என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளியை புறக்கணித்து"

    • மாணவர்கள் இன்று 2-வது நாளாக பள்ளிக்கு செல்லாமல் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • இதனால் மாணவ-மாணவிகள் இல்லாமல் பள்ளி வெறிச்சோடி காணப்படுகிறது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதி குன்னன்புரம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இங்கு பனஹள்ளி, பாளையம், கல்மண்டிபுரம், ஜீரக ஹள்ளி, தொட்ட முதுகரை, கொங்கள்ளி காலனி, இரகனள்ளி, சிங்கன்புரம், மல்லையன்புரம் உள்ளிட்ட தாளவாடி சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இங்கு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தேவையான வகுப்பறை கட்டிடங்கள் பற்றாக்கு றையாக இருப்பதாகவும், தேவையான அளவிற்கு ஆசிரியர்கள் இல்லை எனவும், போதிய அடிப்படை வசதிகள் இல்லை எனவும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் 134 மாணவ, மாணவிகள் நேற்று பள்ளிகளுக்கு வராமல் புறக்கணிப்பு போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்ப தாக உறுதி அளித்தனர்.

    எனினும் இதை ஏற்காத மாணவர்கள் இன்று 2-வது நாளாக பள்ளிக்கு செல்லாமல் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் மாணவ-மாணவிகள் இல்லாமல் பள்ளி வெறிச்சோடி காணப்படுகிறது.

    ×