என் மலர்
நீங்கள் தேடியது "திருட்டு வழக்கில்"
- தலைமறைவான சிறுவனை 45 நிமிடங்களில் பிடித்த போலீசார் பின்னர் மீண்டும் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
- மருத்துவ பரிசோதனை முடிந்த பின் நீதிமன்ற உத்தரவுப்படி கோவையில் உள்ள சிறுவர் கூர் நோக்கு இல்லத்துக்கு அழைத்து செல்லப்பட்டார்.
ஈரோடு:
சித்தோடு கன்னிமார் கோவில் பகுதியை சேர்ந்த 18 வயது சிறுவனை ரூ.15 ஆயிரம் மதிப்பிலான செல்போன் திருட்டு வழக்கில் வெள்ளோடு போலீசார்கையும், களவுமாக பிடித்தனர். மேலும் சிறுவனிடம் இருந்து ரூ.15 ஆயிரம் மதிப்பிலான செல்போன் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
சிறுவனை மருத்துவ பரிசோதனைக்கு வெள்ளோடு போலீசார் சம்பவத்தன்று மாலை 4 மணியளவில் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது கழிவறைக்கு செல்ல வேண்டும் என்று சிறுவன் கூறியுள்ளார்.
இதை நம்பி போலீசார் கழிவறைக்கு செல்ல அனுமதி த்தனர். நீண்ட நேரமாகியும் சிறுவன் வராததால் சந்தேகம் அடைந்த போலீசார் கழிவறை சென்று பார்த்த போது பின் வழியே தப்பி ஓடியது தெரியவ ந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த ஈரோடு மாவட்ட போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். தப்பிய சிறுவன் படம், அங்க அடையா ளங்கள், ஆடை உள்ளிட்ட விபரங்கள் தெரிவிக்க ப்பட்டன.
ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார் ஜி. ஹெச். ரவுண்டானா முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெருந்துறையில் இருந்து வந்த பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் அச்சிறுவன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தலைமறைவான சிறுவனை 45 நிமிடங்களில் பிடித்த போலீசார் பின்னர் மீண்டும் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
மருத்துவ பரிசோதனை முடிந்த பின் நீதிமன்ற உத்தரவுப்படி கோவையில் உள்ள சிறுவர் கூர் நோக்கு இல்லத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். இவர் மீது ஏற்கனவே போலீஸ் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.






