search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stagnant rain"

    • அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவில் லேசானது முதல் மிதமான மழையாக தொடர்ந்து விடிய, விடிய விட்டு விட்டு பெய்து வந்தது.
    • கடந்த 2 நாட்களில் மட்டும் அம்மாபேட்டை பகுதியில் 68.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பகலில் வானம் மேக மூட்டமாக காணப்ப ட்டது. இரவில் லேசானது முதல் மிதமான மழையாக தொடர்ந்து விடிய, விடிய விட்டு விட்டு பெய்து வந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வானம் கருமேகங்கள் சூழ்ந்து மிதமான மழை பொழிந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு ஆரம்பித்த மழை விடிந்த பின்பும் நேற்று காலை 9 மணி வரை மிதமான மழை பொலிவு இருந்தது.

    இதனால் அம்மா பேட்டை, ஊமாரெட்டியூர், நெரிஞ்சிப்பேட்டை, சென்னம்பட்டி, கொமராயனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வயல்களில் தண்ணீர் தேங்கி நின்றது.

    கடந்த 2 நாட்களில் மட்டும் அம்மாபேட்டை பகுதியில் 68.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    நாகை மாவட்டம் கொள்ளிடம் கடை வீதியில் மழை நீர் தேங்கி கிடப்பதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
    சீர்காழி:

    நாகை மாவட்டம் கொள்ளிடம் கடை வீதியின் மையப்பகுதியில் சீர்காழியிலிருந்து சிதம்பரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மழை பெய்யும் போது 20 மீட்டர் தூரத்திற்கு மழை நீர் தேங்கி விடுகிறது. இந்த மழை நீர் வடிய குறைந்த பட்சம் 3 அல்லது 4 நாட்கள் ஆகிறது. 

    சாதாரணமாக குறைந்த அளவு மழை பெய்தாலும் சாலையின் நடுவே தண்ணீர் தேங்கி விடுகிறது. ஒரு பகுதி பள்ளமாக இருப்பதால் சாலையில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருகிறது. சாலையில் தண்ணீர் தொடர்ந்து தேங்கி வருவதால் வாகனங்கள் செல்லும் போதும், சாலையோரத்தில் நடந்து செல்லும்போதும், சகதியுடன் சேர்ந்த தண்ணீர் படுவதால் சாலையில் செல்வோர் பாதிக்கப்படுகின்றனர். தொடர்ந்து தண்ணீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றமும் வீசுகிறது. 

    இதனால் கடை வியாபாரிகள் சிரமம் அடைகின்றனர். எனவே கொள்ளிடத்தின் மையப்பகுதியில் பள்ளமாக உள்ள தேசிய நெடுஞ்சாலையை சரிபடுத்தவும் தண்ணீரை உடனடியாக வடியவைக்கவும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  
    ×