என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் கல்லூரி பஸ் மீது டிப்பர் லாரி மோதி விபத்து
    X

    தனியார் கல்லூரி பஸ் மீது டிப்பர் லாரி மோதி விபத்து

    • விபத்தில் பஸ்சின் முன் பக்க கண்ணாடி உடைந்தது.
    • சற்றும் எதிர்பார்க்காத பஸ் டிரைவர் பஸ்சை பிரேக் போட்டு நிறுத்துவதற்குள் லாரியின் பின்பகுதியில் பஸ் மோதி நின்றது.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கொங்கு கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் இருந்து மாணவ- மாணவிகள் இந்த கலைக் கல்லூரியில் படித்து வருகின்றனர். இதற்காக கல்லூரி நிர்வாகம் சார்பில் பஸ் வசதி செய்யப்பட்டி–ருந்தது.

    தினமும் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பஸ் சென்று மாணவ மாணவிகளை கல்லூரிக்கு ஏற்று சென்று வருகிறது.

    அதன்படி இன்று காலை மொடக்குறிச்சி பகுதியில் உள்ள கல்லூரி மாணவி-மாணவர்களை ஏற்றிக்கொண்டு பஸ் பெருந்துறையில் உள்ள கொங்கு கலை அறிவியல் கல்லூரி நோக்கி வந்து கொண்டிருந்தது.

    பஸ்சில் 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இருந்தனர். பஸ் லக்காபுரம் அருகே உள்ள சாணார் மேடு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது பஸ்சின் முன்பு ஒரு டிம்பல் ஆரி சென்று கொண்டிருந்தது.

    கல்லூரி பஸ் அந்த லாரியை முந்தி செல்ல முயன்ற போது அந்தப் பகுதியில் பள்ளம் இருந்ததால் லாரி டிரைவர் பள்ளத்தில் இறங்காமல் இருப்பதற்காக திடீரென பிரேக் போட்டார்.

    இதை சற்றும் எதிர்பார்க்காத பஸ் டிரைவர் பஸ்சை பிரேக் போட்டு நிறுத்துவதற்குள் லாரியின் பின்பகுதியில் பஸ் மோதி நின்றது. இதில் லாரியின் முன்பக்க கண்ணாடிகள் சுக்கு நூறாக உடைந்தது. இதனால் பஸ்சில் இருந்த மாணவ -மாணவிகள் கூச்ச–லிட்டனர்.

    இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 6 மாணவ, மாணவிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ–மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    இது குறித்து மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இன்ஸ்பெக்டர் தீபா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    உடனடியாக அந்த கல்லூரி சார்பாக மற்றொரு பஸ் வரவழைக்கப்பட்டு மாணவ மாணவிகள் அந்த பஸ்சில் ஏறிச் சென்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×