search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "demanding drinking water"

    • காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இதனால் ஒரு மணி நேரத்துக்கு பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிறுவலூர் அருகே எலந்தகாடு என்ற கிராமம் உள்ளது. இங்கு ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் வசதி செய்து தருவதற்காக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது.

    இந்நிலையில் குடிநீர் குழாய்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைந்து விட்டது. இதனால் இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்ய முடியவில்லை.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் சிறுவலூர் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். ஆனாலும் இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பெண்கள் காலி குடங்களுடன் ஒன்று திரண்டு திடீரென சிறுவலூர்-கவுந்தபாடி ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது உங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனையேற்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர். இதனால் ஒரு மணி நேரத்துக்கு பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.

    • கல்லாங்காடுபாளையம் பகுதியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் இன்று சாலை மறியல் செய்தனர்.
    • இதனால் கோபி-கோவை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டு பகுதியான கல்லாங்காடு பாளையம் பகுதியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் இன்று சாலை மறியல் செய்தனர்.

    இது குறித்து அப்பகுதி பொது மக்களிடம் கேட்டபோது கடந்த 20 நாட்களுக்கு மேலாக எங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யவில்லை. அப்படியே தண்ணீர் வந்தால் மிகவும் குறைந்த அளவே வருகிறது.

    பலமுறை அதிகாரி களிடம் முறை யிட்டும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அதனால் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளோம் என்று கூறினர்.

    சாலை மறியல் பற்றி தெரிந்ததும் சம்பவ இடத்திற்கு நம்பியூர் இன்ஸ்பெக்டர் நிர்மலா மற்றும் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் தீபா தமிழ்செல்வன் ஆகியோர் விரைந்து வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    அதில் இன்று மதியத்திற்குள் குடிநீர் வினியோகம் சரி செய்து வழங்கப்படும் என உறுதி கூறியதன் பெயரில் அரை மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சாலை மறியல் விலக்கி கொள்ளப்பட்டு கலைந்து சென்றனர்.

    இதனால் கோபி-கோவை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • பெண்கள் இன்று காலை காலிகுடங்களுடன் புதுக்கரை புதூர் என்ற பகுதியில் திரண்டனர்.
    • ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் செய்தனர்.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள நஞ்சை கோபி செட்டிபாளையம் என்ற ஊரில் பவானி ஆற்றின் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் சரிவர செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் இன்று காலை காலிகுடங்களுடன் புதுக்கரை புதூர் என்ற பகுதியில் திரண்டனர்.

    பின்னர் அவர்கள் திடீரென அந்தியூர்-கோபி செட்டிபாளையம் மெயின் ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் செய்தனர்.

    இதுப்பற்றி தெரியவந்ததும் கோபிசெட்டி பாளையம் இன்ஸ்பெக்டர் அ.சண்முகவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.

    • சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    • நடந்து சென்று தண்ணீர் எடுத்து வருகிறோம்.

    குனியமுத்தூர்

    கோவை மாநகராட்சி 87-வது வார்டுக்கு உட்பட்ட குனியமுத்துரை அடுத்த சுண்ணாம்பு காளவாய் பகுதியில் 30 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    மேலும் நிலத்தடி நீர் வினியோகமும் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனால் வேதனை அடைந்த பொதுமக்கள் இன்று காலை சுண்ணாம்பு காளவாய் மெயின் ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

    தகவல் அறிந்த போலீஸ் உதவி கமிஷனர் ரகுபதிராஜா மற்றும் குனியமுத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொதுமக்கள் கூறும்போது, வேலைக்கு செல்ல முடியாமல் தண்ணீரைத் தேடிய தினமும் அலைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. குடத்தை எடுத்துக் கொண்டு 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வருகிறோம்.

    இன்று தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் நாங்கள் இந்த இடத்தை விட்டு செல்ல மாட்டோம் என்றனர். அப்போது சம்பவ இடத்துக்கு மாநகராட்சி அதிகாரி வந்தார். அவரிடம் மக்கள் நிலைமையை எடுத்துக் கூறினர்.

    அவர் இன்று மதியத்திற்கு மேல் தண்ணீர் விடுவதாக அவர் வாக்குறுதி கொடத்தார்.இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பாலக்காடு ரோட்டில் ஏற்பட்ட இந்த திடீர் சாலை மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • கடந்த 3 மாதங்களாக ஆற்று குடிநீர் வராததால் பொதுமக்கள் அக்கம் பக்கத்தில் உள்ள கிணறுகளிலும், குடிநீர் குழாய்களிலும் வரும் தண்ணீரை பிடித்து பயன்படுத்தி வந்துள்ளனர்.
    • ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கா ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை 8 மணி அளவில் சித்தார்- பூனாச்சி செல்லும் வழியில் செம்படாபாளையம் கரலாமணி என்ற இடத்தில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்க ளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் குறிச்சி ஊராட்சி செம்படாபாளையம் அடுத்துள்ள கரலாமணியில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    அப்பகுதியில் கடந்த 3 மாதங்களாக ஆற்று குடிநீர் வராததால் பொதுமக்கள் அக்கம் பக்கத்தில் உள்ள கிணறுகளிலும், குடிநீர் குழாய்களிலும் வரும் தண்ணீரை பிடித்து பயன்படுத்தி வந்துள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் குறிச்சி ஊராட்சி நிர்வாகத்திடமும் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் புகார் கொடுத்தாக கூறப்படுகிறது.

    ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கா ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை 8 மணி அளவில் சித்தார்- பூனாச்சி செல்லும் வழியில் செம்படாபாளையம் கரலாமணி என்ற இடத்தில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்க ளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் சம்பவத்திற்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×