் கோவில், கொந்தளம் நாகேஸ்வரர் கோவில், கொளாநல்லி பாம்பலங்கார சுவாமி கோவில், பழனி க்கவுண்டன் பாளையம் பழனிக்கு மாரசுவாமி மலை க்கோவி ல்களில் சிறப்பு அபிசேகம் செய்ய பட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. தொ டர்ந்து சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
- ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
- முன்பு 300 வரை பரிசோதனை செய்து வரப்பட்ட நிலையில் தற்போது தினமும் 500 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய ப்பட்டு வருவதாக சுகா தாரத் துறையினர் தெரி வித்துள்ளனர்.
ஈரோடு, ஜூலை.24-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. பிற மாவட்டங்களில் தினசரி பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஈரோட்டில் கடந்த 3 நாட்களாக தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளி யிட்டுள்ள பட்டி யல்படி மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 61 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 33 ஆயிரத்து 718 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் சிகிச்சையில் இருந்த 44 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 637 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 347 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டத்தில் மெல்ல மெல்ல கொரோனா தாக்கம் அதிகரித்து வருவ தால் பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டி நெறி முறை களை முறையாக பின்பற்ற வேண்டும். பொது மக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என சுகாதாரத் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் தற்போது மாவட்டத்தில் மேற்கொள்ள ப்பட்டு வரும் தினசரி பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்பு 300 வரை பரிசோதனை செய்து வரப்பட்ட நிலையில் தற்போது தினமும் 500 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய ப்பட்டு வருவதாக சுகா தாரத் துறையினர் தெரி வித்துள்ளனர்.
- அப்போது 5 பேர் நின்று கொண்டு அந்த வழியாக சென்ற நபர்களை விரட்டி வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து கருங்கல்பாளையம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர்.
- கைதா னவர்களில் வேல்முருகன், பாண்டியராஜன், குட்டி என்கிற செந்தில் நாகராஜன் ஆகிய 3 பேர் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது.
ஈரோடு:
கருங்கல்பாளையம் நெரிக்கல்மேடு பகுதியில் ஒரு கும்பல் நின்று கொண்டு அந்த வழியாக சென்ற பொதுமக்களிடம் பணம் கேட்டு மிரட்டியது. இது பற்றிய தகவல் கிடைத்ததும் கருங்கல்பாளையம் இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தலைமையான போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது 5 பேர் நின்று கொண்டு அந்த வழியாக சென்ற நபர்களை விரட்டி வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டதாக கருங்கல்பாளையம் சிந்தன்நகரை சேர்ந்த வேல்முருகன் (28), ராஜகோபால் தோட்டம் பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன் (30), அதே பகுதியைச் சேர்ந்த குட்டி என்கிற செந்தில் நாகராஜன் (36) காவேரி ரோட்டை சேர்ந்த மணிகண்டன்(26), சொக்காய் தோட்டம் பகுதியைச் சேர்ந்த ரகு (24) என தெரிய வந்தது.
இதையடுத்து கருங்கல்பாளையம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். கைதா னவர்களில் வேல்முருகன், பாண்டியராஜன், குட்டி என்கிற செந்தில் நாகராஜன் ஆகிய 3 பேர் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது.
- தாளவாடி இருந்து சத்தியமங்கலத்துக்கு கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை யானை வழிமறித்தது.
- சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
தாளவாடி:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தின் வழியாக திண்டுக்கல்லில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
இந்த தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் அடிக்கடி கடந்து செல்வது வழக்கம். கடந்த சில நாட்களாக கரும்புகளை தின்பதற்காக யானைகள் குட்டியுடன் சாலையில் உலா வருவதும் வாகனங்களை வழிமறைத்து கரும்புகளை தின்பதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் நேற்று மாலை தமிழக கர்நாடக எல்லை தாளவாடி அருகே காரப்பள்ளத்தில் இருந்து புளிஞ்சூர் செல்லும் சாலையில் குட்டியுன் யானை சாலை உலா வந்தது. அப்போது தாளவாடி இருந்து சத்தியமங்கலத்துக்கு கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை யானை வழிமறைத்தது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர் லாரியை நிறுத்தினார். பின்னர் லாரியில் இருந்த கரும்பை யானை துதிக்கையால் எடுத்து தின்றது.
பின்னர் டிரைவர் லாரியின் மீது ஏறி கரும்புகளை சாலை ஓரத்தில் தூக்கி எரிந்தார். யானை குட்டியுடன் அந்த கரும்பை தின்றது. பின்னர் லாரி ஓட்டுநர் லாரியை எடுத்து சென்றது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
- இன்று மட்டும் மாவட்டத்தில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
- இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செய்து கொண்டனர். குறிப்பாக தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது.
ஈரோடு:
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4 -ம் அலையை தடுக்கும் வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் , அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 1,597 மையங்களில் காலை 7 மணிக்கு தடுப்பூசி முகாம் தொடங்கியது.
12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதே போல் 18 வயதுக்கு மேற்பட்ட இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டது. இன்று மட்டும் மாவட்டத்தில்
1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணியில் மாவட்டம் முழுவதும் 3,196 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
70 வாகனங்கள் முகாமிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் சிரமம் இன்றி தடுப்பூசி எடுத்துக்கொள்ள பொதுமக்கள் அதிக கூடும் இடங்களான ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டிருந்தன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செய்து கொண்டனர்.
குறிப்பாக தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது. இதனால் இன்று பூஸ்டர் தடுப்பூசியை ஏராளமானோர் ஆர்வத்துடன் போட்டுக் கொண்டனர்.
- ஆட்டுக்கொட்டையில் விளையாடியபோது அங்கிருந்த இரும்பு பைப்பை சிறுமி பிடித்துள்ளார். அப்போது அதில் மின்சாரம் தாக்கி சிறுமி சுதேசனா மயக்கமடைந்தார். ன்னர் மேல்சிகிச்சைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது சிறுமியை பரிசோதித்த டாக்டர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
- இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சித்தோடு:
பவானி லட்சுமி நகர் மாகாளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் தாமரைகண்ணன். இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களது ஒரே மகள் சுதேசனா (6). சம்பவத்தன்று சுதேசனா அருகே உள்ள தனது பாட்டியின் வீட்டிற்கு சென்று விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது ஆட்டுக்கொட்டையில் விளையாடியபோது அங்கிருந்த இரும்பு பைப்பை சிறுமி பிடித்துள்ளார். அப்போது அதில் மின்சாரம் தாக்கி சிறுமி சுதேசனா மயக்கமடைந்தார். இதையடுத்து அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது சிறுமியை பரிசோதித்த டாக்டர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் நாளை (திங்கட்கிழமை) ஆர்ப்பட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
- இதில் முன்னாள் அமை ச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் எம்.எல்ஏ. கலந்து கொண்டு தலைமை தாங்கி சிறப்புரையாற்றுகிறார்.
கோபி:
தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் நாளை (திங்கட்கிழமை) ஆர்ப்பட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையொட்டி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்துவரி ஆகியவற்றை குறைக்க கோரியும், குடும்ப தலைவிக்கான ரூ.1000, சிலிண்டர் மானியம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, தாலிக்கு தங்கம், பெண்களுக்கு மானிய ஸ்கூட்டர் மற்றும் அரசு ஊழியருக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறு கிறது.
கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ.
இதில் முன்னாள் அமை ச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் எம்.எல்ஏ. கலந்து கொண்டு தலைமை தாங்கி சிறப்புரையாற்றுகிறார். இதில் பவானிசாகர் பண்ணாரி எம்.எல்.ஏ. மற்றும் புறநகர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர், ஊராட்சி நிர்வாகிகள் உள்பட கலந்து கொள்கிறார்கள்.
- கோபிசெட்டிபாளையம் மார்க்கெட் அருகே உள்ள ஒரு வங்கியின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வங்கிக்கு சென்றார். அவர் மீண்டும் வெளியே வந்து பார்த்த போது அங்கு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் காணாதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- இது குறித்து கதிர்வேல் கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கோட்டுபுள்ளாம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல் (46). விவசாயி. இவர் சம்பவத்தன்று கோபிசெட்டிபாளையம் மார்க்கெட் அருகே உள்ள ஒரு வங்கியின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வங்கிக்கு சென்றார்.
அவர் மீண்டும் வெளியே வந்து பார்த்த போது அங்கு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் காணாதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதை யாரோ திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து கதிர்வேல் கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கோபிசெட்டிபாளையம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்பனைக்கு வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பாண்டிதுரையை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி:
கடத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள எலத்தூர் செட்டிபாளையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் ஒரு வாலிபர் ஒரு பையுடன் நின்று கொண்டு இருந்தார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் கள்ளக்குறிச்சியை சேர்ந்த பாண்டிதுரை (28) என்பதும், மது பாட்டில்கள் விற்பனைக்கு வைத்து இருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து அவரிடம் இருந்து 25 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பாண்டிதுரையை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம், பாரதி இன்டர் நேஷனல் பள்ளி மாணவர்கள் இந்த ஆண்டு முதல்முறையாக சிபிஎஸ்சி 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர்.
- அனைவரையும், பாரதி கல்வி அறக்கட்டளையின் தாளாளர் மோகனாம்பாள், தலைவர் செந்தில்குமார் மற்றும் முதல்வர் உமாதேவி ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம், பாரதி இன்டர் நேஷனல் பள்ளி மாணவர்கள் இந்த ஆண்டு முதல்முறையாக சிபிஎஸ்சி 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவி வருணப்பிரியா 500-க்கு 470 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடத்தையும், மாணவி ஹரிப்பிரியா மற்றும் மாணவர் விக்னேஷ் 458 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், மாணவர் விக்னேஷ் 450 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவ-மாணவிகளையும், அவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்கள், உறுதுணையாய் இருந்த பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரையும், பாரதி கல்வி அறக்கட்டளையின் தாளாளர் மோகனாம்பாள், தலைவர் செந்தில்குமார் மற்றும் முதல்வர் உமாதேவி ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.
- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசு பதவிகளுக்கான தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று தமிழகம் முழுவதும் குரூப் 4 தேர்வு நடைபெற்றது.
- தேர்வு மையங்களில் நுழைவாயிலில் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஈரோடு:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசு பதவிகளுக்கான தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று தமிழகம் முழுவதும் குரூப் 4 தேர்வு நடைபெற்றது.
ஈரோடு மாவட்டத்தில் இன்று நடந்த குரூப்-4 தேர்வுக்காக மாவட்டம் முழுவதும் 201 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. ஈரோடு மாவட்டத்தில் குரூப் - 4 தேர்வை 63 ஆயிரத்து 16 தேர்வர்கள் எழுத விண்ணப்பித்து இருந்தனர். தேர்வில் முறைகேடு நடப்பதை தடுக்கும் வகையில் கண்காணிப்பு அலுவலர்கள் 201 பேர் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களை கண்காணித்தனர்.
மேலும் 43 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இதேபோல் 16 பறக்கும் படைகளும் குழுக்களாக வந்து சோதனை செய்தன. தேர்வை வீடியோவாக படம் பிடிக்க 208 ஒளிப்பதிவாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களில் சென்று தேர்வை ஒளிப்பதிவு செய்து கொண்டனர்.
தேர்வர்கள் காலை சரியாக 8.30 மணிக்குள் அந்தந்த தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். 9 மணிக்கு பிறகு வந்த தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. தேர்வு சரியாக காலை 9:30 மணிக்கு தொடங்கி 12:30 மணிக்கு நிறைவடைந்தது. அதன்பின் 12.30 மணி முதல் 12.45 மணி வரை தேர்வர்கள் தங்களது ஓஎம்ஆர் சீட்டை சரியாக பூர்த்தி செய்து உள்ளார்களா என்று பார்க்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 12.45 மணிக்கு பிறகு தேர்வர்கள் அறைய விட்டு வெளியே சென்றனர்.
கொரோனா காலகட்டம் என்பதால் பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகள் பின்பற்றப்பட்டது.அதன்படி தேர்வர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வலியுறுத்தப்பட்டுள்ளனர். இதன்படி 90 சதவீதம் பேர் முக கவசம் அணிந்து வந்திருந்தனர். ஒரு சிலர் அருகே உள்ள கடைகளில் அவசரமாக சென்று முக கவசம் வாங்கி சென்றதை காண முடிந்தது. தேர்வில் கருப்பு நிற பந்து முனை பேனா மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர். தேர்வர்கள் ஹால் டிக்கெட் உடன் ஆதார், டிரைவிங் லைசென்ஸ் பாஸ்போர்ட், போன்ற ஏதாவது ஒரு அடையாள அட்டையை எடுத்து வர அறிவுறுத்தப்பட்டிருந்தனர். அதன்படி தேர்வர்கள் அடையாள அட்டை கொண்டு வந்திருந்தனர். அதனை தேர்வு கண்காணிப்பாளர்கள் சோதனை செய்தனர்.
தேர்வு மையங்களில் நுழைவாயிலில் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் காய்ச்சல் அறிகுறி இருந்த சிலருக்கு தனி அறை ஒதுக்கி அவர்கள் அதில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். செல்போன், டிஜிட்டல் வாட்ச் கொண்டு வர அனுமதி இல்லை. ஒவ்வொரு தேர்வு மையங்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டி இருந்தது.
மின்சார வசதி, குடிநீர் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த குரூப்- 4 தேர்வை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு செய்தார். குரூப்-4 தேர்வை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு இருந்தன. இன்று நடந்த தேர்வில் பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்று எழுதினர்.






