என் மலர்tooltip icon

    ஈரோடு

    • சம்பவத்தன்று வர்ஷினி ஆதார் கார்டு எடுத்து கொண்டு வருவதாக சொல்லி கொண்டு சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
    • இதனையடுத்து காணாமல் போன தனது மகளை கண்டுப்பிடித்து தருமாறு தாய் ஜமுனாராணி கொடுமுடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஏமாகண்டனூர் சேக்கன்துறை பகுதியை சேர்ந்தவர் தர்மேந்திரன். இவரது மகள் வர்ஷினி (வயது 19). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இந்நிலையில் வர்ஷி னிக்கு காரைக்குடியை சேர்ந்த ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு வந்த நிலையில் பெற்றோர்கள் கண்டித்து உள்ளார்கள். சம்பவத்தன்று வர்ஷினி ஆதார் கார்டு எடுத்து கொண்டு வருவதாக சொல்லி கொண்டு சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    அவருக்கு போன் செய்த போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என வந்துள்ளது. உடனே பெற்றோர் அக்கம் பக்கம், உறவினர்கள் வீடு என பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை.

    இதனையடுத்து காணாமல் போன தனது மகளை கண்டுப்பிடித்து தருமாறு தாய் ஜமுனாராணி கொடுமுடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வருகிறார்கள்.

    • மாலிக் சலீம் கட்டிடத்தின் 2-வது மாடியில் கட்டுமான பணி செய்து கொண்டிரு ந்தபோது எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்தார்.
    • இதில் பலத்த காயம் அடைந்த மாலிக் சலீமை சக தொழிலாளர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    ஈரோடு:

    பீகார் மாநிலத்தை சேர்ந்த அப்துல்லா மகன் மாலிக் சலீம் (24). கட்டிட தொழிலாளி. இவர் ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் வணிக வளாக கட்டிடப் பணியில் ஒப்பந்த முறையில் தொழிலாளராக பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்த ன்று வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்த மாலிக் சலீம் கட்டிடத்தின் 2-வது மாடியில் கட்டுமான பணி செய்து கொண்டிரு ந்தபோது எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்தார்.

    இதில் பலத்த காயம் அடைந்த மாலிக் சலீமை சக தொழிலாளர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாலிக் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் பிரேத பரிசோதனை முடிந்து மாலிக்கின் உடல் பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அங்கிருந்து விமானம் மூலம் அவர்கள் சொந்த மாநிலமான பீகாருக்கு எடுத்து செல்லப்பட்டது. இறந்து போன மாலிக் சலீமிற்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

    • காங்கேயம் பகுதியில் சுப்பிரமணியம் ஆட்டு வியாபாரத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தார்.
    • அவ்வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் சுப்பிரமணியமிடம் விஜயமங்கலத்திற்கு செல்லும் வழியை கேட்டுள்ளனர்.

    சென்னிமலை:

    சென்னிமலையிலிருந்து ஊத்துக்குளி செல்லும் வழியில் உள்ளது தோப்புப்பாளையம். இப்பகுதியில் வசிப்பவர் சுப்பிரமணியம் (57 ). இவர் ஆட்டு வியாபாரம் செய்து வருகிறார்.

    இவர் நேற்று காங்கேயம் பகுதியில் ஆட்டு வியாபாரத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது தோப்பு ப்பாளையம் அருகில் உள்ள மலைக்கணுவாய் பகுதியில் ரோட்டில் தனியே வந்த பொழுது அவ்வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் சுப்பிரமணியமிடம் விஜயமங்கலத்திற்கு செல்லும் வழியை கேட்டுள்ளனர்.

    அவர்களுக்கு சுப்பிரமணியம் வழி சொன்ன பிறகு மொபட்டில் சென்றவரை அந்த நபர்கள் இருவரும் தடுத்து ஒருவர் செல்போனை பறித்து கொண்டார்.

    மற்றொரு நபர் கத்தியை காட்டி இவரை மிரட்டி சட்டை பையில் இருந்த ரூ.10 ஆயிரம் பணத்தை பறித்து சென்றார்.கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் இரு வரும் பைக்கில் வேகமாக சென்று விட்டனர்.

    இதனையடுத்து இந்த வழிப்பறி சம்பவம் குறித்து சுப்பிரமணியம் சென்னிமலை போலீசில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை செய்து, வழிப்பறி செய்த நபர்களை தேடி வருகின்றனர்.

    • பவானியில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.
    • பவானி கூடுதுறையில் விடுமுறை தினமான ஞாயிறு மற்றும் பவுர்ணமி யை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் புனித நீராடி பரிகாரங்கள் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    பவானி:

    பவானி கூடுதுறையில் விடுமுறை தினமான ஞாயிறு மற்றும் பவுர்ணமி யை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் புனித நீராடி பரிகாரங்கள் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    பவானியில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.

    இந்த கோவிலின் பின் பகுதியில் உள்ள இரட்டை விநாயகர் சன்னதி படி த்துறை பகுதியில் காவிரி, பவானி, கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமமாக உள்ளது. மேலும் தென்னகத்தின் காசி என்றும் சிறந்த பரிகார தலம் எனவும் பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வரும் இந்த கோவிலில் உள்ளூர், வெளியூர் வெளி மாநில பக்தர்கள் வந்து கூடுதுறை காவிரி ஆற்றில் புனித நீராடி தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம், எள்ளும் தண்ணீரில் விடுதல், பிண்டம் விடுதல், திருமண தடை தோஷம் நீக்குதல் உட்பட பல்வேறு பரிகார பூஜைகள் செய்து செல்வது வழக்கம்.

    இதனால் விடுமுறை நாட்கள், அமாவாசை, பவுர்ணமி மற்றும் விஷேச நட்களில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காண ப்படும்.

    இந்த நிலையில் விடுமுறை தினமான இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏராளமான பக்தர்கள் கூடுதுறைக்கு வந்திருந்தனர். மேலும் இன்று பவுர்ணமி தினமாக உள்ளதால் பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் பலர் வந்தனர்.

    இதையொட்டி அதிகாலை முதல் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டு மின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் தங்கள் குடுமுபத்துடன் பவானி கூடுதுறைக்கு வந்திருந்தனர். அவர்கள் தொடர்ந்து காவிரி ஆற்றில் புனித நீராடி திதி, தர்ப்பணம் மற்றும் பல்வேறு வகையான பரிகார பூஜைகள் செய்து முன்னோரை வழிபட்டனர்

    மேலும் பக்தர்கள் பலர் ஆற்றில் புனித நீராடி சங்கமேஸ்வரரை தரிசனம் செய்தனர்.

    இதனால் கூடுதுறை பகுதியில் பல்வேறு இடங்க ளிலும் இன்று அதி காலை முதலே பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

    இதே போல் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள கொடிவேரி அணைக்கு விடுமுறை தினமான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.

    அவர்கள் அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் பலர் குடும்பத்துடன் வந்து குளித்து விட்டு தங்கள் கொண்டு வந்த உணவு வகைகளை அங்கே அமர்ந்து சாப்பிட்டனர்.

    • குப்பை கிடங்கில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு லேசான புகை வந்து கொண்டிருந்தது.
    • இந்நிலையில் நேற்று இரவு புகை அதிகமாக பரவி குப்பை கிடங்கில் தீ பற்றி எரிய தொடங்கியது.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மொடக்குறிச்சி அருகே உள்ள தூரபாளையத்தில் உள்ள காலி இடத்தில் கொட்டி உள்ளனர்.

    இங்கு குப்பை கிடங்கில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு லேசான புகை வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று இரவு புகை அதிகமாக பரவி குப்பை கிடங்கில் தீ பற்றி எரிய தொடங்கியது. இதனால் புகை மூட்டம் ஏற்பட்டு சுற்றுவட்டார குடியிருப்புகளில் புகை மூட்டம் அதிகரித்தது.

    இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவயிடத்திற்கு சென்ற தீயணைப்பு துறை வீரர்கள் தண்ணீரை பீய்சி அடித்து குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ, புகை மூட்டத்தை சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி அணைத்தனர்.

    • பி.மேட்டுப்பாளையம் கவுந்தப்பாடி- ஆப்பக்கூடல் மெயின் ரோட்டில் உள்ள சின்ன மாரியம்மன் கோவில் எதிரில் உண்ணா விரப் போராட்டம் நடை பெற்றது.
    • இதில் கலந்து கொண்ட சவரத் தொழிலாளர்கள் மொட்டை அடித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தார்கள்.

    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள பி. மேட்டுப்பாளையம் பகுதியில் 100 ஆண்டுகளுக்கு மேல் பெரிய மாரியம்மன் கோவில் இருந்து வருகிறது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் 3-வது வாரத்தில் பொங்கல் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு வருகிற 13-ந் தேதி பொங்கல் திருவிழா நடைபெறுகிறது. இக்கோவிலில் பி. மேட்டுப்பாளையம் பகுதி முடி திருத்தும் தொழிலாளர்கள் கோவில் திருவிழாவின் போது முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்களுக்கு மொட்டை அடித்து வரு கிறார்கள்.

    இந்த ஆண்டு பொங்கல் விழாவில் இந்து அறநிலை யத்துறை அதிகாரிகள் முடி எடுக்க டெண்டர் விட்டு ஏலம் நடத்தினார்கள். இதில் வெளியூைர சேர்நத முடி திருத்தும் தொழிலாளர்கள் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்கு முடி காணிக்கை செலுத்தும் டென்டரை எடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு உள்ளூர் சவர தொழி லாளர்கள் எதிர்ப்பு தெரி வித்தனர்.

    இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த உள்ளூர் சவர தொழிலாளர்கள் சார்பில் இன்று காலை பி.மேட்டுப்பாளையம் கவுந்தப்பாடி- ஆப்பக்கூடல் மெயின் ரோட்டில் உள்ள சின்ன மாரியம்மன் கோவில் எதிரில் உண்ணா விரப் போராட்டம் நடை பெற்றது.

    இதில் சங்கத் தலைவர் செல்வம் தலைமையில் சவரத் தொழிலாளர் குடும்பத்தை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என பலர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

    இதில் கலந்து கொண்ட சவரத் தொழிலாளர்கள் மொட்டை அடித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தார்கள்.

    இது குறித்து அவர்கள் கூறும் போது, நாங்கள் பாரம்பரியமாக நீண்ட நாட்களாக மொட்டை அடிக்கும் தொழில் செய்து வருகிறோம். நாங்கள் இந்த கோவிலில் ஆண்டு தோறும் மொட்டை அடித்து வருகிறோம். அந்த உரிமையை எங்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறினர்.

    இதையடுத்து அந்த பகுதியில் கவுந்தப்பாடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • லட்சுமணசாமி மதுவிற்கு அடிமையாகி வயிற்று வலி தாங்க முடியாமல் இருந்த காரணத்தினால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள பாசூர் செங்கோடம் பாளையத்தை சேர்ந்த லட்சுமணசாமி (49). கூலி தொழிலாளி.

    இவரது மனைவி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்து விட்டதால் மதுவுக்கு அடிமையாகி இவரது மகன் கமலக்கண்ணன் உடன் தங்கி இருந்து வருகிறார்.

    உடலை கமலக்கண்ணன் தனது மாமியார் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்று விட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த லட்சுமணசாமி மதுவிற்கு அடிமையாகி வயிற்று வலி தாங்க முடியாமல் இருந்த காரணத்தினால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மலையம்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் அடிப்படையில் போலீசார் நேரில் சென்று உடலை கைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100.84 அடியாக உள்ளது.
    • அணைக்கு வினாடிக்கு 423 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் கொள்ளளவு 105 அடி ஆகும். அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 -ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது.

    இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100.84 அடியாக உள்ளது.அணைக்கு வினாடிக்கு 423 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    பாசனத்திற்காக கீழ் பவானி வாய்க்காலில் 2,300 கன அடி தண்ணீரும், காலிங்கராயன் பாசனத்தி–ற்கு 300 கன அடி தண்ணீரும் என மொத்தம் 2,600 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

    • ஈரோடு மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 733.44 மி.மீட்டராகும். நடப்பாண்டு கடந்த மாதம் 30-ந் தேதி வரை 682.08 மி.மீட்டர் என 92 சதவீத மழை பதிவாகி உள்ளது.
    • பவானிசாகர் அணையிலும் 100.90 மி.மீட்டர் அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 733.44 மி.மீட்டராகும்.

    நடப்பாண்டு கடந்த மாதம் 30-ந் தேதி வரை 682.08 மி.மீட்டர் என 92 சதவீத மழை பதிவாகி உள்ளது. பவானிசாகர் அணையிலும் 100.90 மி.மீட்டர் அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் ஆகஸ்ட் வரை 47,148 ஹெக்டேர் வேளாண் பயிர்கள், 41,676 ெஹக்டேர் பரப்பில் தோட்டக்கலை பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு ள்ளன.

    நடப்பாண்டு தேவைக்காக வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் வினி யோகம் செய்வதற்காக நெல் விதை 175 டன், சிறு தானியங்கள் 44 டன், பயறு வகை விதைகள் 18 டன், எண்ணெய் வித்துக்கள் 56 டன் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.

    ரசாயன உரங்களான யூரியா 2,996 டன், டி.ஏ.பி. –2,667 டன், பொட்டாஷ் 2,319 டன், காம்ப்ளக்ஸ்  10,196 டன் இருப்பில் உள்ளது. நடப்பு பருவத்து க்கு தேவையான இடு பொருட்கள் போதுமான அளவு இருப்பு வைக்கப்ப ட்டுள்ளது.

    தடப்பள்ளி, அரக்கன் கோட்டை ஆயக்கட்டு பாசன பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட நெல் அறுவடை நடந்து வருகிறது. அங்கு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் 32 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

    நடப்பாண்டு அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 44 பஞ்சாயத்துகளில் தரிசு நிலங்கள் கண்டறியப்பட்டு சாகுபடி மேற்கொ ள்ளப்பட்டு உணவு தானிய உற்பத்தி அதிகரிக்க வழி செய்யப்பட்டுள்ளது என வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி இன்று பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர், மகாவிஷ்ணு கோவில்களில் அதிகாலை சிறப்பு அபிேஷகம் மற்றும் வழிபாடு, பஜனைகள் நடந்தது.
    • பெருமாள் மலை பகுதியில் மலை மேல் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி மங்களகிரி பெருமாளுக்கு இன்று அதிகாலை பால், தயிர், இளநீர் உள்பட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    ஈரோடு:

    புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி இன்று பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர், மகாவிஷ்ணு கோவில்களில் அதிகாலை சிறப்பு அபிேஷகம் மற்றும் வழிபாடு, பஜனைகள் நடந்தது.

    இதையொட்டி சென்னி மலை பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் இன்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    சென்னிமலை அடு த்துள்ள மேலப்பாளையம் ஆதிநாராயணப்பெருமாள் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அல ங்காரம், தீபாராதனை பூஜைகள் நடந்தன. இதில் ஆயிரக்கணக்கான பக்த ர்கள் வரிசையில் நின்று பெருமாளை தரிசித்தனர்.

    ஈரோடு கோட்டை பெருமாளுக்கு புரட்டாசி சனிக்கிழமையை யொட்டி இன்று அதிகாலை சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டு இருந்தது. இதை யொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்தி ருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பவானி அருகே உள்ள பெருமாள் மலை பகுதியில் மலை மேல் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி மங்களகிரி பெருமாளுக்கு இன்று அதிகாலை பால், தயிர், இளநீர் உள்பட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மங்களகிரி பெருமாளுக்கு ராஜ அலங்காரம் செய்ய ப்பட்டு மகா தீபாரதனை நடை பெற்றது.

    இதையொட்டி இன்று காலை பவானி, ஈரோடு, சித்தோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர். மலை மீது பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரி சனம் செய்தனர்.

    அதேபோல் சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள ஆதி கேசவப் பெருமாள் சன்னதியில் உள்ள உற்சவர் மற்றும் மூலவருக்கு இன்று சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடை பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கோபி செட்டிபாளையம் அருகே உள்ள மூல வாய்க்கால் மலை ஸ்ரீதேவி பூதேவி கரி வரதராஜ பெருமாள் கோவிலில் பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் மற்றும் வாசனை திரவி யங்கள் அடங்கிய அபி ஷேகங்கள் நடைபெற்றன.

    அதை தொடர்ந்து சுவாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடை பெற்றன. அதை தொடர்ந்து மலையை சுற்றி சிறிய தேர் மூலம் சுவாமி திருவீதி உலா வந்தது.

    மேலும் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள பாரியூர் ஆதிநாராயண பெருமாள் கோவில், கோபி வரதராஜ பெருமாள் கோவில், மேட்டு வளவு பெருமாள் கோயில், மொடச்சூர் பெருமாள் கோவில்,கூகலூர் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடை பெற்றன.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டு சென்றனர்.

    மேலும் அந்தியூர் பேட்டை பெருமாள் கோவிலில் இன்று பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்ய ப்பட்டு திருப்பதி அலங்கா ரம் செய்யப்பட்டு இருந்தது.

    இதே போல் அந்தியூர் அழகுராஜ பெருமாள், தவிட்டு பாளையம் வரத ராஜ பெருமாள், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள வீரநாராயண பெருமாள், பெருந்துறை பிரசன்ன வெங்கட ரமண பெருமாள், சத்தியமங்கலம் கோட்டு வீராம்பாளையம் ெபருமாள், ஈரோடு சத்தி ரோடு கொங்கு பெருமாள் கோவில் உள்பட மாவட்ட த்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் இன்று காலை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் 6, 7-ம் வகுப்புக்கான பாட புத்தகங்கள் ரெயில்வே காலனி பள்ளியில் கொண்டு வந்து இறக்கி வைக்கப்பட்டுள்ளன.
    • இது தவிர 6, 7, 8, 9-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தேவையான 80 பக்க நோட்டுகளும் அனுப்பி வைக்கப்படுகிறது.

    ஈரோடு:

    காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து வரும் 10-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.

    இதையொட்டி மாணவ-மாணவிகளுக்கு 2-ம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி தீவிர படுத்தப்ப ட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் கொல்லம் பாளையம் ெரயில்வே காலனி மேல்நிலைப்ப ள்ளியில் இருந்து 6, 7-ம் வகுப்புக்கான 2-ம் பருவ பாட நூல்களும், 6 முதல் 9-ம் வகுப்பு களுக்கான நோட்டுகளும் அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

    இது குறித்து தமிழ்நாடு பாடநூல் கழக அலுவலர்கள் கூறியதாவது:

    காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பெரும்பாலான பள்ளிகளில் நேற்று முன்தினம் முதல் திறக்கப்பட்டு 2-ம் பருவ தேர்வுக்கான பாடங்கள் தொடங்கியுள்ளன.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு அரசு உதவி பெறும் பள்ளிகள் சுயநிதி பள்ளிகள் என 55 பள்ளிகளுக்கு தேவையான 6, 7-ம் வகுப்புக்கான பாட புத்தகங்கள் ரெயில்வே காலனி பள்ளியில் கொண்டு வந்து இறக்கி வைக்கப்பட்டுள்ளன.

    இந்த பள்ளிகளுக்கு தேவையான அனைத்து பாடப்புத்தகங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது தவிர 6, 7, 8, 9-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தேவையான 80 பக்க நோட்டுகளும் அனுப்பி வைக்கப்படுகிறது. 5 பாட புத்தகங்களுக்கு தேவையான 5 வகையான நோட்டுகளும் அனுப்பி வைக்கப்படுகிறது. இவை இலவசமாக வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு பில்டிங்கில் லிப்ட் கனெக்ஷன்காக வைத்திருந்த கேபிள் வயரை 45 மீட்டர் அளவுக்கு மர்ம நபர்கள் எடுத்து சென்று விட்டனர்.
    • இது தொடர்பாக பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    பெருந்துறையை அடுத்துள்ள பட்டக்காரன் பாளையம் பகுதியில் ஒரு தனியாருக்கு சொந்தமான பால் கம்பெனி இயங்கி வருகிறது.

    இந்த கம்பெனியில் செக்யூரிட்டி பணியாளராக பணிபுரிந்து வருபவர் மாயதேவன். கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு பில்டிங்கில் லிப்ட் கனெக்ஷன்காக வைத்திருந்த கேபிள் வயரை 45 மீட்டர் அளவுக்கு மர்ம நபர்கள் எடுத்து சென்று விட்டனர்.

    இதன் மதிப்பு ரூ.30 ஆயிரம் இருக்கும். மாயதேவன் மற்றும் கம்பெனி ஊழியர்கள் அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தும் கேபிள் வயர் கிடைக்கவில்லை.

    பின்னர் இது தொடர்பாக பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    ×