குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

கல்லாங்காடுபாளையம் பகுதியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் இன்று சாலை மறியல் செய்தனர்.இதனால் கோபி-கோவை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சாலை மறியல் செய்த பொதுமக்கள்.
சாலை மறியல் செய்த பொதுமக்கள்.
Published on

நம்பியூர்:

ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டு பகுதியான கல்லாங்காடு பாளையம் பகுதியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் இன்று சாலை மறியல் செய்தனர்.

இது குறித்து அப்பகுதி பொது மக்களிடம் கேட்டபோது கடந்த 20 நாட்களுக்கு மேலாக எங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யவில்லை. அப்படியே தண்ணீர் வந்தால் மிகவும் குறைந்த அளவே வருகிறது.

பலமுறை அதிகாரி களிடம் முறை யிட்டும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அதனால் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளோம் என்று கூறினர்.

சாலை மறியல் பற்றி தெரிந்ததும் சம்பவ இடத்திற்கு நம்பியூர் இன்ஸ்பெக்டர் நிர்மலா மற்றும் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் தீபா தமிழ்செல்வன் ஆகியோர் விரைந்து வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

அதில் இன்று மதியத்திற்குள் குடிநீர் வினியோகம் சரி செய்து வழங்கப்படும் என உறுதி கூறியதன் பெயரில் அரை மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சாலை மறியல் விலக்கி கொள்ளப்பட்டு கலைந்து சென்றனர்.

இதனால் கோபி-கோவை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com