என் மலர்
ஈரோடு
- வீட்டை விட்டு சென்ற சிறுவர்கள் நீண்ட நேரம் வீட்டுக்கு வராததால் அவர்களது பெற்றோர் மாணவர்களை தேடினர்.
- அப்போது மாணவர்கள் 3 பேரும் குட்டையில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது.
அந்தியூர்:
அந்தியூர் அருகே உள்ள தவுட்டுப்பாளையம் பழனி யப்பா வீதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகன் நந்தகிஷோர் (8). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.
அதே பகுதியை சேர்ந்த பாலுசாமி மகன் சிபினேஷ் (10), வெங்கடேஷ் மகன் ராகவன் (10). இவர்கள் அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தனர். நந்த கிஷோர், ராகவன், சிபினேஷ் ஆகியோர் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள். அவர்கள் 3 பேரும் நண்பர்கள்.
இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் மாணவர்கள் 3 பேரும் அந்தியூர் அடுத்த நாட்ராயன் நகரில் உள்ள தாமரை குட்டை என்ற பகுதிக்கு சைக்கிளில் சென்றனர்.
அந்த பகுதியில் உள்ள குட்டையில் தண்ணீர் நிரம்பி இருந்தது. இதை கண்ட மாணவர்களுக்கு குட்டையில் குளிக்க வேண்டும் என ஆசை ஏற் பட்டது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் குட்டையில் இறங்கி குளித்து கொண்டு இருந்தனர்.
அப்போது அவர்கள் ஆழமான பகுதிக்கு சென்ற தாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.
இந்த நிலையில் வீட்டை விட்டு சென்ற சிறுவர்கள் நீண்ட நேரம் வீட்டுக்கு வராததால் அவர்களது பெற்றோர் மாணவர்களை தேடினர்.
அப்போது தாமரைக்கரை குட்டை பகுதியில் சிறு வர்கள் வந்த சைக்கிள் மட்டும் இருந்தது. இதை கண்ட அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் குட்டையில் மூழ்கி இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.
இது குறித்து அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குட்டையில் இறங்கி தேடினர். அப்போது மாணவர்கள் 3 பேரும் குட்டையில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரின் உடல்களையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
இது குறித்து அந்தியூர் ேபாலீஸ் இன்ஸபெக்டர் மோகன்ராஜ் வழக்கு பதிவு செய்து மாணவர்களின் உடல்களை அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இன்று 3 மாணவர்களின் உடல்களும் பிதே பரி சோதனை செய்யப் பட்டு அவர்களது உற வினர்க ளிடம் ஒப்படை க்கப்பட்டது. உடல்களை பார்த்து அவர்க ளது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
- நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
- இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101 அடியாக உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் கொள்ளளவு 105 அடி ஆகும். அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
நேற்று 4, 169 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 6,521 கன அடியாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101 அடியாக உள்ளது.
பாசனத்திற்காக கீழ் பவானி வாய்க்காலில் 2,100 கன அடி தண்ணீரும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் 2,200 கன அடி வீதம் தண்ணீர் வெளியே ற்றப்பட்டு வருகிறது. காலி ங்கராயன் பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் இன்று முதல் நிறுத்தப்ப ட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் மற்ற அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. 41.75 அடி கொண்ட குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 37.75 அடியாக உள்ளது.
இதேபோல் 33.50 அடி கொண்ட வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.46 அடியாக உள்ளது. 30 அடி கொண்ட பெரும் பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.10 அடியாக உள்ளது.
- உலகம் முழுவதும் அக்டோபர் மாதம் தேசிய அஞ்சல் வாரம் கொண்டாட ப்படுகிறது.
- கடுக்கம்பாளையம் பஞ்சாயத்தில் அலுவலகத்தில் ஆதார் சிறப்பு முகாம் வரும் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நடக்கிறது.
ஈரோடு:
உலகம் முழுவதும் அக்டோபர் மாதம் தேசிய அஞ்சல் வாரம் கொண்டாட ப்படுகிறது. அதற்காக, ஒவ்வொரு தினமும், குறிப்பிட்ட சேவையை ஒதுக்கி கொண்டாடுகின்றனர்.
இது குறித்து ஈரோடு முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
முதல் நாளான கடந்த 9 -ந் தேதி உலக அஞ்சல் தினம் கடைபிடிக்கப்பட்டது. நேற்று வலுவூட்டல் தினமும், இன்று தபால் தலை தினமும், நாளை தபால் தினமும், 13-ந் தேதி சாமானியர் நல்வாழ்வு தினமும் கடைபிடி க்கப்படுகிறது.
நேற்று அனைத்து அஞ்சலகங்களிலும் சிறப்பு முகாம் நடந்தது. மொட க்குறிச்சி அலுவலகத்தில் அஞ்சல் கண்காணிப்பாளர் கருணாகரபாபு தலைமையில் பேரணி நடந்தது.
இன்று தபால் தலை சேகரிப்பு கண்காட்சி, ஈரோடு கோட்ட அலுவலகத்தில் நடக்கிறது. பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். பள்ளி மாணவ, மாணவிகளிடம் தபால் தலை சேகரிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக வினாடி, வினா நிகழ்ச்சி நடைபெறும்.
இதில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ் வழங்கப்படும். விருப்பம் உள்ள மாணவ, மாணவிகள் தபால் தலை சேகரிப்பு கணக்குகளை தொடங்கலாம்.
இவ்வாரத்தில், மூத்த குடிமக்கள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் தபால் நிலையங்கள், தபால்காரர்களிடம் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் கணக்குகளை தொடங்கலாம்.
கடுக்கம்பாளையம் பஞ்சாயத்தில் அலுவலகத்தில் ஆதார் சிறப்பு முகாம் வரும் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நடக்கிறது. பெரு ந்துறை கருக்கம்பாளையம் சமுதாய கூடத்தில் நாளை முதல் வரும் 13-ந் தேதி வரை ஆதார் சிறப்பு முகாம் நடக்க உள்ளது.
தாமரைபாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் வரும் 13-ந் தேதி முதல் 15 -ந் தேதி வரை ஆதார் சிறப்பு முகாம் நடக்கிறது. கோபிசெட்டிபாளையம் களிங்கியத்தில் அஞ்சல் அலுவலர்கள் குடியிருப்பு பகுதியில் வரும் நாளை முதல் வரும் 14-ந் தேதி வரை ஆதார் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்ப ட்டுள்ளது.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- சென்னிமலை அருகே சாம்பமேடு புரவியாத்தாள் கோவிலின் அருகில் இருந்த முள் செடிகளை அப்பகுதியில் உள்ளவர்கள் ஜே.சி.பி எந்திரம் மூலம் அகற்றி கொண்டிருந்தனர்.
- அப்போது அங்கு சுத்தம் செய்த இடத்தில் குழி ஒன்று இருந்ததை கண்டுள்ளனர்.
சென்னிமலை:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே பாலதொழுவு ஊராட்சிக்கு உட்பட்டது வெங்கமேடு. இங்குள்ள சாம்பமேடு என்ற இடத்தில் புரவியாத்தாள் கோவில் உள்ளது.
இந்த கோவிலின் அருகில் இருந்த முள் செடிகளை அப்பகுதியில் உள்ளவர்கள் ஜே.சி.பி எந்திரம் மூலம் அகற்றி கொண்டிருந்தனர். அப்போது அங்கு சுத்தம் செய்த இடத்தில் குழி ஒன்று இருந்ததை கண்டுள்ளனர். பின்னர் அந்த குழிக்குள் பார்த்தபோது சுமார் 6 அடி அகலத்தில் அந்த குழி இருந்துள்ளது.
அதாவது பானை வடிவத்தில் குழியின் மேல் பகுதி அகலம் குறைவாகவும், உள்பகுதி அகலமாகவும் இருந்துள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் ஊருக்கு அருகில் உள்ள கொடுமணல் பகுதியில் பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு அவை ஆவணப்படுத்தப்பட்டு ள்ளது. அதேபோல் எங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட நஞ்சுண்டாபுரம் பகுதியிலும் பாண்டியர்கள் வாழ்ந்ததாக கூறப்படுவது உண்டு.
அதன்படி சாம்பமேடு பகுதியிலும் பழங்கால மக்கள் வாழ்ந்திருக்கலாம். அவர்கள் நிலத்தடியில் எதையாவது சேமித்து வைப்பதற்காக பெரிய அளவிலான பானையை புதைத்து வைத்திருக்கலாம்.
நாளடைவில் அந்த பானை உடைந்து குழி மட்டும் இருந்திருக்கலாம் என்றனர். இந்த அதிசய குழி பற்றிய தகவல் கிடைத்ததும் பாலதொழுவு ஊராட்சி துணைத்தலைவர் சத்தியபிரியா சுப்பிரமணி மற்றும் அப்பகுதி பொது–மக்கள் ஆர்வத்துடன் அந்த குழியை பார்வையிட்டனர்.
- சித்தார் மேட்டூர் மெயின் ரோடு அருகில் உள்ள புளிய மரத்தின் அடியில் 2 நபர்கள் கையில் சாக்கு மூட்டையுடன் நின்று கொண்டிருந்தனர்.
- இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை அருகே சித்தார் கோம்பு தோட்டத்தில் பிரபலமான சொக்கநாச்சி அம்மன் கோவில் உள்ளது. இன்று அதிகாலை சுமார் 2.30 மணி அளவில் சித்தார் மேட்டூர் மெயின் ரோடு அருகில் உள்ள புளிய மரத்தின் அடியில் 2 நபர்கள் கையில் சாக்கு மூட்டையுடன் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அப்பகுதியில் நாய் ஒன்று குரைத்து கொண்டிருந்தது. அதை கண்ட அருகில் உள்ள மளிகை கடைக்காரர் கணேசன் என்பவர் எழுந்து வந்து பார்க்கையில் 2 பேரையும் யார், எந்த ஊர், இந்த நேரத்தில் எதற்காக எங்கே நிற்கிறீர்கள் என விசாரித்து கொண்டி ருந்தார்.
அப்போது அதிலிருந்து ஒருவன் நைசாக நழுவி சென்று விட்டான். சந்தேகமடைந்த கணேசன் அக்கம் பக்கத்தினர் உதவி யுடன் மற்றொருவனை பிடித்து கொண்டு பவானி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவ யிடம் வந்த போலீசார் அவனிடம் இருந்த சாக்கு மூட்டையை பிரித்து பார்த்த பொழுது அதில் சொக்கநாச்சி அம்மன் கோவில் கதவு மற்றும் உள்ளிருந்த பீரோவை உடைத்து திருடப்பட்ட ஒரு பெரிய குத்து விளக்கு, 2 சிறிய குத்து விளக்குகள், பித்தளைக்கூடம், செம்பு சொம்பு ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்தது.
மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலையில் கோவிலில் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
- சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் வகையில் 2 நாட்களாக போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
- மதுவிற்பனையில் ஈடுபட்டதாக 50 பேரை போலீசார் கைது செய்துள்ளதோடு, ஏராளமான மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் மது வாங்கி அதை வெளியிடத்தில் சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் வகையில் 2 நாட்களாக போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
மாவட்டத்தில் ஈரோடு, பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், பெருந்துறை ஆகிய 5 சப்.டிவிசன்களுக்குட்பட்ட போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்டதாக 50 பேரை போலீசார் கைது செய்துள்ளதோடு, ஏராளமான மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
- தலைமறைவான சிறுவனை 45 நிமிடங்களில் பிடித்த போலீசார் பின்னர் மீண்டும் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
- மருத்துவ பரிசோதனை முடிந்த பின் நீதிமன்ற உத்தரவுப்படி கோவையில் உள்ள சிறுவர் கூர் நோக்கு இல்லத்துக்கு அழைத்து செல்லப்பட்டார்.
ஈரோடு:
சித்தோடு கன்னிமார் கோவில் பகுதியை சேர்ந்த 18 வயது சிறுவனை ரூ.15 ஆயிரம் மதிப்பிலான செல்போன் திருட்டு வழக்கில் வெள்ளோடு போலீசார்கையும், களவுமாக பிடித்தனர். மேலும் சிறுவனிடம் இருந்து ரூ.15 ஆயிரம் மதிப்பிலான செல்போன் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
சிறுவனை மருத்துவ பரிசோதனைக்கு வெள்ளோடு போலீசார் சம்பவத்தன்று மாலை 4 மணியளவில் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது கழிவறைக்கு செல்ல வேண்டும் என்று சிறுவன் கூறியுள்ளார்.
இதை நம்பி போலீசார் கழிவறைக்கு செல்ல அனுமதி த்தனர். நீண்ட நேரமாகியும் சிறுவன் வராததால் சந்தேகம் அடைந்த போலீசார் கழிவறை சென்று பார்த்த போது பின் வழியே தப்பி ஓடியது தெரியவ ந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த ஈரோடு மாவட்ட போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். தப்பிய சிறுவன் படம், அங்க அடையா ளங்கள், ஆடை உள்ளிட்ட விபரங்கள் தெரிவிக்க ப்பட்டன.
ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார் ஜி. ஹெச். ரவுண்டானா முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெருந்துறையில் இருந்து வந்த பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் அச்சிறுவன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தலைமறைவான சிறுவனை 45 நிமிடங்களில் பிடித்த போலீசார் பின்னர் மீண்டும் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
மருத்துவ பரிசோதனை முடிந்த பின் நீதிமன்ற உத்தரவுப்படி கோவையில் உள்ள சிறுவர் கூர் நோக்கு இல்லத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். இவர் மீது ஏற்கனவே போலீஸ் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மொடக்குறிச்சி, பவானியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு தினக்கூலி 300 ரூபாய் வழங்க வேண்டும்.
மொடக்குறிச்சி:
100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களின் வேலை நாட்கள் 150 நாட்களாக உயர்த்த வலியுறுத்தி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மொடக்குறிச்சி, பவானியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ராசன் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் வேலை தொடங்கும் நேரத்தை காலை 9 மணி என திருத்திட வேண்டும். 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு தினக்கூலி 300 ரூபாய் வழங்க வேண்டும்.
உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து 60 வயது நிரம்பிய அனைவருக்கும் மாதம் 3000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு வீடு இல்லாத அளவிற்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிட வேண்டும்.
100 நாள் வேலையை பேரூராட்சி நகராட்சி கூலி தொழிலாளர்கள் பயன் பெறும் வகையில் விரிவு–படுத்த வேண்டும். தற்போது வழங்கி வரும் முதியோர் உதவித் தொகையை குறைக்க கூடாது தொடர்ந்து வழங்கிட வேண்டும் என ஆர்ப்பாட்ட த்தில் வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பிரபாகரன், மாநில செயலாளர் சின்னசாமி, மாதேஸ்வரன், சேகர், மணியன், சண்முகம் உள்ளிட்ட தொழிலாளர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் பவானியில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சங்கம் ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டம் வேலை தொடங்கும் நேரத்தை காலை 9 மணி என திருத்தி அமைக்க வேண்டும். தினசரி தொழிலாளர்களை போட்டோ எடுக்கும் முறையை கைவிட வேண்டும்.
ஒரு குடும்பத்திற்கு 100 நாள் வேலை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். வேலை கொடுக்க முடியாத நாட்களுக்கு சட்டப்படி இழப்பீடு வழங்க வேண்டும். தினசரி வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சட்டப்படி ரூ.281 தொகையை வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.
பின்னர் ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க பொறு ப்பாளர் கண்ணன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளான சந்திரசேகர், சிவராமன் உட்பட 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் இந்த கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
- இதன்படி மாநகரில் மக்கள் கூடும் 6 முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
ஈரோடு:
தீபாவளி பண்டிகை வரும் 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இதையடுத்து பொதுமக்கள் தற்போதே புத்தாடைகள்-நகைகள் வாங்க கடை வீதிகளில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
ஈரோடு மாநகரில் பன்னீர்செல்வம் பார்க் முதல் மணிக்கூண்டு வரை சாலையின் இருப்புறமும் ஏராளமான ஜவுளி கடை கள் உள்ளன. இதேபோல் ஆர்.கே.வி. ரோடு பகுதி களில் ஏராளமான நகை கடைகள் உள்ளன. ஈஸ்வ ரன் கோவில் வீதிகளிலும் ஜவுளி கடைகள் உள்ளன.
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் இந்த கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
கூட்டத்தை பயன்படுத்தி பொதுமக்களிடம் இருந்து நகை, பணத்தை திருடும் கும்பல் கைவரிசை காட்ட கூடும் என்பதால் மாவட்ட போலீஸ் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.
இதன்படி மாநகரில் மக்கள் கூடும் 6 முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதன்படி மணிக்கூண்டு பகுதி, கிருஷ்ணா தியேட்டர் பகுதி, பன்னீர்செல்வம் பார்க், காளை மாடு சிலை, முனிசிபால் காலனி பகுதி, பஸ் நிலையம் ஆகிய 6 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த கண்காணிப்பு கோபுரங்களில் சி.சி.டி.வி. கேமிராவும் பொருத்த ப்பட்டு கண்காணி க்கப்படுகிறது. இங்கு 24 மணி நேரமும் போலீசார் சுழற்சி முறையில் பணியாற்று வார்கள். கூட்டங்களை கண்காணி த்தல், பொதுமக்கள் நடவடிக்கையை துல்லி யமாக இந்த கண்காணிப்பு கேமிராக்கள் பதிவு செய்யும்.
இதேப்போல் கிருஷ்ணா தியேட்டர் பகுதி, பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் பெரிய அளவில் எல்.இ.டி. டிஜிட்டல் திரை அமைத்து விழிப்புணர்வு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மொடக்குறிச்சி ஒன்றியம் எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 1262 தேங்காய் பருப்பு மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
- மொத்தமாக 61,018 கிலோ எடையுள்ள தேங்காய்பருப்பு 45 இலட்சத்து 8 ஆயிரத்து 841 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி ஒன்றியம் எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 1262 தேங்காய் பருப்பு மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில் முதல்தரம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 72 ரூபாய் 7 காசுக்கும், அதிகபட்ச விலையாக 80 ரூபாய் 7 காசுக்கும், சராசரி விலையாக 79 ரூபாய் 97 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதேபோல் இரண்டாம் தரம் குறைந்தபட்ச விலையாக 54 ரூபாய் 39 காசுக்கும், அதிகபட்ச விலையாக 72 ரூபாய் 10 காசுக்கும், சராசரி விலையாக 67 ரூபாய் 90 காசுக்கு ஏலம் போனது.
மொத்தமாக 61,018 கிலோ எடையுள்ள தேங்காய்பருப்பு 45 இலட்சத்து 8 ஆயிரத்து 841 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
- ஈரோடு ஜவுளி சந்தையில் விற்பனை களை கட்ட தொடங்கியுள்ளது.
- குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற புதிய ஜவுளி ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஈரோடு:
ஈரோடு ஜவுளி சந்தையானது பன்னீர்செல்வம் பார்க், சென்ட்ரல் மார்க்கெட் பகுதி, அசோகபுரம் பகுதியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மதியம் வரை நடைபெற்று வருகிறது.
சாதாரண நாட்களை விட விசேஷ நாட்களில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 வாரமே உள்ள நிலையில் ஈரோடு ஜவுளி சந்தையில் விற்பனை களை கட்ட தொடங்கியுள்ளது.
நேற்று இரவு கூடிய ஜவுளி சந்தையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து வந்த நூற்றுக்கணக்கான வியாபாரிகள் மொத்த விலைக்கு துணிகளை கொள்முதல் செய்து அள்ளி சென்றனர்.
இதேபோல் கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும் நூற்றுக்கணக்கான வெளி மாநில வியாபாரிகள் நேற்று இரவு நடந்த ஜவுளி சந்தைக்கு வந்திருந்தனர். தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஜவுளி சந்தையில் ஏராளமான புதிய துணிகள் அறிமுகப்படுத்த ப்பட்டுள்ளன.
குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற புதிய ஜவுளி ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் வியாபாரிகள் போட்டி போட்டு அள்ளி சென்றனர்.
நேற்று இரவு முதல் தொடர்ந்து தீபாவளி விற்பனை களை கட்டியுள்ளது. சில்லரை வியாபாரம் 40 சதவீதம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இன்னும் வரும் நாட்களில் இதைவிட தீபாவளி வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இதுவரை மந்தமாக நடைபெற்று வந்த ஜவுளி வியாபாரம் தீபாவளியை முன்னிட்டு சூடு பிடிக்க தொடங்கியுள்ளது வியாபாரிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- கோபிசெட்டிபாளையம் பகுதியிலும் நேற்று 2-வது நாளாக பரவலாக மழை பெய்தது.
- கோபி பகுதியில் உள்ள ஓடைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய, விடிய பலத்த மழை பெய்தது. குறிப்பாக கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
இதேபோல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது. பல்வேறு இடங்களில் ரோடு குண்டு குழியுமாகவும், சேறும் சகதியுமாக காட்சியளித்தது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கொடிவேரி அணைப்பகுதியில் 99 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருந்தது.
இதேபோல் கோபிசெட்டிபாளையம் பகுதியிலும் நேற்று 2-வது நாளாக பரவலாக மழை பெய்தது. இதனால் கோபி பகுதியில் உள்ள ஓடைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. விளைநிலங்களில் மழை நீர் புகுந்தது. பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது.
இதேபோல் சத்தியமங்கலம், நம்பியூர், கொடுமுடி, பவானிசாகர், குண்டேரி பள்ளம், அம்மாபேட்டை, மொடக்குறிச்சி, சென்னிமலை, தாளவாடி, கவுந்தப்பாடி, பெருந்துறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கியது.
சத்தியமங்கலம், தாளவாடி வனப்பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் குளுமையான சூழ்நிலை நிலவி வருகிறது. தொடர் மழை காரணமாக மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன.
இந்நிலையில் இன்று காலை முதல் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. ஈரோடு, அம்மாபேட்டை மொடக்குறிச்சி, கோபி, அந்தியூர் போன்ற பகுதியில் இன்று காலை 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. அதைத்தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள், வியாபாரத்துக்கு செல்லும் வியாபாரிகள், பணிக்கு செல்லும் பணியாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் அவதி அடைந்தனர். மாணவர்கள் மழையில் நனையாதபடி குடை பிடித்தப்படி சென்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
கோபி-23, சத்தியமங்கலம்-50, பவானிசாகர் -31, கொடுமுடி-38, நம்பியூர்-40, எலந்தகுட்டை மேடு-51.20, அம்மாபேட்டை-13.20, கொடிவேரி-99, குண்டேரிபள்ளம்-16.20, வரட்டுப்பள்ளம்-8.80.






