சட்டவிரோதமாக மது விற்ற 4 பேர் கைது

போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.அரசு மதுபானத்தை விற்பதற்காக பதுக்கி வைத்திருந்த 4 பேரை கண்டுபிடித்தனர்.
சட்டவிரோதமாக மது விற்ற 4 பேர் கைது
Published on

ஈரோடு:

சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க ஈரோடு மாவட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி ஆசனூர், அம்மாபேட்டை, திங்களூர் போலீசார், தங்களது காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சட்டவிரோதமாக அரசு மது பானத்தை அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைத்திருந்த 4 பேரை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 173 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com