search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "50 people were arrested"

    • மது விற்பனையில் ஈடுபட்டதாக 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • 350 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்கி வெளியில் சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதை தடுக்கவும், எல்லைப்பகுதியான கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபானங்களை கடத்தி வந்து விற்பனை செய்வதை தடுக்கும் வகையிலும் ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் அவ்வப்போது சோதனை நடத்தப்பட்டு வருகின்றது.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் ஒரே நேரத்தில் அந்தந்த போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திடீரென்று சோதனை நடத்தப்பட்டது.

    பவானி, அந்தியூர், ஈரோடு தாலுகா, மலையம்பாளையம், புளியம்பட்டி, வெள்ளோடு, ஈரோடு வடக்கு, அரச்சலூர், திங்களூர், பெருந்துறை உள்பட பல்வேறு பகுதி களில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டதாக 50 பேரை போலீ சார் கைது செய்தனர்.

    மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 350 மதுபாட்டில்கள் மற்றும் விற்பனை செய்யப்பட்ட பணம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.

    • சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் வகையில் 2 நாட்களாக போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
    • மதுவிற்பனையில் ஈடுபட்டதாக 50 பேரை போலீசார் கைது செய்துள்ளதோடு, ஏராளமான மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் மது வாங்கி அதை வெளியிடத்தில் சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் வகையில் 2 நாட்களாக போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    மாவட்டத்தில் ஈரோடு, பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், பெருந்துறை ஆகிய 5 சப்.டிவிசன்களுக்குட்பட்ட போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்டதாக 50 பேரை போலீசார் கைது செய்துள்ளதோடு, ஏராளமான மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

    ×