என் மலர்
நீங்கள் தேடியது "தமிழ்நாடு திட்டத்தில்"
- ஈரோடு மண்டல அலுவலகத்துக்கு தினமும் 10 பேர் வரை புதிய தொழில் தொடங்க வருகை புரிகின்றனர்.
- இதில் ஈரோடு மண்டலத்தில் 15 புதிய தொழில் துவங்கப்பட்டுள்ளன.
ஈரோடு:
தமிழத்தில் புதிய தொழில் முனைவோர் நிதி, திட்ட மிடல், வணிகம், வழிகா ட்டுதல், வணிக விரிவாக்கம் போன்ற வசதிகளை பெற, 'ஸ்டார்ட் அப் தமிழ்நாடு' திட்டம் துவங்கப்பட்டது.
இத்திட்டத்தில், பொதுப்பிரிவினர் புதிய தொழில் தொடங்க மானிய முதலீடாக, 10 முதல், 15 லட்சம் ரூபாயும், எஸ்.சி., – எஸ்.டி., தொழில் முனைவோருக்கு, 10 லட்சம் ரூபாய் முதல், 1 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது.
கடந்தாண்டு ஆகஸ்டில் இந்த திட்டத்தை முதல் - அமைச்சர் தொடங்கி வைத்தார். இத்திட்டத்துக்கு, சென்னை, மதுரை, நெல்லை, ஈரோடு ஆகிய இடங்களில் மண்டல அலுவலகமாக 'ஸ்டார்ட் அப் மையங்கள்' செயல்படு கிறது.
ஈரோடு கலெக்டர் அலுவலகம், 6-ம் தளத்தில் உள்ள மண்டல அலு வலகத்தின் கீழ், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி என, 8 மாவட்டங்கள் உள்ளன. இம்மாவட்டங்களில் புதிய தொழில் தொடங்க, இங்கிருந்து வழிகாட்டுகி ன்றனர்.
தொழில் முனைவோர் தங்களது புதிய தொழில் கண்டுபிடிப்புகள், திட்ட அறிக்கை, தொழில் பதிவு, ஒற்றை சாளரை முறையில் அனுமதி பெறுதல் போன்றவற்றை செயல்படுத்து கின்றனர்.
ஈரோடு மண்டல அலுவலகத்துக்கு தினமும் 10 பேர் வரை புதிய தொழில் தொடங்க வருகை புரிகின்றனர்.
இது குறித்து, ஈரோடு மண்டல ஸ்டார்ட் அப் தமிழ்நாடு அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தை தொழில் துறையில் முன்னேறிய மாநிலமாக மாற்றும் வகையில், புதிய தொழில் நுட்பங்களை ஊக்குவிக்க செயல்படுகிறோம். தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்நிறுவனம் தொடங்கி மாநில அளவில், 108 ஸ்டார்ட் அப் தொழில் நிறுவனங்களுக்கு தலா, 10 லட்சம் ரூபாய் மானியம் என, 10.80 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஈரோடு மண்டலத்தில் 15 புதிய தொழில் துவங்கப்பட்டுள்ளன. விவசாயம், ஜவுளி, ஐ.டி., உணவு உள்ளிட்ட பல்வேறு வகை தொழில்கள் துவங்க வழி வகை செய்யப்படுகிறது.
திடக்கழிவு மேலாண்மை, சாயக்கழிவு உள்ளிட்ட ஆலைக்கழிவுகள் சுத்திகரிப்பு, வெளி மாநிலங்களை கையாளுதல் உள்ளிட்ட பல்வேறு திட்ட வரைவுகளை வழங்கி பரிசீலனையில் உள்ளன.
தொழில் தொடங்க விரும்பும் புதிய தொழில் முனைவோர், கல்லுாரி மாணவர்களும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






