என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "and hold an awareness rally"

    • தேசிய அஞ்சல் வாரத்தை ஒட்டி மொடக்குறிச்சியில் பொதுமக்களிடையே அஞ்சலக ஊழியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • மொடக்குறிச்சி தபால் அலுவலகத்தில் தொடங்கி மொடக்குறிச்சி நால் ரோடு, போலீஸ் நிலையம், பேரூராட்சி மற்றும் தபால் அலுவலகம் வழியே வந்து கரியகாளியம்மன் திருமண மண்டபம் அருகே பேரணி நிறைவு பெற்றது.

    மொடக்குறிச்சி:

    தேசிய அஞ்சல் வாரத்தை ஒட்டி மொடக்குறிச்சியில் பொதுமக்களிடையே அஞ்சலக ஊழியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கோட்ட கண்காணிப்பாளர் கருணாகர பிரபு மற்றும் மொடக்குறிச்சி இன்ஸ்பெக்டர் தீபா பேரணியை ெதாடக்கி வைத்தனர்.

    ஒவ்வொரு ஆண்டும் அஞ்சல் துறை சார்பில் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் தேசிய அஞ்சல் துறை வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

    இதனை ஒட்டி மொடக்குறிச்சியில் மொடக்குறிச்சி வட்டாரத்தில் உள்ள அஞ்சலக ஊழியர்கள் தங்களது துறையில் உள்ள சிறுசேமிப்பு, தொடர் வைப்பு கணக்கு, மாதாந்திர வருமான திட்டம், ஒரு வருட கால வைப்பு கணக்கு, இரண்டு வருட கால வைப்பு கணக்கு, முதியோருக்கான சேமிப்பு திட்டம், செல்வமகள் சேமிப்பு கணக்கு, பொன்மகள் பொது வைப்பு நிதி, கிசான் விகாஸ் பத்திரம் தேசிய சேமிப்பு பத்திரம் உள்ளிட்டவைகள் குறித்து பொதுமக்களிடையே பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இந்தப் பேரணி மொடக்குறிச்சி தபால் அலுவலகத்தில் தொடங்கி மொடக்குறிச்சி நால் ரோடு, போலீஸ் நிலையம், பேரூராட்சி மற்றும் தபால் அலுவலகம் வழியே வந்து கரியகாளியம்மன் திருமண மண்டபம் அருகே பேரணி நிறைவு பெற்றது. 

    ×