search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் உண்டியல் திறப்பு
    X

    பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் உண்டியல் திறப்பு

    • அதிகாரிகள் முன்னிலையில் கோவிலில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.‌
    • இதில் பணம் மற்றும் தங்கம், வெள்ளி பொருட்கள் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.

    பவானி:

    பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்க மேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.

    கோவில் பின் உள்ள இரட்டை விநாயகர் சன்னதி படித்துறை பகுதியில் காவிரி, பவானி கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி மற்றும் சிறந்த பரிகார தலம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு விழா க்கள் நடந்து வருகிறது. மேலும் பொதுமக்கள் பலர் இங்கு வந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் எள்ளும், தண்ணியும் விடுதல், பிண்டம் விடுதல் போன்ற பல்வேறு பரிகார பூஜைகள் செய்து வருகிறார்கள்.

    இந்த கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் காணிக்கை செலுத்திட வசதிக்காக ராஜ கோபுரம், பெருமாள் சன்னதி, பசு பராமரிப்பு, அன்னதானம், சங்கமேஸ்வரர் சன்னதி, வேதநாயகி சன்னதி உள்பட பல்வேறு இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளது.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் உணடியல்களில் காணிக்கை செலுத்தி வருகிறார்கள்.

    இந்த உண்டி யல்கள் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு கோவில் பணியாளர்கள், தன்னார்வ லர்கள், அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மூலம் காணிக்கைகள் எண்ணப் படுவது வழக்கம்.

    அதேபோல் பெருமாள் கோவில் சன்னதியில் இந்து அறநிலையத்துறை துறை அதிகாரிகள் முன்னிலையில் கோவிலில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.

    இதில் ரூ.27 லட்சத்து 33 ஆயிரத்து 842 பணம் மற்றும் 35 கிராம் தங்கம், 200 கிராம் வெள்ளி பொருட்கள் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளதாக சங்க மேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    Next Story
    ×