என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Bhavani Kuduthurai"
- பவானி கூடுதுறை தென்னகத்தின் காசி என்று அழைக்கப்படுகிறது.
- பவானி கூடு துறையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.
பவானி:
தை அமாவாசையை முன்னிட்டு பவானி கூடு துறையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம், எள்ளும் தண்ணியும் விடுதல், பிண்டம் விடுதல் போன்ற பரிகாரங்கள் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.
பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கிவருகிறது. இந்த கோவில் பின்பகுதியில் இரட்டை விநாயகர் சன்னதி படித்துறை பகுதியில் காவிரி, பவானி, கண்ணுக்கு புலப்படாத அமுதநதி என 3 நதிகள் சங்கமிக்கிறது.
இதனால் கூடுதுறை தென்னகத்தின் காசி என்றும் சிறந்த பரிகார தலமாகவும் இருந்து வருகிறது. மேலும் சுற்றுலா தலமாகவும் உள்ளது. இதனால் கூடுதுறைக்கு தினமும் பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். மேலும் பவுர்ணமி, அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில் வழக்கத்தை விட பக்தர்கள் அதிகளவில் வருவார்கள்.
இதே போல் ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்கள் ஏராளமானோர் வந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் எள்ளும் தண்ணியும் விடுவார்கள். மேலும் திருமண தடை தோஷம், செவ்வாய் தோஷம் உள்பட பல்வேறு பரிகார பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் தை அமாவாசையை யொட்டி இன்று ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கோவை மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் அதிகாலையிலேயே கூடுதுறையில் குவிந்தனர். தொடர்ந்து அவர்கள் கூடுதுறையில் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர்.
இதையொ ட்டி கூடுதுறையில் உள்ள 2 பரிகார மண்டபங்கள் மற்றும் தற்காலிக பரிகார மண்டபம் என பல்வேறு இடங்களில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு பல வகையான தர்ப்பணங்கள் கொடுத்தனர். மேலும் பக்தர்கள் பலர் ஆற்றில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
இதையொட்டி பவானி போலீஸ் துணை சூப்பிரண்டு அமிர்தவர்ஷ்னி தலைமையில் பவானி, சித்தோடு, அந்தியர், அம்மாபேட்டை, பவானி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் என 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் நகரின் முக்கிய 50 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிகரை பகுதியில் அதிகாலை முதலே பொது மக்கள் குவிந்து புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் மற்றும் திதி கொடுத்தனர். இதனால் இப்பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல் கொடுமுடி காவிரி ஆற்றில் இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து புனித நீராடினர். தொடர்ந்து பொதுமக்கள் பலர் திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர். அதேபோல் திருமணமாகாத பெண்கள் மற்றும் ஆண்களும் ஏராளமானோர் வந்து புனித நீராடி பரிகாரம் செய்தனர்.
தொடர்ந்து பக்தர்கள் பலர் மகுடேஸ்வரர் மற்றும் வீர நாராயண பெருமாளை வழிபட்டு சென்றனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள கோவில்களிலும் பக்தர்கள் காலை முதலே பலர் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரியம்மன் கோவிலில் இன்று அதிகாலை அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதையொட்டி ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி மாநிலத்தின் பல பகுதி களில் இருந்தும் பக்தர்கள் பலர் வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் கர்நாடகா மற்றும் கேரளா மாநில பக்தர்கள் பலரும் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
மேலும் கோபி சாரதா மாரியம்மன், பாரியூர் கொண்டத்து காளியம்மன், அந்தியூர் பத்திரகாளியம்மன், சென்னிமலை முருகன் கோவில் உள்பட மாவட்ட த்தின் அனைத்து பகுதிகளில் உள்ள கோவில்களில் இன்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
- அதிகாரிகள் முன்னிலையில் கோவிலில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.
- இதில் பணம் மற்றும் தங்கம், வெள்ளி பொருட்கள் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.
பவானி:
பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்க மேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.
கோவில் பின் உள்ள இரட்டை விநாயகர் சன்னதி படித்துறை பகுதியில் காவிரி, பவானி கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி மற்றும் சிறந்த பரிகார தலம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.
இந்த கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு விழா க்கள் நடந்து வருகிறது. மேலும் பொதுமக்கள் பலர் இங்கு வந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் எள்ளும், தண்ணியும் விடுதல், பிண்டம் விடுதல் போன்ற பல்வேறு பரிகார பூஜைகள் செய்து வருகிறார்கள்.
இந்த கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் காணிக்கை செலுத்திட வசதிக்காக ராஜ கோபுரம், பெருமாள் சன்னதி, பசு பராமரிப்பு, அன்னதானம், சங்கமேஸ்வரர் சன்னதி, வேதநாயகி சன்னதி உள்பட பல்வேறு இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் உணடியல்களில் காணிக்கை செலுத்தி வருகிறார்கள்.
இந்த உண்டி யல்கள் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு கோவில் பணியாளர்கள், தன்னார்வ லர்கள், அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மூலம் காணிக்கைகள் எண்ணப் படுவது வழக்கம்.
அதேபோல் பெருமாள் கோவில் சன்னதியில் இந்து அறநிலையத்துறை துறை அதிகாரிகள் முன்னிலையில் கோவிலில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.
இதில் ரூ.27 லட்சத்து 33 ஆயிரத்து 842 பணம் மற்றும் 35 கிராம் தங்கம், 200 கிராம் வெள்ளி பொருட்கள் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளதாக சங்க மேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
- இன்று அதிகாலை முதலே ஏராளமான அய்யப்ப பக்தர்கள் பவானி கூடுதுறைக்கு வந்தனர்.
- இதனால் கோவில் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
பவானி:
ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் ஆண்டு தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி–மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து முன்னோர் களுக்கு திதி கொடுத்து புனித நீராடி செல்வார்கள்.
ேமலும் அமாவாசை மற்றும் முக்கிய முகூர்த்த நாட்களில் வழக்கத்தை விட அதிகளவில் பக்தர்கள் கூட்டம் வருகை இருக்கும்.
தற்போது கார்த்திகை மாதம் என்பதால் சபரி மலைக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்களும் அதிகளவில் பவானி கூடுதுறைக்கு வர தொடங்கியுள்ளனர். அவர்கள் புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிப்பட்டு சென்று வருகிறார்கள்.
இன்று அதிகாலை முதலே ஏராளமான அய்யப்ப பக்தர்கள் பவானி கூடுதுறைக்கு வந்தனர். மேலும் இன்று ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாள் என்பதாலும் கூட்டம் அலைமோதியது. இதனால் கோவில் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
- கூடுதுறை பகுதியில் இன்று ஏராளமான உள்ளூர் வெளியூர் பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி பரிகாரங்கள் செய்து வழிபாடு மேற்கொண்டு சென்றனர்.
- கடந்த இரு நாட்களாக மழையின் காரணமாக கூடுதுறை பகுதி கூட்டம் இன்றி காணப்பட்ட நிலையில் இன்று சற்று கூட்டம் நிறைந்து காணப்பட்டது.
பவானி:
பவானி சங்கமேஸ்வரர் கோவில் பின்னால் உள்ள கூடுதுறை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று ஏராளமான உள்ளூர் வெளியூர் பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி பரிகாரங்கள் செய்து வழிபாடு மேற்கொண்டு சென்றனர்.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொட ர்ந்து கடந்த 2 நாட்களாக பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சாரல் மழை முதல் மிதமான மழை மற்றும் கனமழை கொட்டி தீர்த்தது.
இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்க ப்பட்ட நிலையில் பொது மக்கள் பலரும் தங்கள் வீடுகளில் முடங்கிக் கிடந்தனர்.
இந்நிலையில் விடுமுறை நாளான இன்று காலை பவானி சங்கமேஸ்வரர் கோவில் பின்பகுதியில் உள்ள கூடுதுறை காவேரி, பவானி, அமுதநதி கூடும் முக்கூடல் சங்கத்தில் உள்ளூர், வெளியூர் பகுதியில் இருந்து ஏராள மான பக்தர்கள் வருகை தந்து காவிரி ஆற்றில் புனித நீராடி தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம், பிண்டம் விடுதல் போன்ற பரிகார பூஜைகள் செய்து சாமி வழிபாடு மேற்கொண்டு சென்றனர்.
கடந்த இரு நாட்களாக மழையின் காரணமாக கூடுதுறை பகுதி கூட்டம் இன்றி காணப்பட்ட நிலையில் இன்று சற்று கூட்டம் நிறைந்து காணப்பட்டது.
- பவானியில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.
- பவானி கூடுதுறையில் விடுமுறை தினமான ஞாயிறு மற்றும் பவுர்ணமி யை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் புனித நீராடி பரிகாரங்கள் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.
பவானி:
பவானி கூடுதுறையில் விடுமுறை தினமான ஞாயிறு மற்றும் பவுர்ணமி யை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் புனித நீராடி பரிகாரங்கள் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.
பவானியில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.
இந்த கோவிலின் பின் பகுதியில் உள்ள இரட்டை விநாயகர் சன்னதி படி த்துறை பகுதியில் காவிரி, பவானி, கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமமாக உள்ளது. மேலும் தென்னகத்தின் காசி என்றும் சிறந்த பரிகார தலம் எனவும் பெயர் பெற்று விளங்கி வருகிறது.
ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வரும் இந்த கோவிலில் உள்ளூர், வெளியூர் வெளி மாநில பக்தர்கள் வந்து கூடுதுறை காவிரி ஆற்றில் புனித நீராடி தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம், எள்ளும் தண்ணீரில் விடுதல், பிண்டம் விடுதல், திருமண தடை தோஷம் நீக்குதல் உட்பட பல்வேறு பரிகார பூஜைகள் செய்து செல்வது வழக்கம்.
இதனால் விடுமுறை நாட்கள், அமாவாசை, பவுர்ணமி மற்றும் விஷேச நட்களில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காண ப்படும்.
இந்த நிலையில் விடுமுறை தினமான இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏராளமான பக்தர்கள் கூடுதுறைக்கு வந்திருந்தனர். மேலும் இன்று பவுர்ணமி தினமாக உள்ளதால் பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் பலர் வந்தனர்.
இதையொட்டி அதிகாலை முதல் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டு மின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் தங்கள் குடுமுபத்துடன் பவானி கூடுதுறைக்கு வந்திருந்தனர். அவர்கள் தொடர்ந்து காவிரி ஆற்றில் புனித நீராடி திதி, தர்ப்பணம் மற்றும் பல்வேறு வகையான பரிகார பூஜைகள் செய்து முன்னோரை வழிபட்டனர்
மேலும் பக்தர்கள் பலர் ஆற்றில் புனித நீராடி சங்கமேஸ்வரரை தரிசனம் செய்தனர்.
இதனால் கூடுதுறை பகுதியில் பல்வேறு இடங்க ளிலும் இன்று அதி காலை முதலே பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.
இதே போல் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள கொடிவேரி அணைக்கு விடுமுறை தினமான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.
அவர்கள் அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் பலர் குடும்பத்துடன் வந்து குளித்து விட்டு தங்கள் கொண்டு வந்த உணவு வகைகளை அங்கே அமர்ந்து சாப்பிட்டனர்.
- பவானி சங்கமேஸ்வரர் கோவில் பின்பகுதியில் உள்ள இரட்டை விநாயகர் சன்னதி பகுதியில் காவிரி, பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிக்கிறது.
- இதனால் இப்பகுதி முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி, பரிகார ஸ்தலம், சுற்றுலா தளம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.
பவானி:
பவானி சங்கமேஸ்வரர் கோவில் பின்பகுதியில் உள்ள இரட்டை விநாயகர் சன்னதி பகுதியில் காவிரி, பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிக்கிறது.
இதனால் இப்பகுதி முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி, பரிகார ஸ்தலம், சுற்றுலா தளம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.
இந்நிலையில் தினசரி கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் ஞாயிற்று க்கிழமை விடுமுறை தினமான இன்று உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
காலை முதல் கூடுதுறைக்கு வருகை தந்து காவிரி ஆற்றில் புனித நீராடி தங்கள் குடும்பத்தில் இறந்த நபர்களுக்கு திதி, எள்ளும், தண்ணியும் விடுதல், பிண்டம் விடுதல் போன்ற பரிகார பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்