என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டின் பூட்டை உடைத்து பணம்-டி.வி. திருட்டு
    X

    வீட்டின் பூட்டை உடைத்து பணம்-டி.வி. திருட்டு

    • சம்பவ த்தன்று இரவு வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார்.
    • அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோ பொருட்கள் சிதறி கிடந்தது.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்த பவானி ரோடு சோளிபாளையம் பகுதியை ேசர்ந்தவர் ராமசாமி (வயது 65). இவரது மனைவி குஞ்சம்மாள். இவர் 8 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

    ராமசாமி பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் விவசாய விளைபொருள் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் மற்றும் மகள் ஆகியோர் தனி தனி யாக வசித்து வருகிறார்கள்.

    இதனால் ராமசாமி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.இந்த நிலையில் சம்பவ த்தன்று இரவு அவர் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார்.

    அவர் ேவலை முடிந்து காலை வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் காம்பவுண்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோ பொருட்கள் சிதறி கிடந்தது.

    மேலும் பீரோவில் இருந்த ரூ.20 ஆயிரம், டி.வி., கியாஸ் சிலிண்டர் ஆகியவை திருட ப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இது குறித்து பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்.

    Next Story
    ×