என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
  X

  குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
  • நடந்து சென்று தண்ணீர் எடுத்து வருகிறோம்.

  குனியமுத்தூர்

  கோவை மாநகராட்சி 87-வது வார்டுக்கு உட்பட்ட குனியமுத்துரை அடுத்த சுண்ணாம்பு காளவாய் பகுதியில் 30 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

  மேலும் நிலத்தடி நீர் வினியோகமும் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனால் வேதனை அடைந்த பொதுமக்கள் இன்று காலை சுண்ணாம்பு காளவாய் மெயின் ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

  தகவல் அறிந்த போலீஸ் உதவி கமிஷனர் ரகுபதிராஜா மற்றும் குனியமுத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

  அப்போது பொதுமக்கள் கூறும்போது, வேலைக்கு செல்ல முடியாமல் தண்ணீரைத் தேடிய தினமும் அலைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. குடத்தை எடுத்துக் கொண்டு 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வருகிறோம்.

  இன்று தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் நாங்கள் இந்த இடத்தை விட்டு செல்ல மாட்டோம் என்றனர். அப்போது சம்பவ இடத்துக்கு மாநகராட்சி அதிகாரி வந்தார். அவரிடம் மக்கள் நிலைமையை எடுத்துக் கூறினர்.

  அவர் இன்று மதியத்திற்கு மேல் தண்ணீர் விடுவதாக அவர் வாக்குறுதி கொடத்தார்.இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பாலக்காடு ரோட்டில் ஏற்பட்ட இந்த திடீர் சாலை மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

  Next Story
  ×