பவானிசாகர் அணையிலிருந்து கீழ் பவானி பாசனத்திற்கு தண்ணீர் குறைப்பு

நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் இன்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,822 கன அடியாக குறைந்தது.இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.10 அடியாக உள்ளது.
பவானிசாகர் அணையிலிருந்து கீழ் பவானி பாசனத்திற்கு தண்ணீர் குறைப்பு
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் கொள்ளளவு 105 அடி ஆகும். அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி முதல் தொடர்ந்து 56 நாட்களுக்கு பவானிசாகர் அணை 102 அடியில் நீடித்தது. இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வந்தது.

நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வர த்து அதிகரித்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 6,521 கன அடியாக நீர்வரத்து அதிகரித்து வந்தது.

இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் இன்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,822 கன அடியாக குறைந்தது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.10 அடியாக உள்ளது.

பாசனத்திற்காக கீழ் பவானி வாய்க்காலில் 1,500 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் 1,600 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் மற்ற அணை களின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. 41.75 அடி கொண்ட குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 37.75 அடியாக உள்ளது.

இதேபோல் 33.50 அடி கொண்ட வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.46 அடியாக உள்ளது. 30 அடி கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 21.10 அடியாக உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com