search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farmer sentenced to"

    • வழக்கு ஈரோடு மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
    • இதில் தர்மனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் கள்ளியூர் டேங்க் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தர்மன் (வயது 51). விவசாயி. இவருடைய மனைவி கமலா. இவர்க ளுக்கு ஒரு மகன் உள்ளார். கமலா குடும்ப பிரச்சினை காரணமாக சில வருடங்க ளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனால் தனிமையில் இருந்து வந்த தர்மன் கீழ்வாணி மூங்கில்பட்டி பகுதியை சேர்ந்த விஜய சாந்தி (வயது 24) என்பவரை 2–-வது திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது. விஜய சாந்தி தொடர்ந்து பகல் மற்றும் நள்ளிரவு நேரத்தில் செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக கடந்த 30.01.2019 அன்று அதிகாலை கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற் பட்டது. அப்போது விஜய சாந்தியை மண்வெட்டி யால் தர்மன் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த விஜயசாந்தி சம்பவ இடத்தி லேயே உயிர் இழந்தார். பின்னர் தர்மன் ஆப்ப க்கூடல் கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தகுமாரிடம் சரண் அடைந்தார்.

    இதை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் ஆப்பக்கூடல் போலீசில் சம்பவம் குறித்து புகார் அளித்தார். அதன்பேரில் ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மனை கைது செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு பவானி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. பின்னர் அந்த வழக்கு ஈரோடு மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பு கூறினார். இதில் தர்மனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

    இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் எம்.ஜெயந்தி ஆஜராகி இருந்தார்.

    இதையடுத்து தண்டனை விதிக்கப்பட்ட தர்மன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    ×