என் மலர்
ஈரோடு
- போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.
- அரசு மதுபானத்தை விற்பதற்காக பதுக்கி வைத்திருந்த 4 பேரை கண்டுபிடித்தனர்.
ஈரோடு:
சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க ஈரோடு மாவட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி ஆசனூர், அம்மாபேட்டை, திங்களூர் போலீசார், தங்களது காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சட்டவிரோதமாக அரசு மது பானத்தை அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைத்திருந்த 4 பேரை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 173 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
- உயிர் காக்கும் உணவுகள் பற்றிய கண்காட்சி நடைபெற்றது.
- முன்னதாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் யோகா தியான வகுப்புகள் நடைபெற்றது.
பவானி:
இந்திய மருத்துவம் ஹோமியோபதி துறை ஈரோடு மற்றும் பவானி சித்த மருத்துவ பிரிவு சார்பில் சர்வதேச யோகா தினம் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா கண்காட்சி பவானி அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவப் பிரிவு வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது.
விழாவிற்கு சித்த பிரிவு டாக்டர்.கண்ணுசாமி தலைமை வகித்தார். பவானி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர்.கோபாலகிருஷ்ணன், மனவளக்கலை மன்ற ஆறுமுகம், உலக சமாதான ஆலய ஞானாசியர் ரவிச்சந்திரன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
சிறு தானியங்கள், பாரம்பரிய உணவு வகைகள், சிறு தானியத்திலான திண்பண்டங்கள், முளைகட்டிய தானியங்கள், தொற்றா நோய்களுக்கான உணவுகள், உணவு உண்ணும் முறைகள், உயிர் காக்கும் உணவுகள் பற்றிய கண்காட்சி நடைபெற்றது.
முன்னதாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் யோகா தியான வகுப்புகள் நடைபெற்றது. இதில் பவானி மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு நன்னாரி ஜூஸ், நெல்லிக்கனி ஜூஸ், பருத்திப்பால் உள்பட பல்வேறு வகையான ஜூஸ்கள் வழங்கப்பட்டது.
- மின்சார வயரிங் பணிகளை அரசு உரிமம் பெற்ற மின் ஒப்பந்ததாரர் மூலமே செய்ய வேண்டும்.
- தீ விபத்து ஏற்பட்டால் மெயின் சுவிட்சை நிறுத்த வேண்டும்.
ஈரோடு:
ஈரோடு மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் மரியா ஆரோக்கியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மின்சார வயரிங் பணிகளை அரசு உரிமம் பெற்ற மின் ஒப்பந்ததாரர் மூலமே செய்ய வேண்டும். ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற தரமான மின்சார சாதனங்களை பயன்படுத்துங்கள்.
ரெப்ரிஜிரேட்டர், கிரைண்டர் போன்றவைகளுக்கு 3 பின் சாக்கெட் பிளக்குகளை பயன்படுத்துங்கள்.
மின் கசிவு தடுப்பானை இல்லங்கள் உள்ளிட்ட கட்டிடங்களில் பயன்படுத்துங்கள். உடைந்த சுவிட்சுகள், பிளக்குகளை உடனே மாற்றுங்கள். பழுதான மின்சாதனங்களை பயன்படுத்த வேண்டாம்.
5 ஆண்டுக்கு ஒரு முறை வயரிங்குகளை சோதனை செய்து மாற்றுங்கள். மின் கம்பங்கள், அவற்றின் ஸ்டே வயர்கள் மீது அல்லது மின் கம்பத்தின் மீதும் கொடி கயிறு கட்டி துணிகளை உலர்த்த கூடாது. குளியலறை, கழிப்பறை போன்ற ஈரமான இடங்களில் சுவிட்சுகளை பொருத்தக்கூடாது.
மின் கம்பங்கள், ஸ்டே கம்பிகளில் கால்நடைகளை கட்டக்கூடாது. மின் கம்பங்களை பந்தலாகவும், விளம்பர பலகை கட்டவும் பயன்படுத்தக்கூடாது.
மழை, பெருங்காற்றால் அறுந்து விழுந்த மேல்நிலை மின்சார கம்பி அருகே செல்ல கூடாது. உடனே மின்வாரியத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மின் கம்பிகள் அருகே செல்லும் மரக்கிளைகளை மின்வாரிய அலுவலர்கள் உதவியுடன் அகற்ற வேண்டும். அவசர நேரத்தில் மின் இணைப்பை விரைந்து துண்டிக்கும்படி மின் கருவிகளின் சுவிட்சுகளை அமைக்க வேண்டும்.
மின்சார தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பான்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். தீ விபத்து ஏற்பட்டால் மெயின் சுவிட்சை நிறுத்த வேண்டும்.
இடி, மின்னலின் போது வெளியே இருக்காதீர்கள். கான்கிரீட், கூரை வீடுகளின் கீழ் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடையலாம். குடிசை, மரங்களின் கீழ் தண்ணீர் தேங்கிய இடங்களில் நிற்கக்கூடாது. மின்சாதனங்களை பயன்படுத்தக்கூடாது.
மேலும் மின் புகார்களை மின்னகம் எண்: 94987 94987, வாட்ஸ் அப் எண்: 94458 51912 என்ற எண்களில் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- பெருந்துறை போலீஸ் நிலையத்தில் மத்திய அரசு குழுவின் அதிகாரிகள் மேற்கொண்டனர்.
- இந்த ஆய்வின்போது பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் உடன் இருந்தார்.
பெருந்துறை:
நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் உள்ள போலீஸ் நிலை யங்களில் மத்திய அரசு சார்பில் ஆய்வு செய்து, சிறந்த போலீஸ் நிலையங்களுக்கு ஆண்டு தோறும் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.
இதேபோல் தமிழக அரசு சார்பிலும் ஆய்வு செய்ய ப்பட்டு சிறந்த போலீ்ஸ் நிலையங்களுக்கு விருது வழங்கப்படும். அதன்படி மத்திய அரசு கண்காணிப்பு குழுவினர் தமிழகம் முழுக்க 110 போலீஸ் நிலையங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் அக்குழு ஆய்வு செய்தது. தொடர்ந்து பெருந்துறை போலீஸ் நிலையத்தில் மத்திய அரசு குழுவின் அதிகாரிகளான மகேந்திரன், கணேசன் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் குற்ற தடுப்பு நடவடிக்கைகள், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட பணிகள், விபத்துகளை குறைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள், கணினி மூலம் குற்றப்பதிவேடுகளை பதிவேற்றம் செய்வது (சிசிடிஎன்எஸ்), போலீஸ் நிலையத்தில் பொது மக்களை வரவேற்கும் முறை, போலீஸ் நிலையம் மற்றும் சுற்றுப்புறத்தை சுத்தமாக பராமரிக்கும் விதம், போலீசார் சீருடை அணிந்த விதம், தினசரி நடப்பு நிகழ்வுகள் மேற்கொள்ளும் விதங்களை அக்குழுவினர் மதிப்பீடு செய்தனர்.
இந்த மதிப்பீட்டின் அறிக்கையை மத்திய அரசு க்கு சமர்பித்த பின்னர், மாநிலங்கள் வாரியாக அதிக மதிப்பெண் பெறும் போலீஸ் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு, சிறந்த போலீஸ் நிலையம் என்ப தற்கான விருது வழங்க ப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆய்வின்போது பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் உடன் இருந்தார்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கடையை சோதனை செய்தனர்.
- கடையில் இருந்து ஒரு கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு:
கோபிசெட்டிபாளையம் சப்-இன்ஸ்பெக்டர் சிவாஜி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் . அப்போது ஒரு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கடையை சோதனை செய்தனர். அப்போது கடையில் தடை செய்யப்பட்ட கூலிப், ஹான்ஸ் பாக்கெட், விமல் பான் மசாலா பாக்கெட் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ராஜகோபால் (57) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் கடையில் இருந்து ஒரு கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- அந்தியூர் பகுதிக்கு பகுதி நேர மோட்டார் வாகன அலுவலகம் அமைத்து தர வேண்டும்.
- வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர், பர்கூர், சின்னத்தம்பி பாளையம், வெள்ளையம்பாளையம், சங்கராபாளையம், எண்ணமங்கலம், செல்லம் பாளையம், நால்ரோடு, செம்புளிசாம்பாளையம், புதுமேட்டூர், முனியப்பம்பாளையம், நகலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பவானி மோட்டார் வாகன அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான வாகனங்கள் வாகன புதுப்பிப்பதற்கும், புதிய வாகனங்கள் பதிவு செய்வதற்கும் மற்றும் விபத்து ஏற்படும் வாகனங்களை கொண்டு சென்று காண்பிப்பதற்கும் ஏராளமான வண்டிகள் செல்கின்றது.
மேலும் வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கும் செல்ல வேண்டி உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்தியூர் பகுதிக்கு கோபியில் மோட்டார் வாகன அலுவலகம் செயல்பட்டு வந்தது. அங்கிருந்து பவானிக்கு அலுவலகம் பிரிக்கப்பட்டு அங்கு வாகனங்கள் அனைத்தும் பவானியில் காண்பிக்கப்பட்டு வருகிறது.
இதில் பர்கூர் மலைப்பகுதியில் இருந்து பவானிக்கு வண்டிகளை புதுப்பிக்க செல்ல வேண்டுமென்றால் 70 கிலோ மீட்டருக்கு மேல் ஆகிறது.மேலும் தற்போது அந்தியூர் தாலுகாவாக பிரிக்கப்பட்டதையடுத்து அந்தியூர் பகுதிக்கு மோட்டார் வாகன அலுவலகம் கொண்டு வர வேண்டும் என்றும்,
மேலும் அந்தியூர் பகுதியில் இருந்து தான் இரண்டு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிக அளவில் பவானிக்கு சென்று வருகிறது இங்கு வாடகை கார்,இன்ப சுற்றுலா செல்ல தேவைப்படும் டிராவல்ஸ் டெம்போ உள்ளிட்ட வாகனங்கள் அதிக அளவில் உள்ளது.
அதே போல் அந்தியூரை சுற்றி செங்கல் சூளைகள் இருப்பதினால் லாரிகளும் அதிக அளவில் இயங்கி வருகிறது .இருசக்கர வாகனங்களும் அதிக அளவில் புதியதாக வாங்குபவர்கள் பதிவு செய்வதற்கு பவானி செல்ல வேண்டி உள்ளது .
இதனை கருத்தில் கொண்டு அந்தியூர் பகுதிக்கு பகுதி நேர மோட்டார் வாகன அலுவலகம் அமைத்து தர வேண்டும் என்று வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- சின்னசாமி தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார்.
- அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக கூறினர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே உள்ள பனகஹள்ளி, ஈ..எம்.பி. தோட்டத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (58). விவசாயி. இவரது தோட்டத்தில் கடந்த 13 மாதங்களாக சின்னசாமி (60). என்பவர் வேலை பார்த்து வந்தார்.
பழனிச்சாமி ஒரு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க கோவை மாவட்டம், அன்னூர் சென்றுவிட்டார்.
இந்த நிலையில், பழனிச்சாமிக்கு போன் செய்த சின்னசாமி தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். பழனிச்சாமி, உடனடியாக தனது தம்பி துரைசாமிக்கு போன் மூலமாக தகவல் தெரிவித்துள்ளார்.
உடனடியாக ஆம்புலன்சுடன் சென்ற துரைசாமி, சின்னசாமியை மீட்டு, தாளவாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சின்னச்சாமி இறந்துவிட்டதாக கூறினர்.
இறந்த சின்னசாமியின் குடும்பத்தினர் குறித்து தகவல் எதுவும் தெரியாததால், சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சின்னசாமியின் உடல் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- வழக்கு ஈரோடு மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
- இதில் தர்மனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
ஆப்பக்கூடல்:
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் கள்ளியூர் டேங்க் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தர்மன் (வயது 51). விவசாயி. இவருடைய மனைவி கமலா. இவர்க ளுக்கு ஒரு மகன் உள்ளார். கமலா குடும்ப பிரச்சினை காரணமாக சில வருடங்க ளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் தனிமையில் இருந்து வந்த தர்மன் கீழ்வாணி மூங்கில்பட்டி பகுதியை சேர்ந்த விஜய சாந்தி (வயது 24) என்பவரை 2–-வது திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது. விஜய சாந்தி தொடர்ந்து பகல் மற்றும் நள்ளிரவு நேரத்தில் செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கடந்த 30.01.2019 அன்று அதிகாலை கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற் பட்டது. அப்போது விஜய சாந்தியை மண்வெட்டி யால் தர்மன் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த விஜயசாந்தி சம்பவ இடத்தி லேயே உயிர் இழந்தார். பின்னர் தர்மன் ஆப்ப க்கூடல் கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தகுமாரிடம் சரண் அடைந்தார்.
இதை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் ஆப்பக்கூடல் போலீசில் சம்பவம் குறித்து புகார் அளித்தார். அதன்பேரில் ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மனை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு பவானி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. பின்னர் அந்த வழக்கு ஈரோடு மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பு கூறினார். இதில் தர்மனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் எம்.ஜெயந்தி ஆஜராகி இருந்தார்.
இதையடுத்து தண்டனை விதிக்கப்பட்ட தர்மன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
- வெளிமாநில தொழிலாளர்களின் விபரங்களை வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
- பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் தொழிலாளர் நலத்துறை அலுவலர்களால் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஈரோடு:
சென்னை முதன்மை செயலாளர், தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் ஆணையின்படியும், கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையர் தமிழரசி உத்தரவின்படியும், ஈரோடு தொழிலாளர் இணை ஆணையர் லீலாவதி அறிவுரையின்படியும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்களை இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
இது குறித்து ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை கூடுதல் தொழிலாளர் ஆணையர் (சமரசம்) கடந்த 15-ந் ேததி காணொலி மூலம் நடத்தப்பட்ட கூட்டத்தில் கடைகள் மற்றும் நிறுவனங்கள், தொழிலாளர் நலத்துறையில் படிவம் III சான்று பெற்று வெளிமாநில தொழிலாளர்கள் விபரங்களை தொழிலாளர் நலத்துறையின் மேற்படி வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும் பேக்கரிகள் மற்றும் உணவு நிறுவனங்கள் உணவு நிறுவன உரிமம் பெற்று, தங்களது நிறுவனங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களின் விபரங்களை மேற்படி வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
மோட்டார் போக்கு வரத்து நிறுவனங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களின் விபரங்களை மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டத்தின் கீழ் உரிமம் பெற்று பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
கோழிப்பண்ணைகள், செங்கல் சூளைகள், சுயவேலைசெய்வோர், வேளாண் தொழில், உள்ளாட்சி அமைப்புகளில் ( மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி) பணிபுரிவோர், தனியார் மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர் விபரங்களை வேலையளிப்பவர் மேற்படி வலைத்தளத்தில் பயனாளர் குறியீடு மற்றும் கடவுச்சொல் பயன்படுத்தி பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
மேற்காணும் நிறுவனங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களின் விபரங்களை https://labour.tn.gov.in/ism/ என்ற வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
அவ்வாறு பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் ஆய்வின் சமயம் கண்டறியப்படும் நேர்வில், தொழிலாளர் நலத்துறை அலுவலர்களால் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
- மூதாட்டி ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பவானி:
பவானி அடுத்த லட்சுமி நகர் பகுதியில் சேலம்-கோவை பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு வேப்ப மரத்தில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை கண்ட பொதுமக்கள் சித்தோடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் மரத்தில் தூக்கு போட்டு மரத்தில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்த மூதாட்டி உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த மூதாட்டி பச்சை கலர் பூ போட்ட சேலையால் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்ற எந்த விபரமும் தெரியவில்லை. இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
- கூட்டுறவுத்துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர்க்கடன் குறித்தும் ஆய்வு செய்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில் ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர், ஆணையர் (ஆவணகாப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி த்துறை) பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர், ஆணையர் (ஆவணகாப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித்துறை) பிரகாஷ் வேளாண்மை- உழவர் நலத்துறை சார்பில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி த்துறை சார்பில் அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டம் சமத்துவபுர குடியிருப்புகள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ஜல்ஜீவன் மிஷன், அம்ருத் 2.0, தூய்மை பாரத இயக்கம் 2.0 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நிலுவையில் உள்ள பட்டாக்கள், வட கிழக்கு பருவ மழை முன்னே ற்பாடு பணிகள், பள்ளி க்கல்வி த்துறை சார்பில் இல்லம் தேடிகல்வி, எண்ணும் எழுத்தும் இலக்கியம்.
பள்ளிக் கட்டிடங்களின் உட்கட்டமைப்பு வசதிகள், மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மக்களைத் தேடி மருத்துவம், சிறப்பு திட்ட செயலாக்கம், நான் முதல்வன், உங்கள் தொகுதியில் முதல்-அமை ச்சர், முதல்- அமைச்சரின் காலை உணவு திட்டம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ஊட்டச்சத்து உறுதி செய் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்ட ப்பணிகள் குறித்து தொடர்புடைய துறை அலுவலர்களு டன் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் கூட்டுறவுத்துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர்க்கடன் குறித்தும் ஆய்வு செய்தார்.
மேலும் தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் ஈரோடு மாவட்டத்தில் உள்ளஅனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையிலும் மற்றும் முதல்-அமைச்சரின் செயல்பாட்டிற்க்கு உறுதுணையாக இருக்கும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து தங்களது பணியினை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். மற்றும் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிரா மஊராட்சிகள் ஆகிய பகுதிகளில் பொது மக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைத்திடவேண்டும் என அலுவலர்களுக்கு ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) நார ணவ்ரே மனிஷ் சங்கர்ராவ் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) செல்வராஜன், இணை இயக்குநர் (வேளாண்மை -உழவர் நலத்துறை) வெங்கடேசன் (பொ), ஈரோடு அரசு மருத்துவ க்கல்லூரி மருத்துவ மனை முதல்வர் டாக்டர் வள்ளி, துணை இயக்குநர் (சுகாதாரபணிகள்) டாக்டர் சோமசுந்தரம், மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணை ப்பதிவாளர் ராஜ்குமார், மாநகர நல அலுவலர் பிரகாஷ் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- தி.மு.க. ஆட்சியில் எஸ்.ஜ.எப்.ஐ. விளையாட்டு போட்டியில் கூட மாணவர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.
- பேருந்து சேவை குறைக்கப்பட்டதால் இலவச பேருந்து பயணமும் கிடைக்கவில்லை.
ஈரோடு:
செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக்கோரி ஈரோட்டில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.
தமிழ்நாட்டில் 13 ஆண்டுகள் எம்.ஜி.ஆர். ஆட்சி செய்தார். 5 முறை ஜெயலலிதா முதல்வரானார். பிறகு இ.பி.எஸ். மாநிலத்தில் ஆட்சி செய்தார். அத்திக்கடவு-அவினாசி குடிநீர் திட்டம் உட்பட பல நலத்திட்டங்கள் மற்றும் மேம்பாட்டு திட்டங்களை வழங்கினார்.
ஆனால் தி.மு.க. ஆட்சியில் எஸ்.ஜ.எப்.ஐ. விளையாட்டு போட்டியில் கூட மாணவர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. மின் விநியோகம் அவ்வப்போது தடைப்படுகிறது. பேருந்து சேவை குறைக்கப்பட்டதால் இலவச பேருந்து பயணமும் கிடைக்கவில்லை. கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் அதிகரித்து வருகிறது. பல பகுதிகளில் குடிநீர் வினியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
வரி பல மடங்கு உயர்த்தப்பட்டது. வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பால் விலை, சொத்து, தண்ணீர் வரி உயர்த்தப்பட்டது. மதுவின் மூலம் தி.மு.க.வுக்கு பல கோடி ரூபாய் தினசரி கிடைக்கிறது. நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்ற தனது தேர்தல் வாக்குறுதியை தி.மு.க. நிறைவேற்றவில்லை. அ.தி.மு.க. ஆட்சியின் திட்டங்கள் மட்டுமே தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளன. தி.மு.க. ஊழலால் வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். அதைத்தொடர்ந்து தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் 234 தொகுதியில் அ.தி.மு.க அபார வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.






