search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "67 percent"

    • ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் வகையிலும் சிறப்பு முகாம்கள் நடை பெற்றது.
    • இதுவரை சுமார் 16 லட்சம் வாக்காளர்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு:

    வாக்காளர் பட்டியலில் 2 இடங்களில் ஒரே நபரின் பெயர் இடம் பெறுவதை தடுக்கவும், வாக்காளர் பட்டியலை செம்மை படுத்தவும் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இப்பணியானது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நடைபெற்று வருகிறது.

    இப்பணியினை விரைந்து முடிக்கவும், பொதுமக்கள் எளிமையாக ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் வகையிலும் சிறப்பு முகாம்களும் நடை பெற்றது. ஈரோடு மாவட்ட த்தில் 2,222 வாக்குசாவடி மையங்களில் இந்த சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, பெருந்துறை, மொடக்குறிச்சி, பவானி, கோபி, அந்தியூர், பவானிசாகர் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தமுள்ள 19 லட்சத்து 45 ஆயிரம் வாக்காளர்களில் இதுவரை சுமார் 16 லட்சம் வாக்காளர்கள், தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

    வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை ஆன்லைன் மூலம் பொதுமக்களே எளிதில் இணைக்க முடியும். ஆன்லைன் மூலம் இணைக்க தெரியாதவர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.

    மாவட்டத்தில் மொத்தமுள்ள 19 லட்சத்து 45 ஆயிரம் வாக்காளர்களில் ஏறக்குறைய 16 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள், வாக்காளர் அடையாள அட்டையுடன் தங்களது ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

    அதாவது 67 சதவீதம் வாக்காளர்கள் ஆதார் எண்ணை இணை த்துள்ள னர். தற்போது வாக்காளர் அட்டையுடன், ஆதார் இணைக்கும் பணியை எளிதாக்கும் வகையில் புதிய சாப்ட்வேர் மாற்றப்பட்டு வருகின்றது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்குள் முழுமையாக இணைக்கப்பட்டு விடும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×