பவானி கூடுதுறையில் குவிந்த பக்தர்கள்

பவானி சங்கமேஸ்வரர் கோவில் பின்பகுதியில் உள்ள இரட்டை விநாயகர் சன்னதி பகுதியில் காவிரி, பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிக்கிறது.இதனால் இப்பகுதி முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி, பரிகார ஸ்தலம், சுற்றுலா தளம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.
பவானி கூடுதுறையில் குவிந்த பக்தர்கள்
Published on

பவானி:

பவானி சங்கமேஸ்வரர் கோவில் பின்பகுதியில் உள்ள இரட்டை விநாயகர் சன்னதி பகுதியில் காவிரி, பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிக்கிறது.

இதனால் இப்பகுதி முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி, பரிகார ஸ்தலம், சுற்றுலா தளம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

இந்நிலையில் தினசரி கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் ஞாயிற்று க்கிழமை விடுமுறை தினமான இன்று உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

காலை முதல் கூடுதுறைக்கு வருகை தந்து காவிரி ஆற்றில் புனித நீராடி தங்கள் குடும்பத்தில் இறந்த நபர்களுக்கு திதி, எள்ளும், தண்ணியும் விடுதல், பிண்டம் விடுதல் போன்ற பரிகார பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com