என் மலர்
ஈரோடு
- பரவலாக மழை பெய்ததன் காரணமாக சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளது.
- இதன் காரணமாக சின்ன வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
ஈரோடு:
ஈரோடு வ.உ.சி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆந்திராவில் இருந்தும் தினமும் காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் பரவலாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்ததால் காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டு சில காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக சின்ன வெங்காயம் விலை 3 மடங்கு உயர்ந்து விட்டது. இதுபோல் தக்காளி விலையும் உயர்ந்து வருகிறது.
ஈரோடு வ.உ.சி. மார்க்கெட்டிற்கு தினமும் கம்பம், ஒட்டன்சத்திரம், தாளவாடி, பல்லடம், திருப்பூர், கொடுமுடி போன்ற பகுதிகளில் இருந்து 15 டன் சின்ன வெங்காயம் விற்பனைக்கு வந்தது.
இந்நிலையில் பரவலாக மழை பெய்ததன் காரண மாக சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளது. இன்று காலை மார்க்கெட்டிற்கு 5 டன் மட்டுமே சின்ன வெங்காயம் விற்பனைக்கு வந்து இருந்தது.
இதன் காரணமாக சின்ன வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்ற சின்ன வெங்காயம் இன்று ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனையானது.
அதேசமயம் பெரிய வெங்காயத்தின் விலை வழக்கம் போல் 30 முதல் 40 ரூபாய்க்கு விற்பனையானது.
இதே போல் கடந்த சில நாட்களாக தக்காளி விலை குறைந்து வந்த நிலையில் மழை காரணமாக வரத்து குறைந்து மீண்டும் விலை உயர்ந்துள்ளது. வ.உ.சி. மார்க்கெட்டிற்கு தினமும் 7 ஆயிரம் பெட்டி தக்காளிகள் வரத்தாகி வந்த நிலையில் இன்று 3 ஆயிரம் தக்காளி பெட்டிகள் மட்டுமே வரத்தாகியுள்ளது.
இதனால் கடந்த வாரம் ரூ.25 முதல் 30 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ தக்காளி இன்று ரூ.50 வரை விற்பனையானது. இன்று தாளவாடி, ஆந்திரா குப்பம் போன்ற பகுதியில் இருந்து தக்காளி விற்பனைக்கு வந்தது. ஆந்திரா தக்காளி ஒரு கிலோ ரூ.40 முதல் 45 வரையும், தாளவாடி தக்காளி ஒரு கிலோ ரூ.50-க்கும் விற்பனையானது.
- மாணவர்கள் இன்று 2-வது நாளாக பள்ளிக்கு செல்லாமல் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- இதனால் மாணவ-மாணவிகள் இல்லாமல் பள்ளி வெறிச்சோடி காணப்படுகிறது.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதி குன்னன்புரம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இங்கு பனஹள்ளி, பாளையம், கல்மண்டிபுரம், ஜீரக ஹள்ளி, தொட்ட முதுகரை, கொங்கள்ளி காலனி, இரகனள்ளி, சிங்கன்புரம், மல்லையன்புரம் உள்ளிட்ட தாளவாடி சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இங்கு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தேவையான வகுப்பறை கட்டிடங்கள் பற்றாக்கு றையாக இருப்பதாகவும், தேவையான அளவிற்கு ஆசிரியர்கள் இல்லை எனவும், போதிய அடிப்படை வசதிகள் இல்லை எனவும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் 134 மாணவ, மாணவிகள் நேற்று பள்ளிகளுக்கு வராமல் புறக்கணிப்பு போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்ப தாக உறுதி அளித்தனர்.
எனினும் இதை ஏற்காத மாணவர்கள் இன்று 2-வது நாளாக பள்ளிக்கு செல்லாமல் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் மாணவ-மாணவிகள் இல்லாமல் பள்ளி வெறிச்சோடி காணப்படுகிறது.
- கொடுமுடி அருகே எழுநூத்திமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட குப்பம் பாளையத்தில் சிறப்பு மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது.
- முகாமிற்க்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை வகித்தார்.
கொடுமுடி:
கொடுமுடி அருகே எழுநூத்திமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட குப்பம் பாளையத்தில் சிறப்பு மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது.
முகாமிற்க்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை வகித்தார். தாசில்தார் மாசிலாமணி வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் சந்ேதாஷினி சந்திரா, ஆர்.டி.ஓ. சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் 108 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, ரேசன் கார்டு, விதவைகள் மற்றும் முதியோர் உதவித்தொகை தலா 30 பேர் என மொத்தம் 796 பயனாளிகளுக்கு ரூ.82 லட்சத்து 42 ஆயிரத்து 221 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கணேசமூர்த்தி எம்.பி., சரஸ்வதி எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர்.
இதில் மகளிர் திட்ட இயக்குனர் கெட்ஷி லீமா அமாலினி, மாவட்ட செய்தி தொடர்பு அதிகாரி செந்தில்குமார் உள்பட பலர் கலந்த கொண்டர்.
விழாவிற்கான எற்பாடுகளை மண்டல தாசில்தார் பரமசிவன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.
- கே.என்.பாளையம் தாசிரிபாளையம் ரோடு பள்ளத்தில் 3 பேர் பஸ்சின் கண்ணாடியை உடைப்பதாக பேசிக்கொண்டிருந்தனர்.
- இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சந்தோஷ், சாமுண்டி, கருணாமூர்த்தி ஆகிய 3 பேர் மீதும் பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அருகேயுள்ள கே.என்.பாளையம் தாசிரிபாளையம் ரோடு பள்ளத்தில் 3 பேர் பஸ்சின் கண்ணாடியை உடைப்பதாக பேசிக்கொண்டிருந்தனர்.
இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில் கே.என்.பாளையம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (22) , சாமுண்டி (27) மற்றும் கருணா என்கிற கருணாமூர்த்தி (24) ஆகிய 3 பேர் அரசு பஸ்சின் கண்ணாடியை உடைத்தால் பிரபலமாகி விடலாம் என்று அரசுக்கு அவப்பெயரையும், பொது சொத்துக்கு சேதம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ள திட்டமிட்டதாக தெரியவந்தது
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சந்தோஷ், சாமுண்டி, கருணாமூர்த்தி ஆகிய 3 பேர் மீதும் பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
- சம்பவத்தன்று இரவு வழக்கம் போல வேலை முடித்து வீட்டில் தனது குழந்தைகளுடன் தரையில் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.
- நள்ளிரவு தனது குழந்தை பாம்பு பாம்பு என்று அலறியது. உடனடியாக முகுல்காசி எழுந்து பார்த்தபோது வீட்டிற்குள் கிடந்த துணிக்குள் பாம்பு இருந்துள்ளது.
பெருந்துறை:
மேற்குவங்க மாநிலம், பர்கானா மாவட்டம் உதர்பகுண்டி பகுதியை சேர்ந்தவர் முகுல்காசி. இவர் தனது மனைவி பஜீலா காத்தூன், மகன் பர்கன்காசி (வயது 2) ஆகியோருடன் பெருந்து றையை அடுத்துள்ள பணிக்கம்பாளையம் பகுதியில் குடியிருந்து வருகிறார்.
முகுல்காசி பெருந்துறை பகுதியில் கட்டிட கூலி வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம் போல வேலை முடித்து வீட்டில் தனது குழந்தைகளுடன் தரையில் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.
நள்ளிரவு தனது குழந்தை பாம்பு பாம்பு என்று அலறியது. உடனடியாக முகுல்காசி எழுந்து பார்த்தபோது வீட்டிற்குள் கிடந்த துணிக்குள் பாம்பு இருந்துள்ளது.
அவரது குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் அவனை பார்கையில் முதுகில் பாம்பு கடித்த காயம் இருந்துள்ளது. உடனடியாக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் பர்கன்காசி பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி மையத்தை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் லதா ஆய்வு செய்தார்.
- அப்போது எண்ணும் எழுத்தும் பயிற்சியின் நோக்கம் மற்றும் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.
ஈரோடு:
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் எண்ணும் எழுத்தும் திட்டமானது தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.
அரசு தொடக்க பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், கற்றல் திறனை அதிகப்ப டுத்தவும் எண்ணும் எழுத்தும் பயிற்சி திட்டமானது கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
எண்ணும் எழுத்தும் பயிற்சியின் மூலம் 2025-ம் ஆண்டிற்குள் தொடக்க நிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் சரளமாக எழுதவும், படிக்கவும் வைப்பது இப்பயிற்சியின் நோக்கமாகும்.
இதற்காக பள்ளி கல்வித் துறையின் மூலம் 2-ம் கட்ட பயிற்சியானது தொட க்கநிலை வகுப்புகளைகையாளும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக மொடக்குறிச்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி மையத்தை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் லதா ஆய்வு செய்தார்.
அப்போது எண்ணும் எழுத்தும் பயிற்சியின் நோக்கம் மற்றும் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.
மேலும் மாணவர்க ளிடையே ஏற்படும் கற்றல் இடைவெளியை குறைத்து மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தக்கூடிய வகையில் ஆசிரியர்கள் அனைவரும் ஆடல், பாடல் மற்றும் கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் மூலமாக பாடங்களை போதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் லட்சுமி நாராயணன், விரிவுரை யாளர் முருகேசன், ஈரோடு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜோதி சந்திரிகா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுதா, வட்டார கல்வி அலுவலர்கள் சிவானந்தம், வனிதாராணி, சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
- அந்தியூர் அடுத்த தாமரைக்கரை பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக பர்கூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- இதேபோல் தாமரைக்கரை பகுதியில் 7 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.
அந்தியூர்:
அந்தியூர் அடுத்த தாமரைக்கரை பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக பர்கூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
சப் -இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது 8 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது.
இதனையடுத்து அந்தியூர் பகுதியை சேர்ந்த கருப்புசாமி, தாமரைக்கரை பகுதியை சேர்ந்த சித்தன், பெருந்துறையை சேர்ந்த அருணாச்சலம், சேகர், சந்தோஷ், ராஜா, குமார், ஊசி மலையை சேர்ந்த கிரியன் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் 11,960 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் தாமரைக்கரை பகுதியில் 7 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அவர்களையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 13 ஆயிரத்து 800 ரூபாய் பறிமுதல் செய்தனர்.
- மகனுக்கு சரிவர படிப்பு வராததால் யுவராணி மகனை அடிக்கடி கண்டித்துள்ளார்.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு யுவராணியின் மகன் விடுதியில் இருந்து தன்னால் தங்கி படிக்க முடியாது என்று கூறி வீட்டுக்கே வந்து விட்டார்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி அருகே உள்ள சுங்ககாரன் பாளையம் அடுத்த தேசிகிராமத்தை சேர்ந்தவர் அருள்செல்வன். காண்டிராக்டர். இவரது மனைவி யுவராணி (36). இவர் டானா புதூரில் உள்ள மின்வாரியத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகனும், 12 வயதில் ஒரு மகளும் உள்ளனர். மகன் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 9-ம் வகுப்பு படித்து வந்தார். மகள் புளியம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.
மகனுக்கு சரிவர படிப்பு வராததால் யுவராணி மகனை அடிக்கடி கண்டித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு யுவராணியின் மகன் விடுதியில் இருந்து தன்னால் தங்கி படிக்க முடியாது என்று கூறி வீட்டுக்கே வந்து விட்டார்.
பின்னர் அவர் வீட்டிலிருந்து தினமும் சத்தியமங்கலத்தில் உள்ள பள்ளிக்கு சென்று வந்தார். தொடர்ந்து யுவராணி மகனை நன்றாக படிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தார். இது அவரது மகனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த காலாண்டு தேர்விலும் யுவராணியின் மகன் சரியாக மார்க் எடுக்கவில்லை. இதை அடுத்து யுவராணி தனது மகனிடம் தந்தையிடம் கூறி மீண்டும் உன்னை பள்ளியில் உள்ள விடுதியில் சேர்க்கப்போகிறேன் என்று கூறி வந்தார். இதனால் யுவராணி மீது அவரது மகனுக்கு மேலும் கோபம் அதிகரித்தது.
நேற்று யுவராணியின் கணவர் அருள்செல்வன் வேலை விஷயமாக கோயம்புத்தூர் சென்று விட்டார். அப்போது வீட்டில் யுவராணி தனது மகன், மகளுடன் இருந்தார். இரவு 8.30 மணி அளவில் யுவராணி தனது மகனிடம் நாளை காலை உனது தந்தையிடம் சொல்லிவிட்டு உன்னை பள்ளி விடுதிக்கு அழைத்து செல்ல போகிறேன் என்று கூறியுள்ளார்.
இதனால் அவரது மகன் யுவராணியிடம் தகராறில் ஈடுபட்டார். பின்னர் இரவு சாப்பிட்டு விட்டு அனைவரும் தூங்கினர். யுவராணி தனது மகளுடன் வீட்டில் உள்ள ஹாலில் படுத்து தூங்கினார். அவரது மகன் வீட்டில் உள்ள படுக்கை அறையில் படுத்து தூங்கினார்.
தாய் மீது கோபத்தில் இருந்த மகன் விடிந்ததும் தன்னை மீண்டும் பள்ளி விடுதியில் சேர்த்து விடுவார்கள் என ஆத்திரம் அடைந்தார். இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற அவர் நள்ளிரவு 12 மணி அளவில் எழுந்து தாய் படுத்திருந்த ஹாலுக்கு சென்றார்.
அப்போது யுவராணி படுத்திருந்த இடத்தின் அருகே ஹலோ பிளாக் கல் மேல் ஒரு பூந்தொட்டி இருந்தது. ஆத்திரமடைந்த அவரது மகன் பூந்தொட்டியை எடுத்து முதலில் யுவராணி தலையில் அடித்துள்ளார். எனினும் ஆத்திரம் அடங்காததால் அருகில் இருந்த ஹாலோ பிளாக் கல்லை எடுத்து யுவராணி தலையில் அடித்துள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த யுவராணி அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகே படுத்திருந்த அவரது மகள் எழுந்து பார்த்து அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். அப்போது யுவராணியின் மகன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
சத்தம் கேட்டு கீழ் வீட்டில் இருந்த அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது யுவராணி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சிடைந்தனர்.
பின்னர் யுவராணியை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே யுவராணி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் சத்தியமங்கலம் டி.எஸ்.பி.சந்திரசேகர், புளியம்பட்டி இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் யுவராணி வீட்டுக்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.
இதுகுறித்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தப்பி ஓடிய யுவராணியின் மகன் போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தாயை மகனே அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- யுனிசெப் அதிகாரி மகாலட்சுமி தலைமையிலான அதிகாரிகள் கொண்ட குழுவினர் குளூர் ஊராட்சியில் சுகாதாரம் குறித்தும், பல்வேறு வளர்ச்சி நலத்திட்ட பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.
- மேலும் ஊராட்சி தலைவர் செல்வராஜ் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் அப்பகுதியில் 3 புதிய குளம் அமைக்கப்ப ட்டதையும் அக்குளத்தில் தற்பொழுது நீர் நிரம்பி இருப்பதையும் கண்டு யுனிசெப் அதிகாரிகள் வியந்தனர்.
மொடக்குறிச்சி:
கடந்த ஆகஸ்ட் மாதம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையால் தமிழகத்தில் முன்மாதிரி கிராம விருதுக்கு மொடக்கு றிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள குளூர் ஊராட்சி தேர்வாகியுள்ளதாக மாநில அரசு அறிவித்தது.
இந்நிலையில் யுனிசெப் அதிகாரி மகாலட்சுமி தலைமையிலான அதிகாரிகள் கொண்ட குழுவினர் குளூர் ஊராட்சியில் சுகாதாரம் குறித்தும், பல்வேறு வளர்ச்சி நலத்திட்ட பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் குளூர் ஊராட்சிக்குட்பட்ட கோவிந்தநாயக்கன் பாளையம் பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு இயற்கை சாண எரிவாயு மூலம் சமைத்து வழங்கி வருவது குறித்து, மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேலிடம் யுனிசெப் அதிகாரிகள் விளக்கம் கேட்டறிந்தனர்.
மேலும் குளூர் ஊராட்சியில் ஆந்திராவில் இருந்து வரவழைக்கப்பட்ட 5,400 மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்ச்சி அடைந்து பசுமையாக மாறியதை அடுத்து மாமரம், அத்திமரம், மகிழம், திருவோடு மரம், நாவல் உள்ளிட்ட பல்வேறு மரவகை கன்றுகள் வளர்ந்து நின்று பசுமை ஊராட்சியாக காட்சி யளிப்பதை மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கணபதி மற்றும் குளூர் ஊராட்சி தலைவர் செல்வராஜிடம் யுனிசெப் அதிகாரிகள் ஆர்வமாக கேட்டறிந்தனர்.
மேலும் அணைத்து வீடுகளுக்கும் பிளாஸ்டிக் குப்பை பக்கெட்டுகள் வழங்கி மக்கும் குப்பை, மக்காத குப்பை என பொதுமக்களிடம் தரம் பிரித்து குப்பைகள் வாங்கி வருவதையும் யூனிசெப் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தவிர மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதியளிப்பு வேலை திட்டத்தின் கீழ் குளூர் ஊராட்சியில் 2 தடுப்பணைகள் கட்டப்பட்டு தற்பொழுது தண்ணீர் நிரம்பி வழிகிறது.
மேலும் ஊராட்சி தலைவர் செல்வராஜ் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் அப்பகுதியில் 3 புதிய குளம் அமைக்கப்ப ட்டதையும் அக்குளத்தில் தற்பொழுது நீர் நிரம்பி இருப்பதையும் கண்டு யுனிசெப் அதிகாரிகள் வியந்தனர்.
ஆய்வின்போது மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெருமாள், வட்டார ஒருங்கிணைப்பாளர் சுகுணா, என்ஜினீயர் ரமேஷ் மற்றும் மொடக்குறிச்சி யூனியன் அலுவலர்கள், ஊராட்சி அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
- சம்பவ த்தன்று இரவு வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார்.
- அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோ பொருட்கள் சிதறி கிடந்தது.
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்த பவானி ரோடு சோளிபாளையம் பகுதியை ேசர்ந்தவர் ராமசாமி (வயது 65). இவரது மனைவி குஞ்சம்மாள். இவர் 8 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
ராமசாமி பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் விவசாய விளைபொருள் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் மற்றும் மகள் ஆகியோர் தனி தனி யாக வசித்து வருகிறார்கள்.
இதனால் ராமசாமி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.இந்த நிலையில் சம்பவ த்தன்று இரவு அவர் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார்.
அவர் ேவலை முடிந்து காலை வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் காம்பவுண்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோ பொருட்கள் சிதறி கிடந்தது.
மேலும் பீரோவில் இருந்த ரூ.20 ஆயிரம், டி.வி., கியாஸ் சிலிண்டர் ஆகியவை திருட ப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இது குறித்து பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்.
- ஈரோடு மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர் செய்துள்ள விவசாயிகள், பயிர் காப்பீடு செய்ய துணை இயக்குனர் மரகதமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், இ-சேவை மையங்களில் காப்பீடு செய்து இழப்பு மற்றும் நஷ்டத்தை தவிர்க்கலாம்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர் செய்துள்ள விவசாயிகள், பயிர் காப்பீடு செய்ய துணை இயக்குனர் மரகதமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:- சாகுபடி செய்யப்பட்ட பயிர்களுக்கு எதிர்பாராத காலநிலை மாற்றத்தால் சேதம், இழப்பு ஏற்படும் போது பயிர் காப்பீடு திட்டம் மூலம், இழப்பை தவிர்க்கலாம்.
ஈரோடு மாவட்டத்தில் ராபி பருவத்தில் சாகுபடி செய்ய ப்பட்ட தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்யலாம். வரும் ஜனவரி மாதம் 18 -ந் தேதிக்குள் முட்டை கோஸ் பயிர் ஏக்கருக்கு, 1,100 ரூபாய்,31-ந் தேதிக்குள் வெங்காயம் ஏக்கருக்கு 2,210 ரூபாய், பிப்ரவரி மாதம் 15-ந் தேதிக்குள் வெண்டை பயிர் ஏக்கருக்க 972 ரூபாய், 28-ந் தேதிக்குள் வாழை பயிர் ஏக்கருக்கு 4,485 ரூபாய், மரவள்ளி பயிர் ஏக்கருக்கு, 1,940 ரூபாய் காப்பீடு செய்ய வேண்டும்.
அந்தந்த பகுதி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், இ-சேவை மையங்களில் காப்பீடு செய்து இழப்பு மற்றும் நஷ்டத்தை தவிர்க்கலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் இன்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,822 கன அடியாக குறைந்தது.
- இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.10 அடியாக உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் கொள்ளளவு 105 அடி ஆகும். அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி முதல் தொடர்ந்து 56 நாட்களுக்கு பவானிசாகர் அணை 102 அடியில் நீடித்தது. இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வந்தது.
நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வர த்து அதிகரித்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 6,521 கன அடியாக நீர்வரத்து அதிகரித்து வந்தது.
இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் இன்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,822 கன அடியாக குறைந்தது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.10 அடியாக உள்ளது.
பாசனத்திற்காக கீழ் பவானி வாய்க்காலில் 1,500 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் 1,600 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் மற்ற அணை களின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. 41.75 அடி கொண்ட குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 37.75 அடியாக உள்ளது.
இதேபோல் 33.50 அடி கொண்ட வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.46 அடியாக உள்ளது. 30 அடி கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 21.10 அடியாக உள்ளது.






