search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "linked"

    • வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க 1.8.2022 முதல் பணி நடைபெறவுள்ளது
    • இணையவழியில் 6B-படிவத்தை பூர்த்தி செய்து ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்து கொள்ளலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலிலுள்ள வாக்காளர் விபரங்களை உறுதி செய்யவும், ஒரு வாக்காளர் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதியில் இடம்பெற்றுள்ளதா அல்லது ஒரு வாக்காளரின் பெயர் ஒரே தொகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம்பெற்றுள்ளதா என்பதையும் கண்டறியவும், வாக்காளர்களின் சுயவிருப்பத்தின் அடிப்படையில் ஆதார் எண்ணினை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியானது 1.8.2022 முதல் நடைபெறவுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயருள்ள அனைத்து வாக்காளர்களும் ஆதார் எண் விபரங்களை தன்விருப்பத்தின் அடிப்படையில் (Voluntary Basis) தெரிவிக்க அறிவிக்கப்பட்டுள்ளது.

    வாக்காளர்கள் தன்விருப்பத்தின் அடிப்படையில் பயன்பாட்டு இணைய தளங்களான www.nvsp.in, Voters Portal என்ற இணையதளங்கள் மூலமாகவும், Voter Helpline App என்ற மொபைல் செயலி மூலமாகவும் இணையவழியில் 6B-படிவத்தை பூர்த்தி செய்து தாங்களே நேரடியாக ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்து கொள்ளலாம் அல்லது வாக்குச்சவாடி நிலை அலுவலர்கள் இப்பணிக்கு வரும்போது தன்விருப்பத்தின் அடிப்படையில் படிவம் 6B - யினை பூர்த்தி செய்து சமர்ப்பித்து ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக்கொள்ளலாம்.

    வாக்காளர்களுக்கு ஆதார் எண் இல்லை என்ற அடிப்படையில், ஆதார் எண் தெரிவிக்க இயலாத இனங்களுக்கு படிவம் -6B -ல் தெரிவிக்கப்பட்டுள்ள கீழ்கண்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றினை தேர்வு செய்து அதன் நகலினை படிவம் 6B உடன் அளிக்கலாம்.

    1. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்ட அடையாள அட்டை 2. வங்கி-அஞ்சலகம் மூலம் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய கணக்குபுத்தகம் 3. தொழிலாளர் நலத்துறையின் மூலம் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீடு அட்டை 4. ஓட்டுநர் உரிமம் 5. நிரந்தர கணக்கு அட்டை (Pan Card) 6. தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்படி வழங்கப்பட்ட இருப்பிட அடையாள சான்று 7. இந்திய கடவுச்சீட்டு 8. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணங்கள் 9. மத்திய, மாநில அரசு,பொதுத்துறை நிறுவனங்கள்,வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணிக்கான அடையாள அட்டை 10. நாடாளுமன்ற,சட்டமன்ற, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்அலுவலக அடையாள அட்டை 11. இந்திய அரசாங்கத்தின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையால்வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள அட்டை (UDID).

    எனவே இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியலினை மேம்படுத்திட ஏதுவாக, வாக்காளர்கள் அனைவரும் தன்விருப்பத்தின் அடிப்டையில் ஆதார் எண்ணை அளித்து, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • அப்போது 5 பேர் நின்று கொண்டு அந்த வழியாக சென்ற நபர்களை விரட்டி வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து கருங்கல்பாளையம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர்.
    • கைதா னவர்களில் வேல்முருகன், பாண்டியராஜன், குட்டி என்கிற செந்தில் நாகராஜன் ஆகிய 3 பேர் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது.

    ஈரோடு:

    கருங்கல்பாளையம் நெரிக்கல்மேடு பகுதியில் ஒரு கும்பல் நின்று கொண்டு அந்த வழியாக சென்ற பொதுமக்களிடம் பணம் கேட்டு மிரட்டியது. இது பற்றிய தகவல் கிடைத்ததும் கருங்கல்பாளையம் இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தலைமையான போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது 5 பேர் நின்று கொண்டு அந்த வழியாக சென்ற நபர்களை விரட்டி வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டதாக கருங்கல்பாளையம் சிந்தன்நகரை சேர்ந்த வேல்முருகன் (28), ராஜகோபால் தோட்டம் பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன் (30), அதே பகுதியைச் சேர்ந்த குட்டி என்கிற செந்தில் நாகராஜன் (36) காவேரி ரோட்டை சேர்ந்த மணிகண்டன்(26), சொக்காய் தோட்டம் பகுதியைச் சேர்ந்த ரகு (24) என தெரிய வந்தது.

    இதையடுத்து கருங்கல்பாளையம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். கைதா னவர்களில் வேல்முருகன், பாண்டியராஜன், குட்டி என்கிற செந்தில் நாகராஜன் ஆகிய 3 பேர் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது.

    இந்தியா முழுவதும் 21 கோடியே 8 லட்சத்து 16 ஆயிரத்து 676 வருமான வரி கணக்கு எண்களுடன் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டு உள்ளன. #PanCard #AadhaarCard #Linked
    புதுடெல்லி:

    வருமான வரி கணக்கு எண்ணுடன் (‘பான்’) ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டு இருக்கிறது.

    இந்த நிலையில், கடந்த 24-ந் தேதி வரை இந்தியா முழுவதும் 21 கோடியே 8 லட்சத்து 16 ஆயிரத்து 676 வருமான வரி கணக்கு எண்களுடன் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டு உள்ளன.



    இதுவரை 41 கோடியே 2 லட்சத்து 66 ஆயிரத்து 969 வருமான வரி கணக்கு எண்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதில் சுமார் 40 கோடியே ஒரு லட்சம் வருமான வரி கணக்கு எண்கள் தனிநபர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுவரை சுமார் 50 சதவீத வருமான வரி கணக்கு எண்களுடன் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டு உள்ளன.

    இந்த தகவலை வருமான வரித்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.  #PanCard #AadhaarCard #Linked
    ×