என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர் தற்கொலை
    X

    வாலிபர் தற்கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஈரோடு அருகே வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து, சதீஷ்குமாரின் தந்தை அளித்த புகாரின்பேரில், சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    காரைவாய்க்கால் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (64). இவரது மகன் சதீஷ்குமார் (35). இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

    ஆனால், கருத்துவேறுபாடு காரணமாக மனைவியைப் பிரிந்து, கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த ஆயிஷா பேகம் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு கொல்லம்பாளையம் பகுதியில் வசித்து வந்தார். தினமும் மது குடிக்கும் சதீஷ்குமார் இரவு சாப்பிட்டு விட்டு, மதுபோதையில் கதவைத் தாழிட்டுக் கொண்டு, அவரது படுக்கை அறையில் தூங்கச் சென்றுள்ளார்.

    இந்த நிலையில், வழக்கம் போல காலை 6 மணியளவில் அவரை எழுப்புவதற்காக அவரது மனைவி கதவைத் தட்டியுள்ளார். ஆனால், சதீஷ்குமார் கதவை திறக்கவில்லை. இதையடுத்து, அக்கம்பக்கத்தினரின் உதவியுடன், வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே பார்த்தபோது, மேற்கூரை சட்டத்தில், தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

    உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சதீஷ்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, சதீஷ்குமாரின் தந்தை அளித்த புகாரின்பேரில், சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×