என் மலர்tooltip icon

    ஈரோடு

    • கடந்த 3 மாதங்களாக ஆற்று குடிநீர் வராததால் பொதுமக்கள் அக்கம் பக்கத்தில் உள்ள கிணறுகளிலும், குடிநீர் குழாய்களிலும் வரும் தண்ணீரை பிடித்து பயன்படுத்தி வந்துள்ளனர்.
    • ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கா ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை 8 மணி அளவில் சித்தார்- பூனாச்சி செல்லும் வழியில் செம்படாபாளையம் கரலாமணி என்ற இடத்தில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்க ளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் குறிச்சி ஊராட்சி செம்படாபாளையம் அடுத்துள்ள கரலாமணியில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    அப்பகுதியில் கடந்த 3 மாதங்களாக ஆற்று குடிநீர் வராததால் பொதுமக்கள் அக்கம் பக்கத்தில் உள்ள கிணறுகளிலும், குடிநீர் குழாய்களிலும் வரும் தண்ணீரை பிடித்து பயன்படுத்தி வந்துள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் குறிச்சி ஊராட்சி நிர்வாகத்திடமும் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் புகார் கொடுத்தாக கூறப்படுகிறது.

    ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கா ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை 8 மணி அளவில் சித்தார்- பூனாச்சி செல்லும் வழியில் செம்படாபாளையம் கரலாமணி என்ற இடத்தில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்க ளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் சம்பவத்திற்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் சட்டம் - ஒழுங்கு மற்றும் மது விலக்குப் பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
    • அப்போது அனுமதியின்றி மது விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 9 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் சட்டம் - ஒழுங்கு மற்றும் மது விலக்குப் பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில் கனிராவுத்தர் குளம் அருகே வீரப்பன் சத்திரம் பகுதியைச் சேர்ந்த அஸ்லம் (33) சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்கு வைத்திருந்த 6 மதுபாட்டில்களையும் பறி முதல் செய்தனர்.

    இதேபோல திங்களூர் போலீசார் மேற்கொண்ட சோதனையில், நிச்சா ம்பாளையம், கீழ்பவானி வாய்க்கால் அருகே அதே பகுதியைச் சேர்ந்த குமார் (48) என்பவர் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 6 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சிறுவலூர் போலீசார் மேற்கொண்ட சோதனையில், குட்ட ப்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக, அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் (42) மதுவிற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைதுசெய்தனர். அவரிடமிருந்து 9 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    • பேரூராட்சிகளின் உதவி இயக்குனரக (பொறுப்பு) உதவி செயற் பொறியாளர். எம். கணேசன் கொடியசைத்து தொங்கி வைத்தார்.
    • மேலும் அந்தியூர் காமராஜ் சாலையில் மயான பகுதிக்கு செல்லும் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் பஸ் நிலையம் அருகில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில்பகுதியில் இருந்து அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தேசிய பசுமைப் படையினர், அல்ட்ரா டெக் தன்னார்வல அமைப்பினர், மக்கள் மகிழ் அறக்கட்டளை, அரிமா சங்கத்தினர் ஆகியோர் இணைந்து விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

    பேரூராட்சிகளின் உதவி இயக்குனரக (பொறுப்பு) உதவி செயற் பொறியாளர். எம். கணேசன் கொடியசைத்து தொங்கி வைத்தார். அந்தியூர்பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார் வரவேற்று நீர்நிலைகள் பாதுகாப்பு, மரக்கன்று நடுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நகரங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளுதல் உள்ளிட்டவைகள் குறித்து விளக்கிப் பேசினார்.

    பின்பு விழிப்புணர்வு பேரணி அந்தியூர் அத்தாணி சாலை, சிங்கார வீதி, தேர்வீதி, ஜி.எச். கார்ணர், பர்கூர் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பத்ரகாளியம்மன் கோவில் அருகே நிறைவடைந்தது. மேலும் அந்தியூர் காமராஜ் சாலையில் மயான பகுதிக்கு செல்லும் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் பாண்டி யம்மாள் மாதேஷ், துணைத்தலைவர் பழனி சாமி, துப்புரவு ஆய்வாளர் குணசேகரன், துப்புரவு மேற்பார்வையாளர்கள் ஈஸ்வரமூர்த்தி, செந்தில், பொறியாளர்கள் சோம சுந்தரம், முருகேசன் மற்றும் சாந்து முகமது, தினேஷ், அல்ட்ரா தொண்டு நிறுவன தலைவர் தண்டாயுதபாணி, மக்கள் மகிழ் அறக்கட்டளை தலைவர் ராஜன்.எம்.பொன்னு சாமி, ராமகிரு ஷ்ணன் தூய்மை பணியா ளர்கள் அலுவலகப் பணி யாளர்கள் கலந்து கொண்டனர்.

    • முகாமிற்கு கோபி சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் ப.கந்தராஜா தலைமையேற்று குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
    • இதில் கூட்டுறவு நிறுவனப் பணியாளர்கள் 220-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் சரகத்திற்குட்பட்ட கோபிசெட்டிபாளையம் வட்டாரத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனப் பணியாளர்கள் மற்றும் ரேசன் கடை பணியாளர்களுக்கு, ஈரோடு மாவட்ட கூட்டுறவுத்துறை, சீமா தொண்டு நிறுவனம், பிவெல் மருத்துவமனை, ஈரோடு கேன்சர் சென்டர் மற்றும் வாசன் கண் மருத்துவமனை ஆகியோர் இணைந்து சிறப்பு மருத்துவப் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு கோபி சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் ப.கந்தராஜா தலைமையேற்று குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    இம்முகாமில் பொது மருத்துவம், சர்க்கரை, ரத்த அழுத்தம், இருதய பரிசோதனை, புற்றுநோய் பரிசோதனை, கண் மற்றும் பல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் கூட்டுறவு நிறுவனப் பணியாளர்கள் 220-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    முகாமில் துணைப்பதிவாளர் பணி ஓய்வு ஸ்ரீதர், சீமா தொண்டு நிறுவன திட்ட இயக்குனர் எஸ்.புஷ்பநாதன், பிவெல் மருத்துவமனை டாக்டர்.மெய்.எஸ்.அப்பாச்சி கேர் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ்.பாக்கியராஜ், வாசன் கண் மருத்துவமனை டாக்டர்.எம்.ராம்குமார், ஈரோடு கேன்சர் சென்டர், டாக்டர்.மீனா ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர்கள், கூட்டுறவு சார்பதிவாளர்கள், கோபிசெட்டிபாளையம் வட்டார சங்கச் செயலாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் உண்டியல்களை உடைத்து பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
    • அங்கு பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மூலப்பாளையத்தில் முருகன், மாரியம்மன் கோவில்கள் அருகருகே உள்ளன. தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள். இந்த கோவில்களின் நடை தினமும் காலை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு அடைக்கப்படும்.

    இதே போல் நேற்று முன்தினம் இரவு கோவில் பூசாரிகள் கோவிலை பூட்டிவிட்டு சென்றனர். நேற்று காலை வழக்கம் போல் கோவில்களை திறக்க வந்த பூசாரிகள் 2 கோவில்களின்

    உண்டியல்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ 25,000 திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் உண்டியல்களை உடைத்து பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. கைரேகை நிபுணர்களும் வந்து பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்து சென்றனர்.

    இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அங்கு பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொள்ளையர்களை பிடிக்கும் வகையில் தாலுகா சப்- இன்ஸ்பெக்டர் மதிவாணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் இதற்கு முன்பு கோவில்களில் கைவரிசை காட்டியவர்கள் பட்டியலை சேகரித்து அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தாளவாடி அடுத்த திகினாரை சோறைக்காடு ரங்கசாமி கோவில் வளாகத்தில் விவசாய சங்கத் தலைவர் கண்ணையன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • இந்த கூட்டத்தில் ஏராளமாக விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    தாளவாடி:

    தாளவாடி அடுத்த திகினாரை சோறைக்காடு ரங்கசாமி கோவில் வளாகத்தில் விவசாய சங்கத் தலைவர் கண்ணையன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி மற்றும் ஜுர்கள்ளி வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.

    அதே போல கடந்த 6 மாதத்தில் 2 மனிதர்கள் யானைத் தாக்கி பலியாகி உள்ளனர் . ஆனால் இறந்த நபர்களுக்கு குறைந்த அளவே இழப்பீடு வழங்கப்படுவதாகவும் ,அதே போல் சிறுத்தை, புலி தாக்கி பலியான கால்நடைகளுக்கு சில நேரங்களில் இழப்பீடு வழங்கப்படுவது இல்லை எனவும் சில நேரங்களில் குறைந்த அளவே இழப்பீடு வழங்கப்படிவதாகவும் அதை உயர்த்தி வழங்க கோரியம், தற்போது ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட திகனாரை,ஏரகனள்ளி, ஜோரக்காடு கரளவாடி பகுதியில் அந்த ஒற்றை யானை அட்டகாசம் செய்து வருவதாகவும் வனத்துறையினர் அந்த ஒற்றை யானையை விரட்ட நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாகவும் வனப்பகுதியைச் சுற்றி அண்டை மாநிலமான கர்நாடக மாநிலத்தில் உள்ளது போல் ஆழமாகவும் அகலமாகவும் அகழி அமைக்காமல் பெயரளக்கு மட்டுமே அகழி அமைத்துள்ளதாகவும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் ஒன்றிணைந்து தாளவாடியில் விரைவில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்யப்படுவதாக கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

    • சம்பவத்தன்று இரவு 8 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வந்த கருப்பன் ஒற்றை காட்டு யானை மீண்டும் தோட்டத்துக்குள் புகுந்து கரும்பை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின.
    • எனவே வனத்துறை விரைவில் கும்கி யானை உதவியுடன் கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கேரிக்கை வைத்துள்ளனர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகிவருகிறது. இதில் கருப்பன் என்ற ஒற்றை யானை திகனாரை மற்றும் தர்மாபுரம் கிராமத்தில் விவசாய தோட்டத்தில் புகுந்து 2 விவசாயிகளை கொன்றது.

    இந்த ஆட்கொல்லி யானையை பிடிக்க வேண்டும் என விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த யானையை விரட்ட பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சின்னதம்பி, ராஜவர்தன் என இரண்டு கும்கி யானைகள் தாளவாடி அடுத்த இரியபுரம் கிராமத்துக்கு கொண்டுவரப்பட்டது.

    அதை தொடர்ந்து கருப்பன் யானையை வனத்துறையினர் கும்கியானை உதவியுடன் அடர்ந்த வனப்பகுதியில் விரட்டினர்.

    இந்நிலையில் ஜுர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட திகனாரை அருகே உள்ள ஜோரகாடு பகுதியை சேர்ந்த மாதேவசாமி (28) என்பவர் தனது 5 ஏக்கர் தோட்டத்தில் கரும்பு சாகுபடி செய்துள்ளார். சம்பவத்தன்று இரவு 8 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வந்த கருப்பன் ஒற்றை காட்டு யானை மீண்டும் தோட்டத்துக்குள் புகுந்து கரும்பை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின. சத்தம் கேட்டு சென்ற விவசாயி ஒற்றை காட்டு யானை பயிர்களை சேதம் செய்வது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபற்றி வனத்துறைக்கும் அருகில் இருந்த விவசாயிகளுக்கும் தகவல் அளித்தார். பின்னர் விவசாயிகள் ஒன்று சேர்ந்து யானையை விரட்டினர். சுமார் 5 மணி நேரத்துக்கு பிறகு யானை வனப்பகுதியில் சென்றது. இதில் 1 ஏக்கர் கரும்பு சேதம் ஆனது. கருப்பன் ஆட்கொல்லி யானையை விரட்ட இரண்டு கும்கி யானைகள் இருக்கும் நிலையில் கருப்பன் யானை இரியபுரம் கிராமத்தில் இருந்து தற்போது திகனாரை கிராமத்திக்கு சென்றுள்ளதால் விவசாயிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. எனவே வனத்துறை விரைவில் கும்கி யானை உதவியுடன் கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கேரிக்கை வைத்துள்ளனர்.

    • போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
    • கோரிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

    ஈரோடு:

    கிராம பஞ்சாயத்து டேங்க் ஆபரேட்டர்கள் மற்றும் துப்புரவு பணியாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர்.

    இதையடுத்து ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு இன்று கிராம பஞ்சாயத்து டேங்க் ஆபரேட்டர்கள் மற்றும் துப்புரவு பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் சண்முகம் தலைமையில் 80-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் கிராம பஞ்சாயத்து பேங்க் ஆபரேட்டர்கள் திரண்டு வந்தனர்.

    அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து அவர்கள் தூய்மை பணியாளர்கள், கிராம பஞ்சாயத்து டேங்க் ஆபரேட்டர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு அரசு அறிவித்த கொரோனா சிறப்பு ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்கள் முழு நேர பணி செய்வதால் பணி வரன்முறை செய்து மாதம் குறைந்தபட்சம் ரூ.18,000 சம்பளம், இதரப்படிகள் முறையாக வழங்க வேண்டும்.

    கிராம பஞ்சாயத்து டேங்க் ஆபரேட்டர்களுக்கு ஜல் ஜீவன் திட்டத்தின் படி வேலைப்பளு கூடியதால் பணி வரன்முறை செய்து மாதம் ரூ.18 ஆயிரம் சம்பளம், இதரப்படிகள் வழங்க வேண்டும். தூய்மை காவலர்களுக்கு மாதம் 10 ஆயிரம் சம்பளம், வருகை பதிவேடும், குழு காப்பீடும் செய்து குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணி செய்து ஓய்வுபெற்ற, ஓய்வு பெறுகின்ற கிராம பஞ்சாயத்து டேங்க் ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்களுக்கு குறைந்த பட்சம் பணிக்கொடையும் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகள் வலிறுத்தி போராட்டம் நடத்தினர்.

    இதையடுத்து போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். உங்கள் கோரிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர்.

    இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • கதவனை மின் உற்பத்தி நிலையங்களில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.
    • கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    அம்மாபேட்டை:

    காவிரியில் வெள்ளப்பெருக்கு அதிகமானதால் மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வெளியேற்றப்ப ட்டது.இதனால் மேட்டூரை அடுத்து செக்கானூர், நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி, ஊராட்சி கோட்டை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவனை மின் நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

    தற்போது காவிரியில் தண்ணீர் வரத்து குறைந்ததால் மேட்டூர் அணையில் இருந்து சுமார் 30 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றபடுகிறது. இதனால் நெரிஞ்சிப்பேட்டை கோனேரிப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள கதவனை மின் உற்பத்தி நிலையங்களில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.

    இதேபோல் கடந்த 16-ந் தேதி அணை முழு கொள்ளளவை எட்டியதால் காவிரி ஆற்றில் அணையிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டது. இதனால், கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இதையொட்டி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நெரிஞ்சிப்பேட்டைக்கும், சேலம் மாவட்டம், பூலாம்பட்டிக்கும் இடையே காவிரி ஆற்றில் நடைபெற்று வந்த பயணிகள் படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் பொது மக்கள் 8 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வரவேண்டிய நிலை இருந்தது.

    இந்த நிலையில் தற்போது மேட்டூர் அணையில் இருந்து ஆற்றில் 30 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்படுகிறது. இதனால் நேற்று பிற்பகல் முதல் நெரிஞ்சிபேட்டை- பூலாம்பட்டிக்கு படகுப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

    நெரிஞ்சிப்பேட்டை கதவணையில் தண்ணீர் தேக்கப்பட்டுள்ளதால் கடல் போல் காட்சியளிக்கிறது. கடந்த 8 நாட்களாக நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிபட்டி கதவணை பாலம் வழியாக 8 கிலோ மீட்டர் சுற்றிச் சென்று வந்த நிலையில் தற்போது படகுப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • இந்த நிலையில் கொடுமுடி அருகே பனப்பாளையம் என்ற இடத்தில் அழுகிய நிலையில் ஆண் உடல் மிதப்பதாக கொடுமுடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • இது குறித்து வழக்கு பதிவு செய்து சதீஷ்குமார் என்கிற சதீஷ் ராஜாவின் சாவுக்கான காரணம் என்ன என போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.

    கொடுமுடி:

    கொடுமுடி அருகே பாசூர் ரெயில்வே கேட் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் என்கிற சதீஷ் ராஜா (48) தொழிலாளி. இவருக்கு திருமணமாகவில்லை. தனதுதாயார் துளசி மணியுடன் வசித்து வந்தார்.

    இவர் கடந்த 20-ந் தேதி இரவில் இருந்து காணவில்லை. இவரை தேடிப்பார்த்த போது பாசூர் ரெயில்வே கேட் அருகில் உள்ள காளிங்கராயன் வாய்க்கால் பாலம் அருகே சதீஷ்குமாரின் மொபட் மட்டும் அனாதையாக நின்று கொண்டு இருந்தது. இதனால் காளிங்கராயன் வாய்க்காலில் விழுந்து இருப்பாரோ என்ற சந்தேகத்தில் இது குறித்து மொடக்குறிச்சி தீயணைப்புத் துறைக்கு அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் தகவல் கொடுத்தனர்.

    உடனடியாக மொடக்குறிச்சி தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் கோமதி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பாசூர் பகுதியில் இருந்து பழனிக்கவுண்டன் பாளையம் வரையில் காளிங்கராயன் வாய்க்காலில் 21-ந்தேதி காலை முதல் மாலை வரை தேடினர்.

    இதேபோல் கொடுமுடி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் தீயணைப்பு துறை வீரர்கள் பழனிக் கவுண்டம்பாளையம் முதல் கொடுமுடி வரை காளிங்கராயன் வாய்க்காலில் தேடியதில் எங்குமே உடல் கிடைக்க வில்லை.

    இந்த நிலையில் கொடுமுடி அருகே பனப்பாளையம் என்ற இடத்தில் அழுகிய நிலையில் ஆண் உடல் மிதப்பதாக கொடுமுடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அந்த உடலை கைப்பற்றி விசாரணை செய்ததனர்.

    விசாரனையில் அது மாயமான சதீஷ்குமார் என்கிற சதீஷ் ராஜாவின் உடல் தான் என தெரிய வந்தது.

    இது குறித்து வழக்கு பதிவு செய்து சதீஷ்குமார் என்கிற சதீஷ் ராஜாவின் சாவுக்கான காரணம் என்ன என போலீசார் விசாரனை செய்து வருகின்றனர். போலீசார் இறந்த சதிஷ் குமாரின் உடலை கொடுமுடி அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோதனை செய்து உறவினரிடம் ஒப்படைத்தனர்.

    • நள்ளிரவில் கோவிலுக்கு வந்தமர்ம நபர்கள் கோவிலுக்குள் நுழைந்து அங்கிருந்த உண்டியலை உடைத்துஅதில் இருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர். மேலும் கோவிலில் வேறு ஏதாவது இருக்கிறதா என்று தேடிப்பார்த்து உள்ளனர்.
    • மேலும் கோவில் வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராக்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு மூலப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற முருகன், மாரியம்மன் கோவில்கள் அருகருகே உள்ளது.இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.கோவில் தினமும் காலை திறக்கப்பட்டுஇரவு 9 மணிக்கு நடை அடைக்கப்படும். அதே போல்நேற்று இரவும் பூசாரி கோவில் நடையை பூட்டிவிட்டு சென்றார்.

    நள்ளிரவில் கோவிலுக்கு வந்தமர்ம நபர்கள் கோவிலுக்குள் நுழைந்து அங்கிருந்த உண்டியலை உடைத்துஅதில் இருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர். மேலும் கோவிலில் வேறு ஏதாவது இருக்கிறதா என்று தேடிப்பார்த்து உள்ளனர்.

    இந்தநிலையில் இன்று காலை பூசாரி வழக்கம் போல் கோவிலை திறக்க வந்த போது 2 கோவில்களின் உண்டியல்கள்உடைக்க ப்பட்டு அதில்இருந்த காணிக்கை திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பூசாரி ஈரோடு தாலுகா போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு டி.எஸ்.பி. ஆனந்தகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் கொள்ளை நடந்த கோவிலுக்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு உண்டியல் மற்றும் கோவிலில் பதிவாகி இருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. முதல் கட்ட விசாரணையில் மாரியம்மன் கோவில் உண்டியலில் ரு. 20 ஆயிரமும், முருகன் கோவில் உண்டியலில் ரு. 5 ஆயிரமும் இருந்தது தெரியவந்தது. மேலும் கோவில் வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராக்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சம்பவத்தன்று வீட்டில் உள்ள குளியல் அறையில் குருநாதன் வழுக்கி விழுந்துள்ளார்.அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி, குரு நாதன் பரிதாபமாக இறந்தார்.
    • இதுகுறித்து, கோபி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    கோபி அருகே உள்ள கூகலூர், மனுவக்காடு பகுதியை சேர்ந்தவர் குருநாதன் (54). இவர், நாகர்பாளையத்தில் உள்ள பி.எஸ்.என்.எல். குடியிருப்பில் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றி வந்துள்ளார்.

    சம்பவத்தன்று வீட்டில் உள்ள குளியல் அறையில் குருநாதன் வழுக்கி விழுந்துள்ளார். இதையடுத்து, அவரை, கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவரது உடல் நிலை மேலும் மோசமானதால் பெருந்துறை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    ஆனால், சிகிச்சை பலனின்றி, குரு நாதன் பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து, கோபி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×