என் மலர்tooltip icon

    ஈரோடு

    • போலீசார் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
    • மேலும் அவர்களிடம் இருந்த போலி லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வேட்டைக்காரன் கோவில் பஸ் நிறுத்தம் அருகில் தடை செய்யப்பட்ட லாட்டரி மற்றும் போலி லாட்டரிகள் விற்பனை செய்யப்படுவதாக கோபி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடை த்தது.

    அதன்பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாரை கண்டதும் தப்பி செல்ல முயன்ற 2 பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    அதில் அவர்கள் அதே பகுதியை சே ர்ந்த மோக ன்ராஜ் (37), வடுகபாளையம் புதூரை சேர்ந்த குமார் (45) என்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் குயில் என்ற பெயரில் அச்சடிக்கப்பட்ட போலி லாட்டரிச் சீட்டுக ள் 10 எண்ணிக்கையில் இருந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த போலி லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

    • பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் 4 பேர் மது குடித்து கொண்டிருந்தனர்.
    • பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பெரிய கொடி வேரி அணை பகுதி அருகே ரோட்டில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் 4 பேர் மது குடித்து கொண்டிருந்தனர்.

    அந்த கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சுந்தரன் (43), சேதராமன் (30), சுரேந்திரன்(29), திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பிரேம் ராஜ் (40) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

    இதேபோல் கடத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் கந்தசாமி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அளுக்குளி தேவேந்திர நகர் பகுதி அருகே அதே பகுதியை சேர்ந்த மதகன்குமார்(27) என்பவர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மது அருந்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.

    இதேபோல் காசிபாளையம் இந்திரா நகர் பகுதி அருகே அதே பகுதியை சேர்ந்த பரணி (25) என்பவர் மது அருந்தி பொதுமக்க ளுக்கு இடையூறு ஏற்படு த்தும் வகையில் செய ல்பட்டதால் அவரையும் போலீசார் கைது செய்தனர். 

    • எலி பேஸ்ட் மருந்தை எடுத்து சாப்பிட்டு விட்டதாக கூறினார்.
    • ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு வேண்டி பாளையம் கந்தசாமி தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (60). இவரது இரண்டாவது மகன் ஆனந்தராஜ் (27), இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    குடிப்பழக்கம் இருந்துள்ளது. எந்த ஒரு வேலைக்கும் செல்லாமல் சுற்றி திரிந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் ஆனந்த ராஜ் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி உள்ளார். அதைக்கட்ட முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் சில நாட்களாக ஆனந்தகுமார் சோகத்துடன் இருந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வீட்டிற்கு மது போதையில் வந்த ஆனந்தராஜ் பிரியாணி மற்றும் சிக்கன் கொண்டு வந்து சாப்பிட்டுள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் வாந்தி எடுத்து உள்ளார்.

    இது குறித்து அவரது பெற்றோர் கேட்டபோது, தனக்கு உயிருடன் இருக்க பிடிக்கவில்லை. எனவே எலி பேஸ்ட் மருந்தை எடுத்து சாப்பிட்டு விட்டதாக கூறினார்.

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்து அவரது பெற்றோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மகனை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சையில் இருந்த ஆனந்தகுமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஹாலில் உள்ள விட்டத்தில் பாலகிருஷ்ணன் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த வடுகபாளையம் புதூர், ஜி.கே.நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (39). இவர் சொந்தமாக லோடு ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவரது மனைவி சிவமாலதி.

    இந்த நிலையில் மதுவுக்கு அடிமையான பாலகிருஷணன் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    சம்பவத்தன்று மது போதையில் இருந்த பாலகிருஷ்ணனை அவரது தந்தை ஆறுமுகம் கைத்தாங்கலாக வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

    இதைக்கண்டு ஆத்திரமடைந்த மனைவி சிவமாலதி, படுக்கையறைக்குள் சென்று படுத்துகொண்டார். சுமார் 2 மணி நேரம் கழித்து அவர் மீண்டும் வெளியில் வந்து பார்த்தபோது ஹாலில் உள்ள விட்டத்தில் பாலகிருஷ்ணன் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே பாலகிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மண்ணை உறுதிப்படுத்தி வளப்படுத்தும் மரமாக பனை விளங்குகிறது.
    • விவசாயிக்கும் அதிகப்பட்சம் 50 விதைகள், 15 நாற்றுகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை துணை இயக்குனர் மரகத மணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழகத்தின் மாநில மரமும், தமிழர்களின் வாழ்வோடு இணைந்தது பனை மரம். நிலத்தடி நீரை அதிகரித்தும், மண் அரிப்பை தடுத்தும், மண்ணை உறுதிப்படுத்தி வளப்படுத்தும் மரமாக பனை விளங்குகிறது.

    மண்ணுக்கு உகந்த மரமாக விளங்குவதுடன் அடி முதல் நுனி வரை பயனளித்து வாழ்வாதாரம் தருகிறது.

    எனவே பனை சாகுபடியை ஊக்குவிக்க, ஈரோடு மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர் துறை சார்பில் பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் பனை விதைகள் 30 ஆயிரம் மற்றும் நாற்றுகள் 250 வினியோகம் செய்யப்பட உள்ளது.

    ஒவ்வொரு விவசாயிக்கும் அதிகப்பட்சம் 50 விதைகள், 15 நாற்றுகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.

    விருப்பம் உள்ள விவசாயிகள் http://tnhorticulture.tn.gov.in/tnhortnet என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். அல்லது அருகே உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவல கத்தை தொடர்பு கொண்டும் பயன் பெறலாம்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் வகையிலும் சிறப்பு முகாம்கள் நடை பெற்றது.
    • இதுவரை சுமார் 16 லட்சம் வாக்காளர்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு:

    வாக்காளர் பட்டியலில் 2 இடங்களில் ஒரே நபரின் பெயர் இடம் பெறுவதை தடுக்கவும், வாக்காளர் பட்டியலை செம்மை படுத்தவும் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இப்பணியானது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நடைபெற்று வருகிறது.

    இப்பணியினை விரைந்து முடிக்கவும், பொதுமக்கள் எளிமையாக ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் வகையிலும் சிறப்பு முகாம்களும் நடை பெற்றது. ஈரோடு மாவட்ட த்தில் 2,222 வாக்குசாவடி மையங்களில் இந்த சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, பெருந்துறை, மொடக்குறிச்சி, பவானி, கோபி, அந்தியூர், பவானிசாகர் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தமுள்ள 19 லட்சத்து 45 ஆயிரம் வாக்காளர்களில் இதுவரை சுமார் 16 லட்சம் வாக்காளர்கள், தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

    வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை ஆன்லைன் மூலம் பொதுமக்களே எளிதில் இணைக்க முடியும். ஆன்லைன் மூலம் இணைக்க தெரியாதவர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.

    மாவட்டத்தில் மொத்தமுள்ள 19 லட்சத்து 45 ஆயிரம் வாக்காளர்களில் ஏறக்குறைய 16 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள், வாக்காளர் அடையாள அட்டையுடன் தங்களது ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

    அதாவது 67 சதவீதம் வாக்காளர்கள் ஆதார் எண்ணை இணை த்துள்ள னர். தற்போது வாக்காளர் அட்டையுடன், ஆதார் இணைக்கும் பணியை எளிதாக்கும் வகையில் புதிய சாப்ட்வேர் மாற்றப்பட்டு வருகின்றது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்குள் முழுமையாக இணைக்கப்பட்டு விடும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • அரசு மருத்துவமனையில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • மருத்துவமனையில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நள்ளிரவில் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது கலெக்டர் அரசு மருத்துவ மனையில் செயல்படும் பொது மருத்துவம்,பொது அறுவை சிகிச்சை, நோயாளிகள் பிரிவு, குழந்தைகள் நலமருத்துவம்,

    மகப்பேறு மருத்துவப் பிரிவு மற்றும் 24 மணிநேரம் மகப்பேறு மற்றும் பச்சிளங் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவான சீமாங் சென்டர் ஆகிய பிரிவுகளையும் ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.

    மேலும் மருத்துவமனையில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் ஆய்வு செய்தார். இரவு நேர பணியில் இருக்கும் மருத்து வர்களின் விபரங்கள் குறி த்தும் கேட்டறிந்தார்.

    முன்னதாக மருத்துவமனையில் செயல்படும் மருந்து இருப்பு அறை மற்றும் மருந்தகத்தி னையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மருத்துவர்கள், செவிலி யர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • போலீசார் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
    • அவர்களிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் விற்பனையைத் தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி ஈரோடு டவுன் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வி.வி.சி.ஆர். நகர், அய்யனாரப்பன் கோவில் பின்புறம் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

    அதில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த தீனா (21), கருங்கல்பாளையத்தை சேர்ந்த முகேஷ் (21) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் 2 பேரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து, போலீசார் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ரூ.1,500 மதிப்பிலான 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    • ஏலத்துக்கு மொத்தம் 4381 மூட்டை கொப்பரைகள் கொண்டு வரப்பட்டிருந்தன.
    • மொத்தம் 2 லட்சத்து 13 ஆயிரம் கிலோ கொப்பரைகள் விற்பனையாகின.

    ஈரோடு:

    பெருந்துறை வேளா ண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாரந்தோறும் சனி மற்றும் புதன்கிழ மைகளில் கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது.

    அதன்படி, நேற்று நடைபெற்ற ஏலத்துக்கு மொத்தம் 4381 மூட்டை கொப்பரைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் முதல் தரக்கொப்பரைகள் 2519 மூட்டைகள் வரப்பெற்றிருந்தன.

    இவை குறைந்தபட்ச விலையாக கிலோ ரூ. 72.15க்கும், அதிகபட்சமாக ரூ. 78.90க்கும் விற்பனையாகின. இரண்டாம் தரக்கொப்பரைகள் 1862 மூட்டைகள் கொண்டு வரப்பட்டிருந்தன.

    இவை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 30.21க்கும், அதிகபட்சமாக ரூ. 75.40க்கும் விற்பனையாகின. மொத்தம் 2 லட்சத்து 13 ஆயிரம் கிலோ கொப்பரைகள் விற்பனையாகின.

    இவற்றின் மொத்த விற்பனை மதிப்பு ரூ.1 கோடியே 60 லட்சம் ஆகும் என விற்பனைக் கூடக் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

    • 25 கிலோ எடை கொண்ட செம்மறியாடு ஒன்று ரூ.17 ஆயிரம் வரை விற்கப்பட்டது.
    • 25 கிலோ எடை கொண்ட செம்மறி ஆடுகள் ரூ.30 ஆயிரம் வரை விற்பனையானது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் நகராட்சி வாரச்சந்தை புதன் மற்றும் வியாழன் அன்று கூடுகிறது. இது தமிழ்நாட்டின் 2-வது மிகப்பெரிய சந்தையாகும்.

    இந்த சந்தையில் கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய வெளிமாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளி மாவட்டங்களான திருப்பூர், நாமக்கல், கரூர், நீலகிரி மற்றும் புளியம்பட்டி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை விற்பதும், வாங்கி செல்வதும் வழக்கம்.

    இந்நிலையில் இன்று கூடிய ஆட்டு சந்தையில் வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 400-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. இதில் 25 கிலோ எடை கொண்ட செம்மறியாடு ஒன்று ரூ.17 ஆயிரம் வரை விற்கப்பட்டது.

    மேலும் 25 கிலோ எடை கொண்ட செம்மறி ஆடுகள் ரூ.30 ஆயிரம் வரையும் விற்பனையானது. மொத்தம் இன்று கூடிய ஆட்டுச் சந்தையில் பக்ரீத் பண்டிகையையொட்டி செம்மறியாடுகள் ரூ.70 லட்சத்துக்கு விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • அ.தி.மு.க. சார்பில் வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • நிர்வாகிகள் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு ஊழல் முறைகேடுகள், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் முதலியவற்றை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும், லஞ்ச வழக்கில் அமலக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இன்று அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதல் - அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

    அதன்படி இன்று ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த அ.தி.மு.க. சார்பில் வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.செ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ. முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம் ஆகியோர் தலைமை தாங்கினர். எம்.எல்.ஏ.க்கள், ஜெயக்குமார், பண்ணாரி, முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க நிர்வாகிகள் தி.மு.க. அரசை கண்டித்தும், அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வலியுறுத்தியும் கண்டன கோஷம் எழுப்பினர்.

    இதில் முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணைமேயர் கே.சி. பழனிச்சாமி, மாநகராட்சி எதிர்க்கட்சித்தலைவர் எஸ்.டி.தங்கமுத்து, பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், கேசவமூர்த்தி, சூரம்பட்டி ஜெகதீஸ், கோவிந்தராஜன், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் வீரக்குமார், மாணவரணி மாவட்ட இணைச்செயலாளர் நந்தகோபால், பெரியார் நகர் அவைத்தலைவர் மீன் ராஜா, வக்கீல் அணி தலைவர் துரை சக்திவேல், சிந்தாமணி இயக்குனர் பொன்சேர்மன், முருகானந்தம், மாதையன், முன்னாள் கவுன்சிலர் கோபால், மாவட்ட பிரதிநிதி கஸ்தூரி, சூரிய சேகர் உள்பட கலர் கலந்து கொண்டனர்.

    • யோகமூர்த்தி வீச்சரிவாளுடன் வந்து ராமச்சந்திரனை சரமாரியாக வெட்டி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
    • சூரம்பட்டி பகுதியில் பதுங்கி இருந்த கந்தன் என்கிற யோக மூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி சமயபுரம் மாரியம்மன் கோவில் பின்புறம் பகுதியை சேர்ந்தவர் குண்டு ராமு என்கிற ராமச்சந்திரன் (35). கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் கந்தன் என்கிற யோகமூர்த்தி (42). தள்ளுவண்டியில் சமோசா வியாபாரம் செய்து வந்தார். இவர்கள் இருவரும் நண்பர்கள். இவர்களுக்குள் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் சம்பவத்தன்று இரவு ராமச்சந்திரன் சூரம்பட்டி கறிக்கடையில் தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது யோகமூர்த்தி வீச்சரிவாளுடன் அங்கு வந்து ராமச்சந்திரனின் பின்பக்க தலையிலும், வலது கையிலும் சரமாரியாக வெட்டி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராமச்சந்திரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கந்தன் என்கிற யோகமூர்த்தியை தேடி வந்தனர். இந்நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இந்த ராமச்சந்திரனுக்கு தலையில் 13 தையல்களும், இடது கையில் 7 தையல்களும் போடப்பட்டன. அவர் தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இரவு சூரம்பட்டி பகுதியில் பதுங்கி இருந்த கந்தன் என்கிற யோக மூர்த்தியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு யோகமூர்த்தியின் மகனை ராமச்சந்திரன் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த யோகமூர்த்தி, ராமச்சந்திரனை பழி வாங்க திட்டம் போட்டு வந்துள்ளார்.

    இதன்படி சம்பவத்தன்று ராமச்சந்திரன் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த யோகமூர்த்தி அவரை வெட்டியது விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் யோகமூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    ×