என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "visited Gopi on 24th"

    • கோபி கலை அறிவியல் கல்லூரியில் மாபெரும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
    • சிறப்பு விருந்தினராக தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டு கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்த உள்ளார்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் தன்னார்வ சங்கங்கள் சார்பில் கோபி கலை அறிவியல் கல்லூரியில் வரும் 24-ந் தேதி காலை 9 மணிக்கு மாபெரும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா முன்னிலை வகிக்கிறார்.

    சிறப்பு விருந்தினராக தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டு நான் முதல்வன் என்ற தலைப்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகளிடையே கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்த உள்ளார்.

    ×