என் மலர்
ஈரோடு
- அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவில் லேசானது முதல் மிதமான மழையாக தொடர்ந்து விடிய, விடிய விட்டு விட்டு பெய்து வந்தது.
- கடந்த 2 நாட்களில் மட்டும் அம்மாபேட்டை பகுதியில் 68.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பகலில் வானம் மேக மூட்டமாக காணப்ப ட்டது. இரவில் லேசானது முதல் மிதமான மழையாக தொடர்ந்து விடிய, விடிய விட்டு விட்டு பெய்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வானம் கருமேகங்கள் சூழ்ந்து மிதமான மழை பொழிந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு ஆரம்பித்த மழை விடிந்த பின்பும் நேற்று காலை 9 மணி வரை மிதமான மழை பொலிவு இருந்தது.
இதனால் அம்மா பேட்டை, ஊமாரெட்டியூர், நெரிஞ்சிப்பேட்டை, சென்னம்பட்டி, கொமராயனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வயல்களில் தண்ணீர் தேங்கி நின்றது.
கடந்த 2 நாட்களில் மட்டும் அம்மாபேட்டை பகுதியில் 68.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
- சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
- மொத்தம் 3,165 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 73 ஆயிரத்து 61 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
ரூ.73 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்சென்னிமலை:
சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 7,260 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 20 ரூபாய் 20 காசுக்கும், அதிகபட்ச விலையாக 25 ரூபாய் 55 காசுக்கும், சராசரி விலையாக 23 ரூபாய் 79 காசுக்கும் ஏலம் போனது.
மொத்தம் 3,165 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 73 ஆயிரத்து 61 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
- சொக்க நாச்சி அம்மன் கோவிலில் கதவின் பூட்டு உடைக்க ப்பட்டு பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளை யடிக்கப்பட்டது.
- இதை பற்றி அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் கோவிலுக்கு வந்து பார்த்தனர்.
பவானி:
பவானி அருகே உள்ள அம்மாபேட்ைட அடுத்த சித்தார் கேசரிமங்கலம் கொம்புத்தோட்டம் பகுதியில் உள்ள சொக்க நாச்சி அம்மன் கோவிலில் கதவின் பூட்டு உடைக்க ப்பட்டு பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளை யடிக்கப்பட்டது.
இதை பற்றி அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் கோவிலுக்கு வந்து பார்த்தனர். அப்போது அருகே உள்ள ரைஸ்மில் பகுதியில் 2 பேர் சாக்கு மூட்டையில் பொரு ட்களை கட்டி கொண்டு இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து மக்கள் அவர்களிடம் இருந்த சாக்கு மூட்டையை சோத னை செய்தனர். அதில் சாமி கழுத்தில் அணிந்திருந்த 2 கிராம் தங்கத் தாலி, குத்து விளக்கு 4, செம்பு குடம் 1, சொம்பு 1 உள்பட பல்வேறு பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. விசாரணை யில் இந்த பொருட்கள் சொக்கநாச்சி அம்மன் கோவிலில் திருடப்பட்டது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் பவானி போலீசாரிடம் பொது மக்கள் ஒப்படை த்தனர். போலீசாரின் விசார ணையில் அவர்கள் அம்மா பேட்டை அருகே உள்ள குறிச்சி முனியப்பன் கோவில் பகுதியை சேர்ந்த ரவி விஜய் (42) மற்றும் குறிச்சி சமத்துவபுரம் பகுதி யை சேர்ந்த வேல்முருகன் (45) என்பது தெரியவந்தது.
இதை தொடர்ந்து அவர்க ளிடம் இருந்து கோவிலில் திருடப்பட்ட பொருட்கள் அனைத்தும் மீட்கப்பட்டது.
இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 2 பேரை யும் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் பவானி கோர்ட்டில் ஆஜர் படுத்தி பவானி கிளை சிறையில் அடைத்தனர்.
- ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியின் தலைமையிடமாக மொடக்குறிச்சி பகுதி உள்ளது.
- இந்நிலையில் 2016-ம் ஆண்டு தாலுகாவாக அறிவிக்கப்பட்ட பிறகு மொடக்குறிச்சியில் பஸ் நிலையம் அமைப்பதில் காலதாமதம் ஆகி வருகிறது.
மொடக்குறிச்சி:
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியின் தலைமையிடமாக மொடக்குறிச்சி பகுதி உள்ளது. மொடக்குறிச்சி தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர்.
மொடக்குறிச்சி பகுதி யூனியனாக இருந்ததை அடுத்து கடந்த 2016-ம் ஆண்டு தாலுகாவாக தரம் உயர்ந்தது. இங்கு அரசு சார்ந்த மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அலுவலம், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலு வலகம், தாலுகா அலு வலகம், பேரூராட்சி, அரசு ஆண்கள், பெண்கள் மேல நிலைப்பள்ளி, அரசு மருத்துவமனை மற்றும் கால்நடை மருத்துவமனை, வட்டார வேளாண்மை விரிவாக்க மையம், தோட்ட க்கலைத்துறை அலுவலகம், ப.எஸ்.என்.எல். அலுவலகம், 2 கிராம நிர்வாக அலுவல கங்கள், நூலகங்கள் மற்றும் தனியார் நிறுவன அலுவல கங்கள் என பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.
மேலும் வாரச்சந்தைகள், ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள், குளியல் சோப்பு தயாரிப்பு நிறுவனமும் இயங்கி வருகின்றன.
இதற்காக மொடக்குறிச்சி தொகுதி மக்கள் மட்டுமின்றி ஈரோடு மாவட்டம் முழு வதும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் பொது மக்கள் பல்லாயிரக்கண க்கானோர் வந்து செல்கின்ற னர்.
அதேபோல் ஈரோட்டில் இருந்து வெள்ளகோவில் செல்லும் மெயின்ரோடு என்பதால் இந்த வழியாக தனியார் மற்றும் அரசு பஸ்களும், சரக்கு வாகனங்கள் உள்பட ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ேமலும் தினமும் ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளூரிலும் வெளியூர் பகுதிக்கும் சென்று வரு கிறார்கள்.
இந்நிலையில் 2016-ம் ஆண்டு தாலுகாவாக அறிவிக்கப்பட்ட பிறகு மொடக்குறிச்சியில் பஸ் நிலையம் அமைப்பதில் காலதாமதம் ஆகி வருகிறது. மேலும் மொடக்குறிச்சிக்கு வரும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பஸ்சுக்காக பஸ் நிறுத்தம் அருகே உள்ள கடைகளின் நிழலை தேடி கால் கடுக்க நின்று செல்லும் நிலை உருவாகி உள்ளது.
குறிப்பாக மொடக்குறிச்சி தாலுகா மற்றும் இதர அரசு மற்றும் தனியார் அலுவல கங்களுக்கு பல்வேறு பணி களுக்காக வரும் பொது மக்கள் பஸ் நிலையம் இல்லாததால் சிரமப்படு கின்றனர். அதேபோல் மொடக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள், முதியோர்கள் பஸ்சுக்காக நிற்க முடியாமல் அவதி ப்படுகின்றனர்.
மொடக்குறிச்சியில் இருந்து அவல்பூந்துறை செல்லும் கணபதிபாளை யம், பாசூர், நஞ்சை ஊத்துக்குளி, லக்காபுரம், எழுமாத்தூர், விளக்கேத்தி, எல்லக்கடை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் தாங்கள் செல்லும் பகுதிக்கு எப்பொழுது பஸ் வரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை உள்ளது. அவர்கள் அந்த பகுதியில் உள்ள கடைகளின் நிழல்களில் நின்று காத்திருந்து செல்கி ன்றனர்.
மொடக்குறிச்சி 4 ரோட்டில் ஈரோடு முத்தூர் ரோட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளிக்கு போதுமான விளையாட்டு மைதானம் இல்லை. மேலும் ஈரோடு முத்தூர் சாலை அருகே தாழ்வான பகுதியில் அரசு பள்ளி இயங்கி வருவதால் மாணவர்களின் கவனம் அடிக்கடி சிதறி வருகிறது.
குறிப்பாக மழைக்கால ங்களில் வெள்ள நீர் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து செல்வதால் அப்பகுதி முழுவதும் சேறும், சகதியமாக மாறிவிடுகிறது. தொடர்ந்து போக்குவரத்து இருந்து கொண்டே இருப்ப தால் வாகனங்களின் சத்தம் மற்றும் பல்வேறு கட்சிகளின் ஆர்ப்பாட்டம், பேரணி என மொடக்குறிச்சி நால்ரோடு பகுதியில் நடப்பதால் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கவனம் சிதறும் நிலை உள்ளது. இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கும் நிலை உள்ளது.
மொடக்குறிச்சி நால்ரோடு பகுதியில் ெபாது மக்கள் செல்லும் போது மிகுந்த கவனத்துடன் ேராடடை கடக்க வேண்டிய நிலை உள்ளது. அந்த பகுதியில் உள்ள அரசு ஆண்கள் பள்ளி வளாகத்தில் ேபாதுமான இட வசதி உள்ளது. எனவே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் படிக்கும் மாணவர்களை போதுமான இட வசதி உள்ள, அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி கட்டிடத்திற்கு மாற்ற வேண்டும். அங்கு பள்ளி மாணவ, மாணவி களுக்கு அதிக அளவில் நல்ல காற்றோட்டமான இடவசதி இருப்பதுடன் விளையாட்டு மைதா னங்களும் மிகப்பெரிய அளவில் உள்ளது.
மேலும் தற்போது இயங்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்ட இடத்தில் அப்பகுதி முழுவதும் விரி வாக்கம் செய்து மொடக்குறிச்சியில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும்.
மொடக்குறிச்சியில் பஸ் நிலையம் அமைந்தால் பொதுமக்கள் பஸ்சில் அமர்ந்து செல்ல வசதியாக இருக்கும். பஸசுக்கா காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருக்காது. பொது மக்களுக்கு போதுமான வசதிகளும் கிடைத்துவிடும். விவசாய பொருட்களும் எளிதில் வேறு இடத்திற்கு பஸ்சில் கொண்டு செல்ல வசதியாக இருக்கும். நோயாளிகளுக்கு உதவியாக இருக்கும்.
மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட கொடுமுடியில் பஸ் நிலையம் உள்ளது. ஆனால் மொடக்குறிச்சியில் பஸ் நிலையம் அமையாமல் இரப்பது வருத்தமாக உள்ளது.
எனவே பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மொடக்குறிச்சி பஸ் நிலையத்தை விரைந்து அமைக்குமாறு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மொடக்குறிச்சி பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- சிவகிரி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் வரும் 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
- இந்த தகவலை மின்சார செயற்பொறியாளர் முத்துவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.
ஈரோடு:
சிவகிரி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் வரும் 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
இதனால் சிவகிரி, வேட்டுவபாளையம், காகம், கொந்தளம், மின்னப்பாளையம், பழமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம்கோட்டை, விலாங்காட்டுவலசு, எல்லக்கடை, குலவிளக்கு, காரக்காட்டுவலசு, கோவில்பாளையம், ஆயப்பரப்பு, மோளப்பாளையம், பாரப்பாளையம், விளக்கேத்தி, குட்டப்பாளையம், அம்மன்கோயில், தொப்பபாளையம், பெரும்பரப்பு, வடுகபட்டி, 24 ேவலம்பாளையம், பண்ணைக்கிணறு, கரட்டுப்புதூர், காட்டுப்பாளையம், ராக்கம்மாபுதூர், இச்சிப்பாளையம், முத்தையன்வலசு, கருக்கம்பாளையம், ஊஞ்சலூர், ஒத்தக்கடை, வடக்குபுதுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
இதேபோல் நடுப்பாளையம் துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணிகள் வரும் 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
இதனால் நடுப்பாளையம், தாமரைப்பாளையம், மலையம்பாளையம், பாசூர், கொம்பனைப்புதூர், பி.கே.மங்களம், ஈஞ்சம்பள்ளி, கொளாநல்லி, கருமாண்டம்பாளையம், வெள்ளோட்டம் பரப்பு, பி.கே.பாளையம், சோளங்காபாளையம், ஆராம்பாளையம், எம்.கே.புதூர், காளிபாளையம், கொளத்துப்பாளையம், செம்மாண்டாம்ளையம் மற்றும் குட்டப்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
இந்த தகவலை மின்சார செயற்பொறியாளர் முத்துவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.
- சென்னிமலை அருகே மேலப்பாளையம் ஆதிநாராயண பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவ உற்சவம் விழா வரும் 16-ந் தேதி நடக்கிறது.
- விழா எற்பாடுகளை அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றம் நிர்வாகிகள் செய்து வரு கின்றனர்.
சென்னிமலை:
சென்னிமலை அருகே மேலப்பாளையம் ஆதிநாரா யண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதத்தை யொட்டி திருக்கல்யாண வைபவ உற்சவம் மற்றும் ஸ்ரீ சுதர்சன ேஹாம விழா வரும் 16-ந் தேதி நடக்கிறது.
இதையொட்டி அன்று காலை 8.30 மணிக்கு ஸ்ரீ சுதர்சன ேஹாமம் தொடங்குகிறது. அதை தொடர்ந்து 10.30 மணிக்கு ஆதிநாராயண பெருமாள் மற்றும் அலமேலு மங்கை-நாச்சியார் அம்மனுக்கு பூர்ணாகுதி மற்றும் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
பிறகு மாலை 3.30 மணிக்கு சென்னிமலையில் உள்ள கைலாசநாதர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து மாலை 4 மணிக்கு அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்ற நிர்வாகி சுப்புசாமி தலைமையில் சீர்வரிசை ஊர்வலம் நடக்கிறது.
இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு மங்கள வாத்தியங்கள் முழங்க 4 ராஜ வீதிகள் வழியாக ஊர்வலமாக சீர்வரிசை தட்டுகள் கொண்டு வரப்படுகிறது. தொடர்ந்து மேலப் பாளையத்தில் உள்ள ஆதி நாராயண பெருமாள் கோவிலில் சீர்வரிசை பொருட்கள் வைக்கப்படு கிறது.
அங்கு மாப்பிள்ளை அழைப்பு மற்றும் திருக்கல்யாண உற்சவம் ஆகிய வை நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு சாமிகளின் திருவீதி உலா நடக்கிறது.
விழா எற்பாடுகளை அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றம் நிர்வாகிகள் செய்து வரு கின்றனர்.
- பூச்சி மருந்தை பிராந்தி என நினைத்து குடித்து விட்டதாகவும இதனால் தனக்கு கடுமையான வயிற்று வலி ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.
- மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மொடக்குறிச்சி:
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த பஞ்சலிங்கபுரம், திருவள்ளுவர் தெருவை சேர்த்தவர் சின்னசாமி (50).விவசாய கூலி தொழிலாளி. சின்னசாமிக்கு குடிப்பழக்கமும் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று சின்னசாமி திடீரென வாந்தி எடுத்துள்ளார். இது குறித்து விசாரித்த போது குடிபோதையில் இருந்த சின்னசாமி பிராந்தி பாட்டிலில் இருந்த கலைக்கொல்லி பூச்சி மருந்தை பிராந்தி என நினைத்து குடித்து விட்டதாகவும், இதனால் தனக்கு கடுமையான வயிற்று வலி ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து சின்னச்சாமியை ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று 2 நாட்களில் சின்னசாமி வீடு திரும்பினார்.
இந்நிலையில் மீண்டும் சின்னச்சாமி வாந்தி எடுத்து உள்ளார். உடல்நிலை மோசமானதையடுத்து அவரை மீண்டும் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி சின்னசாமி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒரு சிறுத்தை கிராமத்துக்குள் அதிகாலையில் நுழைந்தது.
- அதிகாலை நேரம் என்பதால் பொதுமக்கள் நடமாட்டம் இல்லை.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான சிறுத்தை, புலி, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை, புலி அடிக்கடி வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள கிராமங்களுக்குள் நுழைந்து கால்நடைகளை வேட்டையாடி வருகிறது. சில நேரங்களில் மனிதர்களையும் வனவிலங்குகள் தாக்கி வருகிறது.
ஆசனூர் அருகே உள்ளது பங்களாதொட்டி கிராமம். இந்த கிராமத்துக்கு வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒரு சிறுத்தை அதிகாலையில் நுழைந்தது. பின்னர் அந்த சிறுத்தை குடியிருப்பு பகுதிகளை சுற்றி சுற்றி வந்தது.
அதிகாலை நேரம் என்பதால் பொதுமக்கள் நடமாட்டம் இல்லை. மேலும் கால்நடைகளும் வெளியே இல்லை. இதனால் ஊருக்குள் நுழைந்த சிறுத்தை ஏமாற்றத்துடன் மீண்டும் வனப்பகுதிக்குள் திரும்பியது.
சிறுத்தை ஊருக்குள் வந்து சென்ற காட்சி அங்குள்ள ஆரோக்கியசாமி என்பவரது கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதுபற்றி தெரிய வந்ததும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் வனத்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
அதிகாலை நேரத்தில் வந்து சென்ற சிறுத்தை இரவு நேரத்தில் மீண்டும் ஊருக்குள் வரும் வாய்ப்பு உள்ளது. எனவே இரவு நேரத்தில் பொதுமக்கள் வெளியே வராமல் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் ஊருக்குள் நுழைந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதிகாலை நேரத்தில் ஊருக்குள் சிறுத்தை வந்து சென்ற சம்பவம் கிராம மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
- ராஜா உறவினரின் மகளான 11-ம் வகுப்பு படிக்கும் மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.
- அதன் பேரில் அனைத்து மகளிர் போலீசார் ராஜா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
ஈரோடு:
சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்தவர் ராஜா (34). லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். தற்போது காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 2019-ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் ஆர். என். புதூரில் உறவினர் வீட்டில் நடைபெற்ற விருந்துக்கு ராஜா வந்திருந்தார்.
அப்போது அங்கு வந்த உறவினரின் மகளான 11-ம் வகுப்பு படிக்கும் மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக அந்த மாணவியை மிரட்டி உள்ளார்.
இதற்கு பயந்து அந்த மாணவியும் இந்த விஷயத்தை வெளியே கூறவில்லை. இந்நிலையில் அந்த மாணவி கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து மாணவி நடந்த விஷயத்தை பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் அனைத்து மகளிர் போலீசார் ராஜா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இது குறித்த வழக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி இன்று தீர்ப்பளித்தார்.
அதில் குற்றம் சாட்டப்பட்ட ராஜாவுக்கு 20 வருட சிறை தண்டனையும், 5 ஆயிரம் அபாரதம் விதித்து தீர்ப்பளி த்தார். அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறியிருந்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் நிவாரண தொகையாக வழங்க வேண்டும் என பரிந்துரை செய்தார். இந்த இழப்பீட்டு தொகையை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறியிருந்தார்.
- ஈரோடு மாவட்டத்தில் 10 தாலுகாவில் தற்போது 46 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றது.
- இதுவரை மொத்தம் 4 லட்சத்து 21 ஆயிரத்து 677 நபர்கள் 108 சேவையை பயன்படுத்தி உள்ளனர்.
ஈரோடு:
தமிழக அரசு கடந்த 2008-ம் ஆண்டு முதல் 108 ஆம்புலன்ஸ் சேவையை தமிழ்நாடு முழுவதும் அணைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுத்தி வருகின்றது.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி, தாளவாடி, நம்பியூர் உள்ளிட்ட 10 தாலுகாவில் தற்போது 46 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றது.
இதில் மலைப்பகுதியில் மட்டும் 9 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றது. ஈரோடு மாவட்டம் முழுவதும் ஆம்பு லன்ஸ் தேவை தொடர்பாக அழைப்பு பெறப்பட்டதில் இருந்து 8 முதல் 14 நிமிடங்களில் நகர்புறம் மற்றும் கிராமபுற ங்ககளுக்கு சென்று சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது.
இந்த நேரத்தை மேலும் குறைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து 108 ஆம்புலன்ஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணேஷ் கூறியதாவது:
108 ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டு 14 ஆண்டுகள் ஆகின்றது. ஈரோடு மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 4 லட்சத்து 21 ஆயிரத்து 677 நபர்கள் 108 சேவையை பயன்படுத்தி உள்ளனர். இதிலும் குறிப்பாக 84 ஆயிரத்து 105 கருவுற்ற தாய்மார்கள் மற்றும் 1 லட்சத்து 992 பேர் சாலை விபத்திற்காக உபயோகித்துள்ளனர்.
இதில் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் கர்ப்பினி பெண்களுக்கு பிரசவ வலி ஏற்பட்டு 709 குழந்தைகள் ஆம்புலன்சில் பிறந்துள்ளன.
இதயம் மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிப்ப தற்காக வெண்டிலேட்டர் ஈ.சி.ஜி மானிட்டர் போன்ற அதிநவீன கருவிகள் ஈரோடு மற்றும் பெருந்துறை மருத்துவ கல்லுரி ஆம்புல ன்ஸ்களில் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
பிறந்த 28 நாட்களுக்கு உட்பட்ட பச்சிளம் குழந்தை கள் ஆம்புலன்ஸ் ஈரோடு மற்றும் கோபிசெட்டி பாளையம் மருத்துவ மனையில் இன்குபேட்டர் மற்றும் வெண்டிலேட்டர் வசதிகளுடன் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சராசரியாக மாதந்தோறும் 40-க்கும் மேற்பட்ட பச்சிளம் குழ ந்தைகள் காப்பாற்றபட்டு வருகின்றனர்.
108 சேவையை இன்னும் செம்மைபடுத்த வேண்டும் என்பதற்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கருவுற்ற தாய்மார்களுக்கு தொடர்ச்சியாக விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகின்றது. கர்ப்பிணி பெண்கள் இலவசமாக இச் சேவையை 24 மணி நேரமமும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஹாட்ஸ்பாட் எனும் அதிக விபத்து ஏற்படும் இடங்களை கண்டறிந்து வாகன விபத்துக்களை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
- கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையம் பேரூராட்சி பகுதிகளிலும் விடிய, விடிய மழை பெய்தது.
- மழை நீர் செல்ல சாக்கடை வசதி இல்லாததால் மழை வெள்ளம் ஈரோடு-சத்தியமங்கலம் மெயின் ரோட்டில் தேங்கி நின்றது.
கோபி:
ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான இடங்களில் மழை வெள்ளம் தேங்கி நிற்கிறது.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையம் பேரூராட்சி பகுதிகளிலும் விடிய, விடிய மழை பெய்தது. மழை நீர் செல்ல சாக்கடை வசதி இல்லாததால் மழை வெள்ளம் ஈரோடு-சத்தியமங்கலம் மெயின் ரோட்டில் தேங்கி நின்றது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த சாலையில் போக்குவரத்து ஒரு வழிபாதையாக மாற்றிவிடப்பட்டது. மேலும் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு ரோட்டில் தேங்கிய மழை வெள்ளத்தை வேறு பக்கம் திருப்பி விடும் பணி நடந்து வருகிறது.
- புதுக்கரைப் புதூர் அருகே வந்த போது அந்த பகுதியில் சாலை மற்றும் பாலம் அமைக்க தோண்டப்பட்டு இருந்த குழியில் மோட்டார் சைக்கிளுடன் கோகிலன் தவறி விழுந்தார்.
- சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து கோகிலனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அரக்கன் கோட்டையைச் சேர்ந்தவர் கோகிலன் (22). இவர் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று இரவு இவர் தனது நண்பரை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு தாளக்கொம்பு–புதூர் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார். பின்னர் அவரை இறக்கி விட்டு விட்டு மீண்டும் கோபிசெட்டிபாளையம் நோக்கி வந்து கொண்டு இருந்தார்.
அப்போது புதுக்கரைப் புதூர் அருகே வந்த போது அந்த பகுதியில் சாலை மற்றும் பாலம் அமைக்க தோண்டப்பட்டு இருந்த குழியில் மோட்டார் சைக்கிளுடன் கோகிலன் தவறி விழுந்தார்.
சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து கோகிலனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து குழியில் கிடந்த மோட்டார் சைக்கிளை மீட்டனர்.






