என் மலர்
ஈரோடு
- பர்கூர் பஸ் நிலையம் அருகில் உண்ணாவிரதம் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டது.
- இன்று காலை உணணாவிரதம் இருக்க மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர், பொதுமக்கள் திரண்டு வந்தனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் 1961-ம் ஆண்டு பழங்குடியினர் உண்டு உறைவிட தொட க்கப்பள்ளி தொடங்கப்ப ட்டது.
இப்பள்ளி யானது 1993-ம் ஆண்டு நடுநிலைப் பள்ளி யாகவும், 2009-ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகவும், 2016-ம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள இந்த மேல்நிலைப்பள்ளியில் 380 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
தொடக்க காலம் முதலே, ஆசிரியர் பற்றாக்குறை ஒரு பெரும் பிரச்சனையாக இருந்து வருவதாக கூறப்படு கிறது. 380 பேர் படிக்கும் இந்த பள்ளியில் 11 வகுப்புகள் செயல்படுகி ன்றன. இந்த 11 வகுப்புக ளுக்கும் ஒரே ஒரு தமிழா சிரியர் மட்டுமே உள்ளார். அதேபோல ஆங்கில பாடத்திற்கும் ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார்.
மேல்நிலைப் பள்ளிக்கு தமிழ்,ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பாடங்களுக்கு இதுவரை ஆசிரியர் பணியி டங்களே உருவாக்கப்பட வில்லை. இவ்வாறாக இந்த பள்ளியில் 10 ஆசிரியர் பணியிடங்களும், ஆசிரியர் அல்லாத 5 பணியிடங்களும் உருவாக்கப்படப் பட வில்லை.
இந்த பணியிடங்களை உடனடியாக உருவாக்கி, உரிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் எனக் கோரி 2017-ம் ஆண்டு இப்பள்ளி மாணவ மாணவிகளும், பெற்றோ ர்களும், அரசியல் கட்சி நிர்வாகிகளும் ஒன்றி ணைந்து ஒரு நாள் அடை யாள உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தொடர்ச்சியாக முறையீடுகள் அனுப்பப்பட்டன.
இந்த ஒரு பள்ளி மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் 17 மாவட்ட ங்களில் பழங்குடியினர் நலத்துறை மூலம் நடத்த ப்படும் 320 பள்ளிகளிலும் ஆசிரியர் பற்றாக்குறை, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இன்மை, இப்பள்ளி களை கண்காணி ப்பதற்கான போதிய கட்டமைப்பு வசதிகள் இன்மை உள்ளி ட்டவை குறித்து கல்வியா ளர்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
அதன் அடிப்படையில் அரசு ஆய்வு மேற்கொண்டு, நலத்துறை பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையில் கொண்டு வரப்படும் எனும் அறிவிப்பை கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக அரசு அறிவித்தது.
அந்த அறிவிப்பு இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ளது. அதனை செயல்படுத்தினால் தான் இந்த பிரச்சினை தீரும்.
எனவே அந்த அறிவிப்பை உடனடியாக செயல்படுத்த கோரியும், ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி பர்கூர் பஸ் நிலையம் அருகில் உண்ணா விரதம் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை உணணாவிரதம் இருக்க மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர், பொதுமக்கள் திரண்டு வந்தனர்.
அப்போது அவர்களிடம் அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார். பர்கூர் வருவாய் ஆய்வாளர் பாலமுருகன், கிராம நிர்வாக அலுவலர் பாலு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். உங்கள் கோரி க்கை குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
மேலும் உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்தனர்.
இதையடுத்து பொதுமக்கள், மாணவ, மாணவி கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
- ஈரோடு மண்டல அலுவலகத்துக்கு தினமும் 10 பேர் வரை புதிய தொழில் தொடங்க வருகை புரிகின்றனர்.
- இதில் ஈரோடு மண்டலத்தில் 15 புதிய தொழில் துவங்கப்பட்டுள்ளன.
ஈரோடு:
தமிழத்தில் புதிய தொழில் முனைவோர் நிதி, திட்ட மிடல், வணிகம், வழிகா ட்டுதல், வணிக விரிவாக்கம் போன்ற வசதிகளை பெற, 'ஸ்டார்ட் அப் தமிழ்நாடு' திட்டம் துவங்கப்பட்டது.
இத்திட்டத்தில், பொதுப்பிரிவினர் புதிய தொழில் தொடங்க மானிய முதலீடாக, 10 முதல், 15 லட்சம் ரூபாயும், எஸ்.சி., – எஸ்.டி., தொழில் முனைவோருக்கு, 10 லட்சம் ரூபாய் முதல், 1 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது.
கடந்தாண்டு ஆகஸ்டில் இந்த திட்டத்தை முதல் - அமைச்சர் தொடங்கி வைத்தார். இத்திட்டத்துக்கு, சென்னை, மதுரை, நெல்லை, ஈரோடு ஆகிய இடங்களில் மண்டல அலுவலகமாக 'ஸ்டார்ட் அப் மையங்கள்' செயல்படு கிறது.
ஈரோடு கலெக்டர் அலுவலகம், 6-ம் தளத்தில் உள்ள மண்டல அலு வலகத்தின் கீழ், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி என, 8 மாவட்டங்கள் உள்ளன. இம்மாவட்டங்களில் புதிய தொழில் தொடங்க, இங்கிருந்து வழிகாட்டுகி ன்றனர்.
தொழில் முனைவோர் தங்களது புதிய தொழில் கண்டுபிடிப்புகள், திட்ட அறிக்கை, தொழில் பதிவு, ஒற்றை சாளரை முறையில் அனுமதி பெறுதல் போன்றவற்றை செயல்படுத்து கின்றனர்.
ஈரோடு மண்டல அலுவலகத்துக்கு தினமும் 10 பேர் வரை புதிய தொழில் தொடங்க வருகை புரிகின்றனர்.
இது குறித்து, ஈரோடு மண்டல ஸ்டார்ட் அப் தமிழ்நாடு அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தை தொழில் துறையில் முன்னேறிய மாநிலமாக மாற்றும் வகையில், புதிய தொழில் நுட்பங்களை ஊக்குவிக்க செயல்படுகிறோம். தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்நிறுவனம் தொடங்கி மாநில அளவில், 108 ஸ்டார்ட் அப் தொழில் நிறுவனங்களுக்கு தலா, 10 லட்சம் ரூபாய் மானியம் என, 10.80 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஈரோடு மண்டலத்தில் 15 புதிய தொழில் துவங்கப்பட்டுள்ளன. விவசாயம், ஜவுளி, ஐ.டி., உணவு உள்ளிட்ட பல்வேறு வகை தொழில்கள் துவங்க வழி வகை செய்யப்படுகிறது.
திடக்கழிவு மேலாண்மை, சாயக்கழிவு உள்ளிட்ட ஆலைக்கழிவுகள் சுத்திகரிப்பு, வெளி மாநிலங்களை கையாளுதல் உள்ளிட்ட பல்வேறு திட்ட வரைவுகளை வழங்கி பரிசீலனையில் உள்ளன.
தொழில் தொடங்க விரும்பும் புதிய தொழில் முனைவோர், கல்லுாரி மாணவர்களும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- காரில் தடை செய்யப்பட்ட பான் மசாலா - குட்கா பொருட்கள் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
- 2 கார்கள், ரூ.2.29 லட்சம் மதிப்பிலான 237 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்ய ப்பட்டது.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் கடத்தி கொண்டு செல்லப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து பெருந்துறை போலீசார் மேட்டுப்புதூர்-கள்ளியம்புதூர் சாலை பிரிவில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தனர்.அப்போது அவ்வழியாக 2 கார்கள் வந்தன. போலீசாரை கண்டதும் காரில் இருந்த வர்கள் தப்பியோடி விட்டனர்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனை செய்தனர். அப்போது காரில் தடை செய்யப்பட்ட பான் மசாலா - குட்கா பொருட்கள் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து காரின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் காரில் வந்தவர்கள் பெருந்துறை மடத்துபாளையம் தெற்கு தோட்டத்தை சேர்ந்த ராஜ்குமார்(31), கொங்கு நகர் தாஷ்கண்ட் வீதியை சேர்ந்த தினேஷ்குமார் (31) ஆகியோர் என்பதும், பெருந்துறையைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் பெங்களூருவில் இருந்து கார்கள் மூலம் தினேஷ் குமார் வீட்டுக்கு புகையிலைப் பொருட்களை அனுப்பி வைத்ததும் தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் தினேஷ்குமார் வீட்டுக்கு விரைந்து சென்ற னர். போலீசாரை பார்த்த தும் அங்கிருந்த அவரது தாயார் சிவகாமி (52) என்ப வர் தப்பி ஓட முயன்றார். அவரைப் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் அவரது வீட்டை சோதனையிட்ட போது அங்கும் புகையிலை பொருட்கள் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
பின்னர் சிவகாமியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, அவர் புகையிலை பொருட்கள் கடத்தலுக்கு உதவியாக இருந்ததாக தெரிவித்தார். இதையடுத்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப் படுத்தப்பட்டு கோவை பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் 2 கார்கள், ரூ.2.29 லட்சம் மதிப்பிலான 237 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்ய ப்பட்டது.
இந்த கடத்தலில் மூளையாக செயல்பட்ட சிவகாமி யின் மகன் தினேஷ் குமார் மற்றும் ராஜ்குமார், லட்சு மணன் ஆகியோரை போலீ சார் வலைவீசி தேடி வருகி ன்றனர். இவர்கள் பிடிபட்டால் தான் இந்த கடத்தல் கும்பல் பின்னணியில் வேறு யார் உள்ளார்கள் என தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
- தாளவாடி கிராம ஊராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 225 கிராம ஊராட்சி பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஈரோடு மாவட்டம் தாளவாடி கிராம ஊராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட ப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தாளவாடி ஊராட்சி ஒன்றிய அலு வலகத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து அவர் அங்கு பராமரிக்கப்பட்டு வரும் அலுவலக நடைமுறை கோப்புகள் மற்றும் பதிவேடு களை ஆய்வு செய்து நீண்ட நாட்கள் நிலுவையில் உள்ள கோப்புகள் குறித்து கேட்டறிந்து அதற்கு உடனடி தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் தாளவாடி தாசில்தார் அலுவலகத்தை நேரில் சென்று பார்வை யிட்டு அங்கு பரா மரிக்கப்பட்டு வரும் பதி வேடுகள் மற்றும் அலுவலக கோப்புகள் ஆகியவற்றை பார்வையிட்டார். அதே போல் அங்கு செயல்பட்டு வரும் இ-சேவை மையம், கணினி அறை, பதிவறை ஆகியவற்றை பார்வையிட்டு பொதுமக்கள் வருகை குறித்து கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து தாளவாடி மேம்படுத்த ப்பட்ட அரசு ஆரம்ப சுகா தார நிலையத்தினை பார்வையிட்டு அங்கு செயல்படும் பல் மருத்துவ பிரிவு மற்றும் ஆய்வகம், சித்த மருத்துவ பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு ஆகிய பிரிவுகளை பார்வை யிட்டு ஆய்வு மேற் கொண்டார்.
தொடர்ந்து கலெக்டர் தாளவாடி ஊராட்சி ஒன்றியம் எல்லக்கட்டை, பாரதிபுரம் பகுதியில் ரூ.11 கோடி மதிப்பீட்டில் கட்ட ப்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுமான பணி, கும்மட புரம் சிவம்மா தோட்டம் அருகே ரூ.20.88 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் கான்கிரீட் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ள தையும், இக்கலூர் ஊராட்சி, சிக்கள்ளி பகுதியில் ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் பழுது நீக்கம் செய்யப்பட்ட பணி, ஓசூர் பகுதியில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட ப்பட்டு வருவதையும் ஆய்வு செய்தார்.
ஈரோடு விற்பனை குழு, தாளவாடி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் ரூ.2.82 கோடி மதிப்பீட்டில் 500 மெட்ரிக் டன், குளிர்பத னக்கிடங்கு கட்டப்பட்டு வரும் பணி, ரூ.2 கோடி மதிப்பீட்டில் 1000 மெட்ரிக் டன் அளவிலான தேசிய மின்னணு பரிவர்த்தனை கிடங்கு கட்டப்பட்டு வரும் பணி, திகினாரை முதல் சோழகர் ரெட்டி வரை ரூ.48.90 லட்சம் மதிப்பீட்டில் 2.8 கி.மீட்டர் நீளம் தொலைவிற்கு தார் சாலை அமைக்கும் பணியையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக கலெக்டர் மல்கொத்திபுரம் பகுதியில் விளைநிலங்களில் யானை போகாமல் பாது காப்ப தற்காக அகழியில் அமைக்க ப்பட்டுள்ள சூரிய மின்சக்தி யுடன் கூடிய மின்வேலியை பார்வையிட்டார்.
மேலும், திகினாரை பகுதியில் மனோஜ் குமார் என்ற விவசாயி தனது 30 ஏக்கர் நிலத்தில் ரோஸ்மேரி என்ற செடி வகை பயிரிட்டுள்ளதை பார்வை யிட்டார். இந்த ரோஸ்மேரி செடி வாசனை திரவியம் தயாரிக்க பயன்படுவதால் பெரிய அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் இந்த செடி குறித்து விபரங்களை விவசாயிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து தலமலை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உண்டு உறை விட உயர்நிலைப்பள்ளியை பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டு அங்கு ஆசிரியர் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கணக்கு பாடம் கற்பிப்பதை மாணவர்களோடு தானும் அமர்ந்து பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது, துணை இயக்குநர், ஆசனூர் வனக்கோட்டம் (சத்திய மங்கலம் புலிகள் காப்பகம்) தேவேந்திர குமார் மீனா, தாளவாடி ஒழுங்குமுறை விற்பனை குழு செயலாளர் சாவித்திரி, வட்டார வள ர்ச்சி அலுவலர்கள் மனோ கரன், அர்த்தநாரீஸ்வரன், தாசில்தார் ரவிசங்கர், உதவி பொறியாளர் பாண்டிய ராஜன் உட்பட பலர் உடன் இருந்தனர்.
- பரமசிவம் வயிற்று வலி காரணமாக எலி பேஸ்ட் தின்று விட்டதாக தகவல் தெரிவித்துள்ளார்.
- சிகிச்சை பெற்று வந்த பரமசிவம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஈரோடு:
ஈரோடு வீரப்பன் சத்திரம், சுந்தர் வீதியைச் சேர்ந்தவர் அம்சவேல். இவரது மகன் பரமசிவம் (21). எலக்ட்ரீஷியன். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று சிவகிரி அருகே உள்ள சுள்ளிக்காடு எனும் பகுதிக்கு சென்ற பரமசிவம் வயிற்று வலி காரணமாக எலி பேஸ்ட் தின்றுவிட்டதாக தனது தந்தைக்கு போன் மூலமாக தகவல் தெரிவித்துள்ளார்.
உடனடியாக தந்தை அம்சவேல் அங்கு சென்று அவரை மீட்டு அருகில் உள்ள அறச்சலூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார்.
அங்கு முதல்-உதவி பெற்ற பின் உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பரமசிவம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் சிவகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கோபிசெட்டிபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்று கொண்டார்.
- இவர் இதற்கு முன்பு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டாக தங்கவேல் பதவி உயர்வு பெற்று பொறுப்பேற்று கொண்டார்.
இவர் இதற்கு முன்பு ஓசூர் ஹட்கோ இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
- தினக்கடன், வாரகடன், 15 நாட்களுக்கு ஒரு முறை, மாதம் ஒருமுறை என தவணை முறையில் பணத்தை செலுத்தி வந்தனர்.
- வேலையின்மை, போதுமான வருமானம் இல்லாததால் அப்பகுதி பொதுமக்கள் குடும்பத்தை சமாளிக்கவே திணறி வருகின்றனர்.
மொடக்குறிச்சி:
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட தூரப்பாளையம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பல நிதி நிறுவனங்களில் கடன் பெற்றுள்ளனர்.
அதில் தினக்கடன், வாரகடன், 15 நாட்களுக்கு ஒரு முறை, மாதம் ஒருமுறை என தவணை முறையில் பணத்தை செலுத்தி வந்தனர்.
இந்நிலையில் பொதுமக்கள் ஒவ்வொருவரும் 10-க்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்களில் கடன் பெற்றுள்ளதால் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களுக்கு கடன் தொகையை திருப்பி செலுத்த முடியவில்லை. மேலும் வேலையின்மை, போதுமான வருமானம் இல்லாததால் அப்பகுதி பொதுமக்கள் குடும்பத்தை சமாளிக்கவே திணறி வருகின்றனர்.
இந்நிலையில் நிதி நிறுவனங்களில் இருந்து வரும் வசூல் செய்யும் நபர்கள் அப்பகுதி பொதுமக்களிடம் கடும் நெருக்கடியோடு கடன் தொகை திருப்பி கேட்பதால் அவர்கள் கால அவகாசம் கேட்டு வந்தனர்.
கால அவகாசம் தர இயலாததால் நிதி நிறுவனங்களில் இருந்து வரும் வசூல்தாரர்கள் இரவு பகல் முழுவதும் அங்கேயே முகாமிட்டு கடன் தொகையை திருப்பி கேட்கின்றனர். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகும் கடன் வாங்கிய குடும்பத்தினர் அதிகாலையிலேயே நிதி நிறுவனங்களில் இருந்து வசூல்தாரர்கள் வந்து விடுவார்கள் என்ற பீதியில் மொடக்குறிச்சி சுற்றுவட்டாரத்தில் உள்ள பண்ணை வீடுகளில் தங்களது குழந்தைகளுடன் பயந்து தஞ்சம் அடைந்து விடுகின்றனர்.
பின்னர் மீண்டும் நள்ளிரவிற்கு மேல் வீட்டிற்கு வரும் அப்பகுதி பொதுமக்கள் மீண்டும் அதிகாலையிலேயே தலைமறைவாகிவிடும் சூழல் ஏற்பட்டு வருகிறது. பெற்றோர்களின் இந்த நிலைமையால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதனையடுத்து கடந்த வாரம் அப்பகுதி பொதுமக்கள் நிதி நிறுவனங்களிடமிருந்து தப்பிக்கவும், கடன் தொகை செலுத்துவதற்கு ஏதுவாக எங்களுக்கு கால அவகாசம் வாங்கித் தருமாறு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் வந்தால்தான் வேலைக்கு செல்வதன் மூலம் போதிய வருமானம் கிடைக்கும். கடனை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுப்பதால் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடிவதில்லை.
இதனால் பள்ளிகளில் இருந்து குழந்தைகளை ஏன் அனுப்பவில்லை என்று செல்போன் மூலம் ஆசிரியர் விளக்கம் கேட்கிறார். எனவே எங்களுக்கு 6 மாத காலம் கால அவகாசம் வேண்டும். நாங்கள் கடனை திருப்பி செலுத்தி விடுகிறோம். சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நிதி நிறுவனங்களிடம் இருந்து கால அவகாசம் வாங்கி கொடுப்பதோடு, கடன் வாங்கிய குடும்பத்தினர் அனைவரையும் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.
- கடந்த 20-ந்தேதி மாலை லட்சுமி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.
- அக்கம், பக்கத்தினர் ஆட்டையாம்பட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
கோபி:
சேலம் சின்னசீரகா பாடி சமத்துவபுரத்தை சேர்ந்தவர் காளியம்மாள் என்கிற லட்சுமி (47). இவர் முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டு ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் வண்டிபேட்டை கோவில் பகுதியை சேர்ந்த ரகு என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார்.
கடந்த 20-ந்தேதி மாலை லட்சுமி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அக்கம், பக்கத்தினர் ஆட்டையாம்பட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது லட்சுமி வெட்டிக்கொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் பிணமாக கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் விசாரணையில் 2-வது கணவர் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சந்தேகத்தின் பேரில் அவரை தேடிவந்தனர்.
இதற்கிடையே ரகு கோபி செட்டிபாளையம் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு தமிழரசு முன்னிலையில் இன்று சரண் அடைந்தார்.
- வீடு வீடாக சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரித்து வருகிறார்கள்.
- வரும் 26-ந் தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. மாநகராட்சி பகுதியில் தினமும் 250 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
மாநகராட்சி சார்பில் ஒப்பந்த அடிப்படையில் 1200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தினக்கூலியாக தூய்மை பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் 500-க்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்களும் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இவர்கள் வார்டு வாரியாக பிரிக்கப்பட்டு தூய்மை பணிகள் மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் வீடு வீடாக சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரித்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஒப்பந்த அடிப்படையில் தினக்கூலிகளாக வேலை செய்யும் தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி ஈரோடு மாநகராட்சி பகுதியில் தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் விடுவதை கைவிட வேண்டும். அதற்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும். 480 நாட்கள் பணியாற்றிய தினக்கூலி பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்.
குறைந்தபட்ச ஊதியமாக நாள் ஒன்றுக்கு ரூ.725 ஏப்ரல் முதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., எல்.பி.எப் உள்ளிட்ட தொழிற்சங்கம் சார்பில் ஏற்கனவே பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றன.
கடந்த 7-ந் தேதி மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் வேலையை புறக்கணித்து மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர் கடந்த 7-ந் தேதி முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த 12-ந் தேதி 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதையடுத்து நேற்று ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் முன்னிலையில் 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இதில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆனால் மாநகராட்சி சார்பில் யாரும் பங்கேற்க வில்லை. இதையடுத்து வரும் 26-ந் தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இன்று முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு மாநகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை முதலே ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலைக்கு செல்லாமல் பணியை புறக்கணித்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் சின்னசாமி, செயலாளர் மணியன், சி.ஐ.டி.யு மாவட்ட தலைவர் சுப்பு, சங்கச்செயலாளர் மாணிக்கம், எல்.பி.எப். செயலாளர் கிருஷ்ணன், ஆதித்தமிழர் தூய்மை தொழிலாளர் பேரவை மாரியப்பன், சுய உதவிக் குழு பணியாளர் சங்கம் லெனின் கதிரவன் உள்பட அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் திரளாக பங்கேற்றுள்ளனர்.
இதில் 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக ஈரோடு மாநகராட்சி பகுதியில் பெரும்பாலான இடங்களில் குப்பைகள் மலை போல் தேங்கி உள்ளன.
மாநகராட்சி பகுதியில் தினமும் 250 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இன்று தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக ஒரு சில நிரந்தர பணியாளர்கள் மட்டும் குப்பைகளை அள்ளி சென்றனர். இதனால் மாநகர் பகுதியில் 150 டன் குப்பைகள் தேங்கியுள்ளன.
- வேலைக்கு சேர்ந்த மறுநாளில் இருந்து சிறுமியிடம் இருந்து அவரது தாயாருக்கு எந்த தகவலும் வரவில்லை.
- சிறுமியின் தாய் மீண்டும் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மில்லுக்கு வந்து தனது மகள் குறித்து விசாரித்தார்.
கோபி:
திருவண்ணாமலை மாவட்டம் சீனதங்கல் என்ற பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவர் இறந்து விட்டதால் அந்த பெண்ணுக்கும் அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி பரசுராமன் (41) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் அந்த பெண் 17 வயதான தனது மகளுக்கு வேலை தேடி வந்தார். அப்போது ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் உள்ள ஒரு மில்லில் வேலை இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு அந்த பெண் தனது மகளை கோபிசெட்டிபாளையம் அருகில் உள்ள மில்லுக்கு அழைத்து வந்தார். அவர் தனக்கு உதவியாக கள்ளக்காதலன் பரசுராமனையும் அழைத்து வந்தார். பின்னர் மகளை மில்லில் விட்டு விட்டு அவர்கள் மீண்டும் திருவண்ணாமலைக்கு சென்று விட்டனர்.
இந்த நிலையில் வேலைக்கு சேர்ந்த மறுநாளில் இருந்து சிறுமியிடம் இருந்து அவரது தாயாருக்கு எந்த தகவலும் வரவில்லை. இதையடுத்து சிறுமியின் தாய் மீண்டும் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மில்லுக்கு வந்து தனது மகள் குறித்து விசாரித்தார்.
அப்போது சிறுமி வேலைக்கு சேர்ந்த மறுநாளே பரசுராமன் வந்து அழைத்து சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் இது குறித்து கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கவிதாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் மேனகா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சிறுமி மற்றும் சிறுமியை கடத்தி சென்ற பரசுராமனை தேடிவந்தனர். அப்போது அவர்கள் திருப்பூரில் ஒரு வீட்டில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் திருப்பூர் விரைந்து சென்று சிறுமியை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தாயின் கள்ளக்காதலன் பரசுராமனை போச்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து ஈரோடு மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
- ஈரோடு மாவட்டம் முழுவதும் 24 மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது.
- இந்த கடைகளில் பணியாற்றிய பணியாளர்கள் மது கடைகளில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு:
தமிழக சட்டசபையில் நடைபெற்ற மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தின் போது, தமிழ்நாட்டில் 500 மது கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து எந்தெந்த கடைகளை மூடலாம் என்பது குறித்து அந்தந்த மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டனர்.
குறிப்பாக பள்ளி, கல்லூரிக்கு மிக அருகில் இருக்கும் மது கடைகள், பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் பகுதியில் உள்ள மது கடைகள், மத வழிபாட்டு தலங்கள் அருகே உள்ள கடைகள் போன்றவற்றை மூடுவதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதேபோல் வருமானம் குறைவாக உள்ள கடைகள், பணியாளர்கள் எண்ணி க்கை குறைவாக உள்ள கடைகள், அருகருகே இருக்கும் கடைகள்.
இது மட்டும் இல்லாமல் மது கடைகளை மூட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் இருந்து தொடர்ந்து புகார் கூறப்பட்ட கடைகள் ஆகிய வற்றையும் கணக்கெடுப்பின் பணியின் போது அதிகாரி கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதன்படி எந்தெந்த கடைகளை மூட வேண்டும் என்ற பட்டியலை ஈரோடு மாவட்ட டாஸ்மாக் அதிகாரி கள் சேகரித்தனர். அதன் பிறகு இது குறித்து ஆலோசி க்கப்பட்டது. இதில் இறுதியாக ஈரோடு மாவட்டம் முழுவதும் 24 மதுபான கடைகள் மூடப்ப டும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி ஈரோடு மாநகரில் ஈரோடு ரெயில் நிலையம் எதிர்புறம் உள்ள டாஸ்மாக் கடை, அகில் மேடு வீதியில் உள்ள 2 டாஸ்மாக் கடைகள், சம்பத் நகரில் உள்ள ஒரு கடை, சூரம்பட்டி நால்ரோட்டில் உள்ள ஒரு கடை, சென்னி மலை ரோட்டில் உள்ள ஒரு கடை, கனிராவுத்தர் குளம் பகுதியில் உள்ள ஒரு கடை உள்பட மாநகர் பகுதியில் 8 கடைகளும், இதேப்போல் மாவட்டம் முழுவதும் உள்ள 16 கடைகள் என 24 மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது.
இந்த கடைகளில் பணியாற்றிய பணியாளர்கள் அருகருகே இருக்கும் மற்ற மது கடைகளில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசின் இந்த நட வடிக்கைக்கு பொதுமக்களும், சமூக ஆர்வலர்க ளும் வரவேற்பு தெரிவித்து ள்ளனர்.
- கோபி கலை அறிவியல் கல்லூரியில் மாபெரும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
- சிறப்பு விருந்தினராக தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டு கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்த உள்ளார்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் தன்னார்வ சங்கங்கள் சார்பில் கோபி கலை அறிவியல் கல்லூரியில் வரும் 24-ந் தேதி காலை 9 மணிக்கு மாபெரும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா முன்னிலை வகிக்கிறார்.
சிறப்பு விருந்தினராக தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டு நான் முதல்வன் என்ற தலைப்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகளிடையே கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்த உள்ளார்.






