லோடு ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

ஹாலில் உள்ள விட்டத்தில் பாலகிருஷ்ணன் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
லோடு ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த வடுகபாளையம் புதூர், ஜி.கே.நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (39). இவர் சொந்தமாக லோடு ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவரது மனைவி சிவமாலதி.

இந்த நிலையில் மதுவுக்கு அடிமையான பாலகிருஷணன் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

சம்பவத்தன்று மது போதையில் இருந்த பாலகிருஷ்ணனை அவரது தந்தை ஆறுமுகம் கைத்தாங்கலாக வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

இதைக்கண்டு ஆத்திரமடைந்த மனைவி சிவமாலதி, படுக்கையறைக்குள் சென்று படுத்துகொண்டார். சுமார் 2 மணி நேரம் கழித்து அவர் மீண்டும் வெளியில் வந்து பார்த்தபோது ஹாலில் உள்ள விட்டத்தில் பாலகிருஷ்ணன் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே பாலகிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com