என் மலர்
ஈரோடு
- கருப்பண்ணன் வீட்டில் கயிற்றினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு, அக். 3-
ஈரோடு அடுத்த சித்தோடு மேட்டுப்பாளையம் மேட்டான்காடு பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன் (63). டிரைவர். இவருக்கு சம்பூர்ணம் என்ற மனைவி யும், ஒரு மகனும் உள்ளனர்.
கருப்பண்ணனுக்கும், அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கருப்பண்ணன் மட்டும் தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தார். கருப்பண்ணன் அவரது மகனிடம் சென்று செலவுக்கு பணம் கேட்டு உள்ளார்.
ஆனால் அவரது மகன் இல்லையென்றதால் மனவே தனயைடைந்த கருப்பண்ணன் வீட்டில் கயிற்றினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து வந்தது.
- அணையின் நீர்மட்டம் 70.59 அடியாக சரிந்து உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து வந்தது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 70.59 அடியாக சரிந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,395 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.65 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 10.82 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.98அடியாகவும் உள்ளது
- டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் ரோட்டோர பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது.
- பஸ்சில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்டோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அடுத்து மாதம்பாளையம் அருகே தனியார் பஸ் 40-க்கும் மேற்பட்ட பயணி களை ஏற்றிக்கொண்டு புளியம்பட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் ரோட்டோர பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் உட்பட பஸ்சில் பயணம் செய்த 10-க்கும் மே ற்பட்டோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
மேலும் அக்கம் பக்கத்தி னர் விபத்தில் காயம் அடை ந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இரு பெண்களை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தகவல் அறிந்த வந்த இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தனியார் பஸ் விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- யசோதா அறையின் கழிவறைக்கு சென்று தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.
- பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
ஈரோடு:
திண்டுக்கல் மாவட்டம் பாப்பம்பட்டி எஸ்.கே.சி.நகர், 5-வது சாலையை சேர்ந்தவர் காளியப்பன் (54). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் திருமணம் ஆகி கணவருடன் வசித்து வருகிறார். இளைய மகள் யசோதா (19) மேற்கு குமரலிங்கத்தில் உள்ள கல்லூரியில் செவிலியர் பாடப்பிரிவில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
தற்போது ஒரு வருட பயிற்சிக்காக யசோதா ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பயிற்சி எடுத்து வந்தார். இதற்காக மருத்துவமனை அருகே உள்ள அறையில் வாடகைக்கு தங்கி இருந்து பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் சம்ப வத்தன்று யசோதா தான் தங்கி இருந்த அறையின் கழிவறைக்கு சென்று திடீ ரென தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.
அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே யசோதா இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனை போலீசார் வழக்கு பதிவு செய்து யசோதா எந்த காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- அந்த பகுதியில் சிலர் சீட்டாடி கொண்டு இருந்தனர்.
- போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சீட்டாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் கோபி போலீசார் பாரியூர் ரோடு தகர பாலம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சிலர் சீட்டாடி கொண்டு இருந்தனர்.
இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த அப்புசாமி (56), குமார் (50), சோமசுந்தரம் (30), மோகன்ராஜ் (27), பாலு (56), ராம்குமார் (27) என தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களி டம் இருந்து ரூ.3 ஆயிரத்து 50 பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் இது குறித்து கோபி செட்டிபாளையம் போலீ சார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 6 பேரையும் கைது செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கொசு உற்பத்தியாகும் படி வைத்திருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- கடைகளுக்கு முன்னெச்சரிக்கை நோட்டீசும் கொடுத்து வருகின்றார்கள்.
அந்தியூர்:
அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் டெங்கு, மலேரியா, கொசுக்களால் ஏற்படக்கூடிய காய்ச்சல் வராமல் இருக்க வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் தலைமையில் சுகாதாரத் துறையினர் வீடு, வீடாக சென்று மழை நீர் தேங்காமல் இருக்க வீடுகளில் சைக்கிள், பைக், கார், உள்ளிட்ட டயர்களை மேல் மாடியில் போட்டு வைத்திருந்தால் அவற்றை அகற்றியும், கொசு மருந்து தெளித்தும் வருகின்றார்கள்.
இந்த நிலையில் பழைய பொருட்களை வாங்கும் குடோன்கள், குடியிருப்பு பகுதியில் மத்தியில் இரு ந்தால் அவர்கள் டயர்களை யோ மற்ற பொருட்களையோ மழையில் நனைந்து அதன் மூலம் கொசு உற்பத்தியாகும் படி வைத்திருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவ்வாறு இருக்கும் கடைகளை முன்னெச்சரிக்கை நோட்டீசும் கொடுத்து வருகின்றார்கள்.
பழைய இரும்பு கடைகள் ஊருக்கு வெளிப்புறத்தில் குடோன்களை வைத்துக் ெகாள்ள வேண்டும் என்றும், குடியிருப்பு பகுதிகளுக்குள் வைத்திருந்தால் அவர்கள் மேல்கூரை அமைத்து மழை நீரில் பழைய பொருட்கள் நனையாமலும் இருக்கும்படி செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றார்கள்.
- சிலர் ஆர்வம் மிகுதியால் தங்களது வாகனங்களை நிறுத்தி யானை கூட்டங்களை படம் எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
- யானைகள் தாக்கும் அபாயம் உள்ளது. இந்த பகுதிகளை கடக்கும் போது மிகுந்த கவனமுடன் கடக்க வேண்டும் என்றனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் மான், யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
சத்தியமங்கலத்தில் இருந்து திம்பம் மலைப்பாதை வழியாக பெங்க ளூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதி வழியாக செல்கிறது. இங்குள்ள வனப்பகுதியில் உள்ள விலங்குகள் உணவு மற்றும் குடிநீர் தேடி ரோட்டை கடக்கும். அப்போது யானைகள் ரோட்டோரம் உள்ள மரம், செடி, கொடிகளை பறித்து தின்பது வழக்கம்.
இந்நிலையில் ஆசனூர் அடுத்த காரப்பள்ளம் என்ற இடத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய 2 காட்டு யானைகள் 2 குட்டிகளுடன் சாலையோ ரம் நடந்து வந்தது. குட்டிகள் நடுவில் நடந்து வர இருபுறமும் இரு யானைகள் பாதுகாப்புடன் அழைத்து சென்றதை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்து கொண்டனர். சிலர் ஆர்வம் மிகுதியால் தங்களது வாகனங்களை நிறுத்தி யானை கூட்டங்களை படம் எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இது குறித்து வனத்துறை யினர் கூறும்போது, வன ப்பகுதியை விட்டு வெளியேறிய 2 யானைகள் குட்டிகளுடன் சாலையோரம் உலா வருகின்றன. வாகன ஓட்டிகள் யானைகளை தொந்தரவு செய்யக்கூடாது. வாகன ஓட்டிகள் ஆர்வம் மிகுதியால் வாகனங்களை விட்டு கீழே இறங்கி போட்டோவோ, வீடி யோக்கள் எடுக்க முயற்சிக்க கூடாது. யானைகள் தாக்கும் அபாயம் உள்ளது. இந்த பகுதிகளை கடக்கும் போது மிகுந்த கவனமுடன் கடக்க வேண்டும் என்றனர்.
- வனப்பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க மக்னா யானை இறந்து கிடப்பதை கண்டு பிடித்தனர்.
- யானையின் உடலை வனத்துறை கால்நடை மருத்துவர் சதாசிவம் உடற் கூறு ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் வனச்சரகத்திற்குட்பட்ட எக்கத்தூர் வனப்பகுதி கச்சப்பள்ளம் என்ற இடத்தில் வனக்காப்பாளர் அர்த்த நாரீஸ்வரன் மற்றும் வனத்துறை ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வனப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியதை அறிந்த வனத்துறை ஊழியர்கள் ஏதாவது வனவிலங்குகள் இறந்து கிடக்கிறதா என தேடி பார்த்தனர். அப்போது வனப்பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க மக்னா யானை இறந்து கிடப்பதை கண்டு பிடித்தனர்.
இது குறித்து உடனடியாக வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பெயரில் கடம்பூர் வனச்சரக அலுவலர் (பொறுப்பு) மாரியப்பன், வன குழு மற்றும் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் முன்னிலையில் யானையின் உடலை வனத்துறை கால்நடை மருத்துவர் சதாசிவம் உடற் கூறு ஆய்வு மேற்கொண்டார்.
இதன் முடிவில் தான் யானை எவ்வாறு இறந்தது தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
- பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2,878 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது
- கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாச னத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொட ர்ந்து குறைந்து வருகிறது.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட மக்களி ன் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ள ளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை ப்பகுதி உள்ளது.கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாச னத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொட ர்ந்து குறைந்து வருகிறது.அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து வந்தது. இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 70.74 அடியாக சரிந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 878 கன அடியாக நீர் வரத்து அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2 ஆயிரத்து 300 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. காளி ங்கராயன் பாசனத்திற்கு 450 கனஅடியும், குடிநீரு க்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2 ஆயிரத்து 850 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.68 அடியாகவும், பெரும்ப ள்ளம் அணையின் நீர்ம ட்டம் 10.99 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணை யின் நீர்மட்டம் 21.98 அடியா கவும் உள்ளது.
- புளியம்பட்டியில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது
- காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
பு.புளியம்பட்டி,
கோவை மாவட்டத்தை சேர்ந்த கோபால் (வயது 40) என்பவர் தனது மனைவி குழந்தைகளுடன் கக்கரான் காரன் குட்டையில் உள்ள அவரது மாமியார் வீட்டிற்கு அவரது காரில் பவானி சாகர் வழியாக எஸ்.ஆர்.டி. நகர் அருகே சென்று கொண்டி ருந்தனர்.அப்போது புளியம்பட்டி தனியார் அலைன்மென்ட் கடையில் வேலை பார்க்கும் புதுக்கோட்டை யை சேர்ந்த மலைக்கொழுந்து (32) என்பவர் மது போதையில் அதிவேகமாக ஓட்டி வந்த கார் கோபால் ஓட்டிச் சென்ற கார் மீது மோதியதாக கூறப்படுகிறது.
இதில் காரின் முன் பகுதி சேதம் அடைந்து கோபா லுக்கு கையில் லேசான காயமும் மற்றும் அவரது மகனுக்கு தலையில் காய ங்களும் ஏற்பட்டது. இதை யடுத்து அவர்கள் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை க்காக சென்றனர்.பின்னர் இந்த விபத்து குறித்து கோபால் புளிய ம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் புகார் அளித்ததின் பேரில் இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த விபத்தினால் பவானிசாகர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி மதுவிற்ற 20 பேர் கைது செய்யபட்டனர்
- அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட பகுதி களில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என சத்தியமங்கலம், அம்மா பேட்டை, ஈரோடு தெற்கு, கொடுமுடி, ஈரோடு டவுன், வெள்ளி திருப்பூர், சென்னி மலை, வெள்ளோடு, பெரு ந்துறை, அந்தியூர், அப்பா கூடல், சித்தோடு, சிறுவலூர், பவானி, காஞ்சி கோவில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஈரோடு மாவட்ட பகுதிகளில் அனும தியின்றி சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட சத்தியமங்கலம் நஞ்சப்ப கவுண்டர் புதுரை சேர்ந்த ராம் செட்டி மகன் பூஜா (வயது 38), பவானி சிங்கம்பேட்டையைச் சேர்ந்த மாரிமுத்து மகன் ஜம்பு (54), புதுக்கோட்டை மாவட்டம் அமராவதி பகுதியைச் சேர்ந்த முருகே சன் மகன் சரவணன் (32), விழுப்புரம் மாவட்டம் பொறையூர் சேர்ந்த அண்ணாமலை (46), புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரை சேர்ந்த பழனி ச்சாமி மகன் விஜயகுமார் (32), அந்தியூர் பகுதியைச் சேர்ந்த நாராயணன் (65), ராமநாதபுரம் மாவட்டம் கருங்குடியைச் சேர்ந்த திருவரசு மகன் ராமநாதன், பெருந்துறை வெள்ளோ ட்டை சேர்ந்த மாரிமுத்து மகன் செந்தில் என்ற கிருஷ்ணமூர்த்தி (48), சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலை சேர்ந்த சுப்பிரமணியம் மகன் நித்தியானந்தம் (32), சிவகங்கை மாவட்டம் மூலக்கரை முத்துவேல் (50), அதே மாவட்டத்தைச் சேர்ந்த திருவேங்கம் புதூர் தங்கவேல் மகன் ராஜீவ் காந்தி (34), அந்தியூர் புது மேட்டூர் சுப்பிரமணி மகன் கோபாலகிருஷ்ணன் (48), சத்தியமங்கலம் சிக்கர சம்பாளையம் ஆண்டிய ப்பன் மகன் ரவி (40), பவானி தளவாய்பேட்டை முருகேசன் மனைவி விஜய லட்சுமி (50), சித்தோடு அழகேசன் மகன் பொ ன்னன் (55), சூரியம்பாளையம் சி.எம்.நகர் செல்லத்துரை மகன் லோகநாதன் (39), புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் சுந்தரம் மகன் பாண்டி, பவானி குமரேச சாமி கவுண்டர் மகன் மாதே ஸ்வரன் (53), பவானி சிகா மணி மகன் ரஜினி (47), சேலம் மாவட்டம் கரட்டு க்காட்டுவலசு மாணிக்கம் மகன் ஞானவேல் (31) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் விற்ப னைக்காக வைத்திருந்த 131 மது பாட்டில்களை போலீ சார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- கோபிசெட்டிபாளையம் பகுதியில் சூதாடிய 10 பேர் கைது செய்யபட்டனர்
- அவர்களி டம் இருந்து ரூ.2 ஆயிரத்து 440 பறிமுதல் செய்யப்பட்டது.
கோபி,
கோபிசெட்டிபாளையம் பகுதியில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினர். இதையடுத்து போலீசார் கோபிசெட்டிபாளையம் அருகே வெள்ள முனிய ப்பன் கோவில் அருகே சோதனை நடத்தினர். அப்போது அங்கு சிலர் அமர்ந்து கொண்டு சூதாடி கொண்டு இருந்தனர். போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் அவர்கள் கோபி யை சேர்ந்த கருப்புசாமி (வயது50), வடிவேல் (40), வெள்ளியங் கிரி (52) உள்பட 5 பேர் சூதாடியது தெரிய வந்தது. இது குறித்து கோபி போலீ சார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்க ளிடம் இருந்து ரூ.5 ஆயிரத்து 30 பறி முதல் செய்யப்பட்டது.
அதே போல் கோபி அடுத்த வாய்க்கால் பாலம் அருகே சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்த னர். இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரி த்தனர். இதில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த முருக பிரசாத், (42), ஜெய சந்தர் (43), முருகேசன் (49) உள்பட 5 பேர் என தெரிய வந்தது. இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 5 பேரை கைது செய்தனர். அவர்களி டம் இருந்து ரூ.2 ஆயிரத்து 440 பறிமுதல் செய்யப்பட்டது.






