search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Committee Inspection of"

    • பெருந்துறை போலீஸ் நிலையத்தில் மத்திய அரசு குழுவின் அதிகாரிகள் மேற்கொண்டனர்.
    • இந்த ஆய்வின்போது பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் உடன் இருந்தார்.

    பெருந்துறை:

    நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் உள்ள போலீஸ் நிலை யங்களில் மத்திய அரசு சார்பில் ஆய்வு செய்து, சிறந்த போலீஸ் நிலையங்களுக்கு ஆண்டு தோறும் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.

    இதேபோல் தமிழக அரசு சார்பிலும் ஆய்வு செய்ய ப்பட்டு சிறந்த போலீ்ஸ் நிலையங்களுக்கு விருது வழங்கப்படும். அதன்படி மத்திய அரசு கண்காணிப்பு குழுவினர் தமிழகம் முழுக்க 110 போலீஸ் நிலையங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் அக்குழு ஆய்வு செய்தது. தொடர்ந்து பெருந்துறை போலீஸ் நிலையத்தில் மத்திய அரசு குழுவின் அதிகாரிகளான மகேந்திரன், கணேசன் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் குற்ற தடுப்பு நடவடிக்கைகள், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட பணிகள், விபத்துகளை குறைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள், கணினி மூலம் குற்றப்பதிவேடுகளை பதிவேற்றம் செய்வது (சிசிடிஎன்எஸ்), போலீஸ் நிலையத்தில் பொது மக்களை வரவேற்கும் முறை, போலீஸ் நிலையம் மற்றும் சுற்றுப்புறத்தை சுத்தமாக பராமரிக்கும் விதம், போலீசார் சீருடை அணிந்த விதம், தினசரி நடப்பு நிகழ்வுகள் மேற்கொள்ளும் விதங்களை அக்குழுவினர் மதிப்பீடு செய்தனர்.

    இந்த மதிப்பீட்டின் அறிக்கையை மத்திய அரசு க்கு சமர்பித்த பின்னர், மாநிலங்கள் வாரியாக அதிக மதிப்பெண் பெறும் போலீஸ் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு, சிறந்த போலீஸ் நிலையம் என்ப தற்கான விருது வழங்க ப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த ஆய்வின்போது பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் உடன் இருந்தார்.

    ×