என் மலர்tooltip icon

    ஈரோடு

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதில் அவரது இடது கை மற்றும் இடது கால் செயலிழந்ததாக கூறப்படுகிறது.
    • இதுகுறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள ஈஞ்சம்பள்ளி பி.கே. வலசு பகுதியை சேர்ந்தவர் காளியம்மாள் (80) . இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

    இதில் அவரது இடது கை மற்றும் இடது கால் செயலிழந்ததாக கூறப்படுகிறது. வயதான காலத்தில் இப்படியாகி விட்டதே என்று அவர் மனவேதனையில் இருந்து வந்தார். இந்த நிலையில் காளிம்மாள் வீட்டில் இருந்த எலி மருந்து (விஷம்) சாப்பிட்டார்.

    இதனை கண்ட அவரது மகன் மகேந்திரன் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த காளியம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விபத்தில் பஸ்சின் முன் பக்க கண்ணாடி உடைந்தது.
    • சற்றும் எதிர்பார்க்காத பஸ் டிரைவர் பஸ்சை பிரேக் போட்டு நிறுத்துவதற்குள் லாரியின் பின்பகுதியில் பஸ் மோதி நின்றது.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கொங்கு கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் இருந்து மாணவ- மாணவிகள் இந்த கலைக் கல்லூரியில் படித்து வருகின்றனர். இதற்காக கல்லூரி நிர்வாகம் சார்பில் பஸ் வசதி செய்யப்பட்டி–ருந்தது.

    தினமும் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பஸ் சென்று மாணவ மாணவிகளை கல்லூரிக்கு ஏற்று சென்று வருகிறது.

    அதன்படி இன்று காலை மொடக்குறிச்சி பகுதியில் உள்ள கல்லூரி மாணவி-மாணவர்களை ஏற்றிக்கொண்டு பஸ் பெருந்துறையில் உள்ள கொங்கு கலை அறிவியல் கல்லூரி நோக்கி வந்து கொண்டிருந்தது.

    பஸ்சில் 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இருந்தனர். பஸ் லக்காபுரம் அருகே உள்ள சாணார் மேடு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது பஸ்சின் முன்பு ஒரு டிம்பல் ஆரி சென்று கொண்டிருந்தது.

    கல்லூரி பஸ் அந்த லாரியை முந்தி செல்ல முயன்ற போது அந்தப் பகுதியில் பள்ளம் இருந்ததால் லாரி டிரைவர் பள்ளத்தில் இறங்காமல் இருப்பதற்காக திடீரென பிரேக் போட்டார்.

    இதை சற்றும் எதிர்பார்க்காத பஸ் டிரைவர் பஸ்சை பிரேக் போட்டு நிறுத்துவதற்குள் லாரியின் பின்பகுதியில் பஸ் மோதி நின்றது. இதில் லாரியின் முன்பக்க கண்ணாடிகள் சுக்கு நூறாக உடைந்தது. இதனால் பஸ்சில் இருந்த மாணவ -மாணவிகள் கூச்ச–லிட்டனர்.

    இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 6 மாணவ, மாணவிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ–மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    இது குறித்து மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இன்ஸ்பெக்டர் தீபா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    உடனடியாக அந்த கல்லூரி சார்பாக மற்றொரு பஸ் வரவழைக்கப்பட்டு மாணவ மாணவிகள் அந்த பஸ்சில் ஏறிச் சென்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • தேசிய அஞ்சல் வாரத்தை ஒட்டி மொடக்குறிச்சியில் பொதுமக்களிடையே அஞ்சலக ஊழியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • மொடக்குறிச்சி தபால் அலுவலகத்தில் தொடங்கி மொடக்குறிச்சி நால் ரோடு, போலீஸ் நிலையம், பேரூராட்சி மற்றும் தபால் அலுவலகம் வழியே வந்து கரியகாளியம்மன் திருமண மண்டபம் அருகே பேரணி நிறைவு பெற்றது.

    மொடக்குறிச்சி:

    தேசிய அஞ்சல் வாரத்தை ஒட்டி மொடக்குறிச்சியில் பொதுமக்களிடையே அஞ்சலக ஊழியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கோட்ட கண்காணிப்பாளர் கருணாகர பிரபு மற்றும் மொடக்குறிச்சி இன்ஸ்பெக்டர் தீபா பேரணியை ெதாடக்கி வைத்தனர்.

    ஒவ்வொரு ஆண்டும் அஞ்சல் துறை சார்பில் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் தேசிய அஞ்சல் துறை வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

    இதனை ஒட்டி மொடக்குறிச்சியில் மொடக்குறிச்சி வட்டாரத்தில் உள்ள அஞ்சலக ஊழியர்கள் தங்களது துறையில் உள்ள சிறுசேமிப்பு, தொடர் வைப்பு கணக்கு, மாதாந்திர வருமான திட்டம், ஒரு வருட கால வைப்பு கணக்கு, இரண்டு வருட கால வைப்பு கணக்கு, முதியோருக்கான சேமிப்பு திட்டம், செல்வமகள் சேமிப்பு கணக்கு, பொன்மகள் பொது வைப்பு நிதி, கிசான் விகாஸ் பத்திரம் தேசிய சேமிப்பு பத்திரம் உள்ளிட்டவைகள் குறித்து பொதுமக்களிடையே பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இந்தப் பேரணி மொடக்குறிச்சி தபால் அலுவலகத்தில் தொடங்கி மொடக்குறிச்சி நால் ரோடு, போலீஸ் நிலையம், பேரூராட்சி மற்றும் தபால் அலுவலகம் வழியே வந்து கரியகாளியம்மன் திருமண மண்டபம் அருகே பேரணி நிறைவு பெற்றது. 

    • இதில் அவருக்கு தலையில் அடிப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
    • இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து மொபட் ஓட்டி வந்த ஸ்ரீகாந்த் குமாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பவானி:

    பவானி அருகே உள்ள சித்தோடு செங்குத்தம் பாளையம் மேற்கு வீதியை சேர்ந்தவர் முருகன் (55). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சாந்தி. இவர்க ளுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    முருகன் பவானி-பெருந்துறை ரோட்டில் சைக்கிளில் ெசனறு கொண்டு இருந்தார். அப்போது அநத வழியாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் குமார் (25) என்பவர் ெமாட்டில் வந்தார். அப்போது மொபட் எதிர்பாராத விதமாக முருகன் ஓட்டி வந்த சைக்கிள் மீது மோதியது.

    இதில் சைக்கிளில் இருந்து முருகன் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் அடிப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சித்தோடு சப்-இன்ஸ்பெக்டர் கனேஸ்வரர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து மொபட் ஓட்டி வந்த ஸ்ரீகாந்த் குமாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தீபாவளிக்கு துணி எடுப்பதற்காக சித்தோடு அடுத்த கங்காபுரம் பகுதிக்கு ேமாடடார் சைக்கிளில் தனது மகனுடன் சென்றார்.
    • இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பவானி:

    பவானி மூன் ரோடு கொங்கு நகர் பகுதியை சேர்ந்தவர் பிரதீப். இவரது மனைவி பிரியா (42). இவர்களது மகன் சஞ்சூதீப் (13). பிரியா சின்ன பெரிச்சி பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி யில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இவர் தீபாவளிக்கு துணி எடுப்பதற்காக சித்தோடு அடுத்த கங்காபுரம் பகுதிக்கு ேமாடடார் சைக்கிளில் தனது மகனுடன் சென்றார்.

    அவர்கள் சித்தோடு செல்லப்பம்பாளையம் பிரிவு ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தாய்-மகன் இருவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.

    அவர்கள் 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு பவானி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சை க்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    அதேபோல் பவானி, ஜம்பை, சின்ன வடமலை பாளையம் ஆலமரத்து வீதியை சேர்ந்தவர் ஆறு முகம் (46). டைலர். இவர் தனது நண்பர் பூவேந்திரன் என்பவருடன் மொபட்டில் பவானி அடுத்த லட்சுமி நகர் பகுதியில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் மொபட் மீது எதிர்பாராவிதமாக மோதியது. இதில் ஆறுமுகம் மற்றும் பூவேந்திரன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு பவானி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வரு கிறார்கள்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையத்தில் அதிகபட்சமாக 97 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
    • தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று காலையும் வழக்கம் போல் மாவட்டம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலையில் திடீரென வானங்களை கருமேகங்கள் சூழ்ந்து இருந்தன.

    மாலை 6 மணிக்கு பிறகு லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் நேரம் செல்ல செல்ல இடியுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது. ஈரோடு மாநகர் பகுதியில் இரவு 7 மணி முதல் தொடர்ந்து மழை பெய்தது. தொடர்ந்து மின்னலுடன் கூடிய சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.

    விடிய, விடிய இந்த சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது. கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை முதல் இரவு வரை விடிய விடிய பலத்த மழை பெய்தது. இடி-மின்னலுடன் பலத்த மழை பொய்ததால் கோபி அருகே உள்ள கீரிப்பள்ளம் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையத்தில் அதிகபட்சமாக 97 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது. இதேபோல் அந்தியூர் அருகே உள்ள வரட்டுபள்ளம் பகுதியில் இரவு முழுவதும் விடிய விடிய இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை முழு கொள்ளளவை நெருங்கி உள்ளது.

    இதேபோல் கொடுமுடி பகுதிகளிலும் விடிய விடிய பலத்த மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இரவு முழுவதும் மழை பெய்ததால் அங்கு குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இதேபோல் நம்பியூரில் நேற்று மாலை 4 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இன்று காலை வரை விடிய விடிய தொடர்ந்து பெய்தது.

    இதேப்போல் நம்பியூர், சத்தியமங்கலம், அம்மாபேட்டை, சென்னிமலை, கொடிவேரி, கவுந்தப்பாடி, பெருந்துறை, பவானிசாகர் என மாவட்டம் முழுவதும் விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை மில்லி மீட்டரில் வருமாறு:-

    கோபி -97, வரட்டு பள்ளம் -91.40, கொடுமுடி -80, எலந்தகுட்டைமேடு - 78.4, மொடக்குறிச்சி-75, நம்பியூர் -62, குண்டேரி பள்ளம் -58.40, சத்தியமங்கலம் -55, அம்மாபேட்டை -55, சென்னிமலை -50, கொடிவேரி -49.20, கவுந்தப்பாடி -40, பெருந்துறை -38, பவானிசாகர் -37.20, ஈரோடு - 25, பவானி - 21.

    • நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
    • இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் கொள்ளளவு 105 அடி ஆகும். அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ந்தேதி அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியது. இதையடுத்து அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 56 நாட்கள் 102 அடியில் நீடித்தது.

    இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வந்தது.

    இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மீண்டும் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு இன்று காலை முதல் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    அணைக்கு நேற்று வினாடிக்கு 558 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 4,169 கன அடியாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 100.85 அடியாக உள்ளது.

    அணையில் இருந்து பாசனத்திற்காக கீழ் பவானி வாய்க்காலில் 2,300 கன அடி தண்ணீரும், காளிங்கராயன் பாசனத்திற்கு 200 கன அடி தண்ணீரும் என மொத்தம் 2,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • சத்தியமங்கலம் அருகே வினோத திருவிழாவில் கோவில் பூசாரியாக 11-ம் வகுப்பு மாணவர் தேர்வு செய்யப்பட்டார்.
    • அடுத்த 8 ஆண்டுகளுக்கு கோவில் பூசாரியாக அந்த மாணவரே இருப்பார் என கூறப்படுகிறது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த அரியப்பம்பாளையம் அருகே புதுகொத்துக்காடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற வீரமாத்தி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு 8 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூசாரி தேர்ந்தெடுக்கும் வினோத திருவிழா நடைபெற்று வருகிறது.

    தற்போது உள்ள பூசாரி தேர்ந்தெடுக்கப்பட்டு 8 ஆண்டுகள் முடிவடைந்ததை தொடர்ந்து புதிய பூசாரியை தேர்ந்தெடுக்க அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் முடிவு செய்தனர்.

    இதையடுத்து பூசாரியை தேர்ந்தெடுக்க சில விதிமுறைகளை வழக்கம்போல் ஊர் பொதுமக்கள் அறிவித்தனர். அதன்படி பூசாரி தேர்ந்தெடுக்கும் நாளில் ஊர் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கோவிலுக்கு வந்து விழாவில் கலந்து கொள்ள வேண்டும். அப்போது பக்தர்கள் யாருக்காவது சாமி வந்தால் அவர் தீச்சட்டியை எடுத்து கோவிலை வலம் வரவேண்டும். தீச்சட்டியை கைகளில் இருந்து கீழே போட்டுவிட்டால் கோவிலுக்கு ரூ.3 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்ற கோவில் கட்டுப்பாடுகளை அறிவித்தனர்.

    இதையடுத்து நேற்று மதியம் 1 மணி அளவில் கோவில் பூசாரியை தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவருக்கு சாமி அருள் வந்துவிட்டது. பிறகு அவர் தீச்சட்டியை எடுத்து கோவிலை சுற்றி வந்து கோவில் முன்பாக கொண்டு வைத்தார்.

    இதைக்கண்ட பொதுமக்கள் வியந்து அந்த 16 வயது மாணவரை பூசாரியாக ஏற்றுக் கொண்டனர். அடுத்த 8 ஆண்டுகளுக்கு கோவில் பூசாரியாக அந்த மாணவரே இருப்பார் என கூறப்படுகிறது.

    • ஈரோடு ஜவுளி சந்தைகளிலும் இன்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகவே இருந்தது.
    • இதனால் முன்னெச்சரிக்கை நடவடி க்கையாக போலீசார் சார்பில் பாதுகாப்பு போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    தீபாவளி பண்டிகை வரும் 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு இன்னும் 15 நாட்களை இருப்பதால் தீபாவளியை கொண்டாட மக்கள் தயாராகி வருகி றார்கள். புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக மக்கள் தீபாவளியை வரவேற்பார்கள்.

    இந்நிலையில் தீபாவளி க்கு துணிமணிகள் வாங்க ஈரோடு கடை வீதிகளில் இன்று வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    குறிப்பாக மணிக்கூண்டு முதல் பன்னீர்செல்வம் பார்க் வரை சாலையின் இருபுறமும் ஏராளமான ஜவுளிக்கடைகள் உள்ளன. இதேப்போல ஈஸ்வரன் கோவில் வீதி, ஆர்.கே.வி. ரோடு வீதிகளில் ஏரா ளமான ஜவுளிக்கடைகள் நகை கடைகள் உள்ளன.

    தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் மக்கள் கடந்த சில நாட்களாக துணிமணிகளை வாங்கி வருகின்றனர். அதிலும் குறிப்பாக இன்று ஞாயிற்று க்கிழமை என்பதால் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே இருந்தது. ஜவுளிக் கடைகளில் மக்கள் போட்டி கொண்டு துணி களை வாங்கி சென்றனர்.

    ஈரோடு ஜவுளி சந்தைகளிலும் இன்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகவே இருந்தது. மற்ற இடங்களை காட்டிலும் இங்கு ஜவுளி விலை குறைவாக இருப்பதால் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

    இதனால் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் முதல் மணிக்கூண்டு வரை கூட்ட நெரிசலால் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக பெண்கள் கூட்டம் அதிக மாகவே காணப்பட்டது. இன்னும் ஒரு வாரத்தில் பட்டாசு விற்பனையும் சூடு வைக்க தொடங்கும் என்பதால் இந்த பகுதிகளில் கூட்டம் மேலும் அதிகரித்து காணப்படும்.

    இதனால் முன்னெச்சரிக்கை நடவடி க்கையாக போலீசார் சார்பில் பாதுகாப்பு போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    காலாண்டு தேர்வு முடிந்து நாளை 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பதால் ஈரோடு பஸ் நிலையம், ெரயில் நிலையங்களில் வழக்கத்தை விட இன்று பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. குறிப்பாக ஈரோடு வழியாக செல்லும் அனைத்து ெரயில்களிலும் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. சொந்த ஊருக்கு சென்ற அனைவரும் மீண்டும் ஈரோடு நோக்கி திரும்பி வருகின்றனர்.

    • பெருந்துறையின் புதிய பஸ் நிலையம் பகுதியில் இருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
    • பெருந்துறை அக்ரஹார வீதியில் உள்ள ஸ்ரீ மடத்தில் பெருமாளுக்கு ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் மாலை சாத்தப்பட்டது.

    பெருந்துறை:

    பெருந்துறை அக்ரஹார வீதியில் உள்ள ஸ்ரீ மடத்தில் பெருமாளுக்கு ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் மாலை சாத்தப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு இன்று அதிகாலை சாத்தப்பட்ட மாலை பெருந்துறை கொண்டு வரப்பட்டது.

    இந்த மாலையை பெருந்துறையின் புதிய பஸ் நிலையம் பகுதியில் இருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இந்த மாலை அக்ரஹார வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் ஸ்ரீ மடத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

    அங்கு அலங்கரிக்கப்பட்ட பெருமாள் விக்ரகத்திற்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த இந்த மாலையை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் பெருமாள் பக்தி பாடல்கள் பஜனையாக பாடப்பட்டது. வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • சரவணக்குமார் நாயக்கன் காடு பகுதியில் சென்று கொண்டு இருந்த போது அந்த வழியாக வந்த ஒரு அரசு பஸ் அவர் மீது எதிர் பாராதவிதமாக மோதியது.
    • இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோபி செட்டிபாைளயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அடுத்த வாய்க்கால் ரோடு பகுதியை சேர்ந்தவர் சீனி வாசன். இவரது மகன் சரவணக்குமார் (வயது 27).

    இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இவர் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டு இருந்தார். சரவணக்குமார் சத்தியமங்கலம் ஈரோடு ரோடு நாயக்கன் காடு பகுதியில் சென்று கொண்டு இருந்த போது அந்த வழியாக வந்த ஒரு அரசு பஸ் அவர் மீது எதிர் பாராதவிதமாக மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோபி செட்டிபாைளயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சை க்காக கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்க ப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாமாக இறந்தார்.

    இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • பவானி பஸ் நிலையத்தில் பிஸ்கட் கடையில் கூல்லிப் பாக்கெட் வைத்து கொண்டு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
    • வருவாய் துறையினர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பிஸ்கட் கடைக்கு பூட்டி சீல் வைத்தனர்.

    பவானி:

    பவானி சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன் மற்றும் போலீசார் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள பிஸ்கட், கூல்ட்ரி ங்க்ஸ் கடைகளில் ஹான்ஸ், பான்பராக், கூல்லிப் போன்ற அரசால் தடை செய்யப்பட்ட புகையி லை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை மேற்கொண்டு ள்ளனர்.

    இந்த சோதனையில் பவானி பஸ் நிலையத்தில் 8 நம்பர் கூல்டிரிங்ஸ், பிஸ்கட் கடையில் முருகேசன் என்பவர் பாக்கெட்டில் கூல்லிப் பாக்கெட் வைத்து கொண்டு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

    தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக இந்த கடைக்கு சீல் வைக்க கோரி பவானி வருவாய் துறைக்கு பவானி போலீசார் கடிதம் அளித்தனர்.

    இதனைத்தொடர்ந்து பவானி தாசில்தார் ரவிச்சந்திரன் உத்தரவுபடி வருவாய் துறை ஆய்வாளர் விஜய கோகுல், நகராட்சி வருவாய் ஆய்வாளர் ரவி, கிராம நிர்வாக அலுவலர் குமார் மற்றும் போலீசார் முன்னிலையில் வருவாய் துறையினர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பிஸ்கட் கடைக்கு பூட்டி சீல் வைத்தனர்.

    ×