என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தினக்கூலி ரூ.300 வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

    • தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மொடக்குறிச்சி, பவானியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு தினக்கூலி 300 ரூபாய் வழங்க வேண்டும்.

    மொடக்குறிச்சி:

    100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களின் வேலை நாட்கள் 150 நாட்களாக உயர்த்த வலியுறுத்தி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மொடக்குறிச்சி, பவானியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ராசன் தலைமை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் வேலை தொடங்கும் நேரத்தை காலை 9 மணி என திருத்திட வேண்டும். 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு தினக்கூலி 300 ரூபாய் வழங்க வேண்டும்.

    உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து 60 வயது நிரம்பிய அனைவருக்கும் மாதம் 3000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு வீடு இல்லாத அளவிற்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிட வேண்டும்.

    100 நாள் வேலையை பேரூராட்சி நகராட்சி கூலி தொழிலாளர்கள் பயன் பெறும் வகையில் விரிவு–படுத்த வேண்டும். தற்போது வழங்கி வரும் முதியோர் உதவித் தொகையை குறைக்க கூடாது தொடர்ந்து வழங்கிட வேண்டும் என ஆர்ப்பாட்ட த்தில் வலியுறுத்தினர்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பிரபாகரன், மாநில செயலாளர் சின்னசாமி, மாதேஸ்வரன், சேகர், மணியன், சண்முகம் உள்ளிட்ட தொழிலாளர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் பவானியில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சங்கம் ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டம் வேலை தொடங்கும் நேரத்தை காலை 9 மணி என திருத்தி அமைக்க வேண்டும். தினசரி தொழிலாளர்களை போட்டோ எடுக்கும் முறையை கைவிட வேண்டும்.

    ஒரு குடும்பத்திற்கு 100 நாள் வேலை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். வேலை கொடுக்க முடியாத நாட்களுக்கு சட்டப்படி இழப்பீடு வழங்க வேண்டும். தினசரி வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சட்டப்படி ரூ.281 தொகையை வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.

    பின்னர் ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க பொறு ப்பாளர் கண்ணன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளான சந்திரசேகர், சிவராமன் உட்பட 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×