வேப்ப மரத்தில் மூதாட்டி தூக்குபோட்டு தற்கொலை

மூதாட்டி ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேப்ப மரத்தில் மூதாட்டி தூக்குபோட்டு தற்கொலை
Published on

பவானி:

பவானி அடுத்த லட்சுமி நகர் பகுதியில் சேலம்-கோவை பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு வேப்ப மரத்தில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதை கண்ட பொதுமக்கள் சித்தோடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் மரத்தில் தூக்கு போட்டு மரத்தில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்த மூதாட்டி உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த மூதாட்டி பச்சை கலர் பூ போட்ட சேலையால் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்ற எந்த விபரமும் தெரியவில்லை. இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com