search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "foreign workers"

    • நகரங்களை காட்டிலும், புறநகர் பகுதிகளான கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் கவனம் செலுத்தி களமிறங்கி வேலை செய்கின்றனர்.
    • பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தொழில்துறையினருடன் கலந்தாய்வு கூட்டத்தை ஏற்பாடு செய்தனர்.

    திருப்பூர்:

    பாராளுமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் வெற்றிக்கனியை பறிக்கும் நோக்கில் திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க., வினர் பல்வேறு தேர்தல் நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளனர். நகரங்களை காட்டிலும், புறநகர் பகுதிகளான கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் கவனம் செலுத்தி களமிறங்கி வேலை செய்கின்றனர். அதன்படி தினமும் மண்டலம், சக்தி கேந்திரம், பூத் நிர்வாகிகள் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து, மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.

    தொழில் நகரமான திருப்பூரில் உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கம், ஒடிசா, ஜார்கண்ட், ராஜஸ்தான் என பல்வேறு வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் இங்கு தங்கி பல்வேறு பனியன் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். வெளிமாநில தொழிலாளர்கள், தொழில் துறையினரின் ஓட்டுக்களை வளைக்கும் நோக்கில், பா.ஜ.க., பிறமொழி பிரிவினர் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அவ்வகையில், சில நாட்களுக்கு முன் திருப்பூரில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தொழில்துறையினருடன் கலந்தாய்வு கூட்டத்தை ஏற்பாடு செய்தனர்.

    அதில், ராஜஸ்தான் மாநில எம்.பி., ராஜேந்திரகுமார் கெலாட் பங்கேற்று கலந்துரையாடினார். இரண்டாம் கட்டமாக, மற்றொரு கூட்டத்தை பா.ஜ.க.,வினர் வரும் 12-ந் தேதி திருப்பூரில் ஏற்பாடு செய்துள்ளனர். இதுகுறித்து பா.ஜ.க., நிர்வாகிகள் கூறியதாவது:-திருப்பூரில் வாழும் வடமாநில தொழிலாளர்களை சந்தித்து ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தி வருகின்றோம். இப்பணி பா.ஜ.க., பிறமொழி பிரிவினர் நடத்தி வருகின்றனர். தற்போது, இரண்டாம் கட்டமாக ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம். திருப்பூருக்காக நீங்கள், உங்களுக்காக திருப்பூர், எங்களுடன் நீங்கள், உங்களுடன் நாங்கள் என பல தலைப்புகளில் அவர்களை சந்தித்து தேர்தல் பிரசாரத்தை துவக்கியுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • குடியேற்ற சீர்திருத்த சட்டத்திற்கு ஆதரவாக 388 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
    • 53 சதவீத நிறுவனங்களில் தொழிலாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.

    ஜெர்மனி நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டிற்கு திறமையான தொழிலாளர்களை உலகெங்கிலும் இருந்து கொண்டு வரும் வகையில் வடிவமைக்கப்பட்ட குடியேற்ற சீர்திருத்தங்களுக்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

    ஆளும் மைய-இடது கூட்டணியால் கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்டத்திருத்தம் தொடர்பாக, நேற்று பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக 388 உறுப்பினர்கள் வாக்களித்தனர். 234 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்; 31 பேர் வாக்களிக்கவில்லை.

    கிறிஸ்டியன் டெமாக்ரடிக் யூனியன் மற்றும் அதன் பவேரிய சகோதரக் கட்சியான கிறிஸ்டியன் சோஷியல் யூனியன் இணைந்த பழமைவாத பாராளுமன்ற குழு இச்சட்டத்திற்கு எதிராக வாக்களித்தது. இந்த சட்டத்தால், திறமையற்ற தொழிலாளர்கள் ஜெர்மனியில் நுழைவது எளிதாகி விடும் என அவர்கள் குறிப்பிட்டனர். தீவிர வலதுசாரி கட்சியும் சட்டத்திற்கு எதிராக வாக்களித்தது.

    வேலைக்கான விசா விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் தொழில்முறை தகுதிகள், வயது மற்றும் மொழித்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நாட்டில் நுழைவதில் இருந்த தடைகளை குறைக்கும் வகையில் புள்ளிகள் அடிப்படையிலான (points-basis) அமைப்பு இச்சட்டத்தில் இடம் பெற்றுள்ளது.

    இந்த ஆண்டு திறமையான தொழிலாளர்கள் இல்லாததால் காலியிடங்களை நிரப்புவதில் உள்ள சிக்கல்களால் ஜெர்மனியில் பாதிக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அல்லாடி வருவதாக ஜெர்மன் தொழில் வர்த்தக சபை கூறியிருக்கிறது.

    ஜெர்மன் தொழில் வர்த்தக சபையானது நாடு முழுவதிலும் 22000 நிறுவனங்களை ஆய்வு செய்ததில், பணியமர்த்துவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் நிறுவனங்களின் விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த நிலையில் உள்ளது என்பது தெரியவந்துள்ளது. 53 சதவீத நிறுவனங்களில் தொழிலாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.

    அமெரிக்காவில் பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்கள் கடந்த வருட இறுதியிலிருந்தே ஆட்குறைப்பு செய்து வருகின்ற நிலையில், இதனால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களுக்கு, ஜெர்மனியிலிருந்து வரும் இச்செய்தி மகிழ்ச்சியளிக்கும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

    • வெளிமாநில தொழிலாளர்களின் விபரங்களை வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
    • பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் தொழிலாளர் நலத்துறை அலுவலர்களால் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    ஈரோடு:

    சென்னை முதன்மை செயலாளர், தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் ஆணையின்படியும், கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையர் தமிழரசி உத்தரவின்படியும், ஈரோடு தொழிலாளர் இணை ஆணையர் லீலாவதி அறிவுரையின்படியும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்களை இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

    இது குறித்து ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    சென்னை கூடுதல் தொழிலாளர் ஆணையர் (சமரசம்) கடந்த 15-ந் ேததி காணொலி மூலம் நடத்தப்பட்ட கூட்டத்தில் கடைகள் மற்றும் நிறுவனங்கள், தொழிலாளர் நலத்துறையில் படிவம் III சான்று பெற்று வெளிமாநில தொழிலாளர்கள் விபரங்களை தொழிலாளர் நலத்துறையின் மேற்படி வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

    மேலும் பேக்கரிகள் மற்றும் உணவு நிறுவனங்கள் உணவு நிறுவன உரிமம் பெற்று, தங்களது நிறுவனங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களின் விபரங்களை மேற்படி வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    மோட்டார் போக்கு வரத்து நிறுவனங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களின் விபரங்களை மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டத்தின் கீழ் உரிமம் பெற்று பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

    கோழிப்பண்ணைகள், செங்கல் சூளைகள், சுயவேலைசெய்வோர், வேளாண் தொழில், உள்ளாட்சி அமைப்புகளில் ( மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி) பணிபுரிவோர், தனியார் மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர் விபரங்களை வேலையளிப்பவர் மேற்படி வலைத்தளத்தில் பயனாளர் குறியீடு மற்றும் கடவுச்சொல் பயன்படுத்தி பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

    மேற்காணும் நிறுவனங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களின் விபரங்களை https://labour.tn.gov.in/ism/ என்ற வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

    அவ்வாறு பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் ஆய்வின் சமயம் கண்டறியப்படும் நேர்வில், தொழிலாளர் நலத்துறை அலுவலர்களால் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    • தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
    • ஆய்வின்போது கண்டறியும்பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

    வேலூர்:

    வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் தகவல்களை சேகரிக்கும் பொருட்டு தொழிலாளர் ஆணையம்அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதில் கூறியிருப்பதாவது:-

    வேலூர் மற்றும் ராணிப் பேட்டை மாவட்டத்தைச் சார்ந்த கடைகள் நிறுவ னங்கள், வணிக நிறுவனங்கள், ஓட்டல் மற்றும் ரெஸ்டாரென்ட், கோழி பண்ணைகள், மருத்து வமனைகள், உள்ளாட்சி அமைப்புகள் (மாநக ராட்சி, நகராட்சி, பேரூ ராட்சி), பள்ளிகள், கல்லூ ரிகள் மற்றும் முடிதிருத்தும் நிலையங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் வெளி மாநில தொழிலா ளர்களின் விவரங்களையும், சுயவேலை செய்பவர்கள், பாதுகாவலராக பணி புரிபவர்கள், வீட்டுவேலை செய்யும் வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களையும், தொழிலாளர்துறையின் வலைதளத்தில் (http://abour.tn.gov.in/ism) நிறுவனங்களின் உரிமையாளர்கள் பயனாளர் குறியீடு மற்றும் கடவுச்சொல் ஏற்படுத்தி வெளிமாநில தொழி லாளர்களின் ஆதார் எண், செல்போன் எண், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் கள் என்ற முழு விவரத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படாத நிறுவ னங்களை ஆய்வின்போது கண்டறியும்பட்சத்தில் தொழிலாளர் துறையால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வெளி மாநில தொழிலாளர்களின் விவரங்களையும் தொழிலாளர் நலத்துறையின் http://labour.tn.gov.in/ism என்ற இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
    • தொழிலாளர்களின் ஆதார் எண் விவரங்கள், செல்போன் எண், எந்த மாநிலத்தை சேர்ந்தவர் போன்ற விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    சேலம்:

    கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையர் தமிழரசி, சேலம் இணை ஆணையர் புனிதவதி, உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சேலம் மாவட்டத்தில் உள்ள கடைகள், நிறு வனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங் கள், கோழிப்பண்ணைகள், விவசாயம், உள்ளாட்சி அமைப்புகள், ஆஸ்பத்திரி கள், பள்ளிகள், கல்லூரிகள், முடி திருத்தும் நிலையங் களில் பணிபுரியும் வெளி மாநில தொழிலாளர்களின் விவரங்களையும், சுய வேலை செய்பவர்கள், பாதுகாவலராக பணிபுரிவோர், வீட்டு வேலை செய்யும் வெளி மாநில தொழிலாளர்களின் விவரங்களையும் தொழிலாளர் நலத்துறையின் http://labour.tn.gov.in/ism என்ற இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    அவர்களின் பயனாளர் குறியீடு, கடவுசொல் ஏற்படுத்தி வெளி மாநில தொழிலாளர்களின் ஆதார் எண் விவரங்கள், செல்போன் எண், எந்த மாநிலத்தை சேர்ந்தவர் போன்ற விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். கடைகள், நிறு வனங்கள், தொழிலாளர்கள் நலத்துறையில் படிவம் 3 சான்று பெற்றும் பதிவு செய்ய வேண்டும். மேலும் பேக்கரிகள் மற்றும் உணவு நிறுவன உரிமம் பெற்று தங்களது நிறுவனங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

    மோட்டார் போக்கு வரத்து நிறுவனங்களில் பணிபுரிவர்களின் விவரங்களை மோட்டார் போக்குவரத்து தொழிலா ளர்கள் சட்டத்தின் கீழ் உரிமம் பெற்று பதிவு செய்ய வேண்டும். இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டாத நிறுவனங்கள் ஆய்வின் போது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப் படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் திருப்பூரில் கல்வியை தொடர மிகவும் சிரமப்படுகின்றனர்.
    • திருப்பூர் மாவட்டத்தில் வெளிமாநில தொழிலாளர் அதிகம் உள்ளனர்.

    திருப்பூர்:

    வேலை வாய்ப்புக்காக பீகார், ஒடிசா, ஜார்கண்ட், மகாராஷ்டிரா என பல்வேறு வெளிமாநில தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் திருப்பூருக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர். வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் திருப்பூரில் கல்வியை தொடர மிகவும் சிரமப்படுகின்றனர்.

    தமிழ் மொழி தெரியாததால் பல குழந்தைகள் படிப்பை பாதியில் கைவிடுகின்றனர். இதனால், அவர்களுக்கு தமிழ் மொழி கற்போம் திட்டத்தில் இணைத்து தமிழ் கற்றுக்கொடுக்கப்பட உள்ளது. இதற்கான முதற்கட்ட கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை துணை இயக்குனர் சந்தோஷ், உதவி இயக்குனர் சேதுபதி ஆகியோர் பேசினர். பின்னலாடை உற்பத்தி உள்பட பல்வேறு துறை சார்ந்த நிறுவன மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இது குறித்து தொழிலக பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் வெளிமாநில தொழிலாளர் அதிகம் உள்ளனர். தமிழ் தெரியாததால் வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் பலர் பள்ளி படிப்பை பாதியிலேயே கைவிடுகின்றனர். சிலர் குழந்தை தொழிலாளராகிவிடுகின்றனர்.

    தமிழ் மொழி கற்போம் திட்டத்தில் வெளிமாநில குழந்தைகளுக்கு அவர்களது தாய்மொழி வாயிலாகவே தமிழ் கற்றுக்கொடுக்கப்படும். இதற்காக தமிழ் மொழியோடு இந்தி, ஒடியா என 2 மொழித்திறனுள்ளோர் பயிற்சியாளராக நியமிக்கப்படுவர்.

    தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர், அவர்களது குழந்தைகளின் கல்வி நிலை குறித்த விவரங்களை அளிக்க, மனிதவள மேம்பாட்டு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ் மொழி கற்பதன்மூலம் வெளிமாநில தொழிலாளர் குழந்தைகள் இடை நிற்றல் தவிர்க்கப்படும் என்றனர்.

    வெளிநாட்டு தொழிலாளர்கள் சொந்த நாடுகளுக்கு செல்ல தாங்கள் பணியாற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அனுமதி தேவை இல்லை என்ற சட்ட திருத்தத்தை கத்தார் அரசு கொண்டு வந்துள்ளது. #Qatar
    தோஹா:

    வளைகுடா நாடான கத்தாரில் இந்தியர்கள் உள்பட அதிக அளவிலான வெளிநாட்டு தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சொந்த காரணங்களுக்காக தொழிலாளர்கள் நாடு திரும்புவதற்கு, எளிதில் விசா அனுமதி கிடைக்காத வண்ணம் சட்டங்கள் அங்கு இருந்தது.

    இதனால் கத்தாரில் தங்கி பணிபுரியும் வெளிநாட்டவர்கள், சொந்த நாடு திரும்புவது கடினமாக இருந்தது. இந்நிலையில், கத்தாரின் குடி அமர்வு விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று பல நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

    அதன்படி கத்தாரில் வேலை பார்க்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள் கத்தாரை விட்டு வெளியேற , அவர்கள் பணியாற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அனுமதி தேவையில்லை என்ற சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

    கத்தார் நாட்டில் வரும் 2022-ம் ஆண்டு நடக்க இருக்கும் கால்பந்து உலகக் கோப்பை தொடருக்காக, அதிகளவிலான வெளிநாட்டு தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், அவர்களுக்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள 1.40 லட்சம் தொழிலாளர்கள் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட இருப்பதாக மலேசிய குடிவரவுத் துறையின் இயக்குனர் ஜெனரல் தடுக் செரி முஸ்தபர் அலி தெரிவித்துள்ளார். #Malaysiaworkers

    சென்னை:

    மலேசியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்த அல்லது அனுமதி காலத்தை கடந்து தங்கியிருந்த ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அவரவர் நாட்டுக்கே திருப்பி அனுப்பப்பட இருப்பதாக மலேசிய குடிவரவுத் துறையின் இயக்குனர் ஜெனரல் தடுக் செரி முஸ்தபர் அலி தெரிவித்திருக்கிறார்.

    இந்த நடவடிக்கையின் ஓர் அங்கமாக வரும் 30-ந்தேதி வரை இத்தொழிலாளர்கள் சரணடைவதற்கான காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

    “இந்த திட்டத்தின் கீழ் திரும்புகிறவர்கள் அபராதமாக 300 மலேசிய ரிங்கட்டும் (இந்திய மதிப்பில் சுமார் 5000 ரூபாய்) அவரவர் நாட்டுக்கு திரும்புவதற்கான சிறப்பு அனுமதியை பெற 100 மலேசிய ரிங்கட்டும் (சுமார் 1600 ரூபாய்) செலுத்த வேண்டும். அவர்களால் அந்த தொகையை செலுத்த முடியவில்லையெனில் அவர்கள் நாட்டு தூதரகமோ அல்லது சம்பந்தப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களோ அத்தொகையை செலுத்த வேண்டும்”.

    தற்போது, இத்திட்டத்தின் கீழ் சொந்த நாடு திரும்ப விண்ணப்பித்துள்ள 57 சதவீத வெளிநாட்டினர் அனுமதி காலத்தை கடந்து தங்கியுள்ளனர். மற்ற அனைவரும் முறையான அனுமதியின்றி சட்ட விரோதமாக மலேசியாவில் வேலை செய்து வந்துள்ளனர்.

    வருகிற 31-ந்தேதி முதல் பெரிய அளவிலான தேடுதல் வேட்டை நடத்தப்பட இருப்பதாக எச்சரித்துள்ள முஸ்தபர் அலி, “மலேசிய விடுதலை அடைந்த நாளான ஆகஸ்ட 31 அன்று தேடுதல் வேட்டை நடத்தப்பட இருப்பது தற்செயலாக அமைந்துள்ளது.

    ஆகவே, அந்நாளை பயன் படுத்திக் கொண்டு சட்ட விரோதமாக குடியேறியவர்களிடமிருந்து இந்நாட்டை விடுதலை அடையச் செய்யும் முயற்சிகளை மேற் கொள்ள இருக்கிறோம்” என முஸ்தபர் அலி கூறியிருக்கிறார்.

    அதே சமயம், இந்நடவடிக்கைகளினால் பதிவு செய்யாத தொழிலாளர்கள் மட்டுமின்றி, பதிவு செய்த தொழிலாளர்களும் அகதிகளும் கூட குற்றவாளிகள் போல் நடத்தப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதிலும் பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் ஆபத்தில் உள்ளதாக மலேசிய தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

    கடந்த ஆண்டு முதல் வெளிநாட்டுத் தொழிலாளர்களை முறைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மலேசிய அரசு, முறையாக பதியாத தொழிலாளர்களை நாடுகடத்தும் அல்லது திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. #Malaysiaworkers

    ×