என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஆசனூரில் குட்டிகளுடன் உலா வரும் யானைகளால் வாகன ஓட்டிகள் அச்சம்
    X

    ஆசனூரில் குட்டிகளுடன் உலா வரும் யானைகளால் வாகன ஓட்டிகள் அச்சம்

    • சிலர் ஆர்வம் மிகுதியால் தங்களது வாகனங்களை நிறுத்தி யானை கூட்டங்களை படம் எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • யானைகள் தாக்கும் அபாயம் உள்ளது. இந்த பகுதிகளை கடக்கும் போது மிகுந்த கவனமுடன் கடக்க வேண்டும் என்றனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் மான், யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    சத்தியமங்கலத்தில் இருந்து திம்பம் மலைப்பாதை வழியாக பெங்க ளூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதி வழியாக செல்கிறது. இங்குள்ள வனப்பகுதியில் உள்ள விலங்குகள் உணவு மற்றும் குடிநீர் தேடி ரோட்டை கடக்கும். அப்போது யானைகள் ரோட்டோரம் உள்ள மரம், செடி, கொடிகளை பறித்து தின்பது வழக்கம்.

    இந்நிலையில் ஆசனூர் அடுத்த காரப்பள்ளம் என்ற இடத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய 2 காட்டு யானைகள் 2 குட்டிகளுடன் சாலையோ ரம் நடந்து வந்தது. குட்டிகள் நடுவில் நடந்து வர இருபுறமும் இரு யானைகள் பாதுகாப்புடன் அழைத்து சென்றதை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்து கொண்டனர். சிலர் ஆர்வம் மிகுதியால் தங்களது வாகனங்களை நிறுத்தி யானை கூட்டங்களை படம் எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இது குறித்து வனத்துறை யினர் கூறும்போது, வன ப்பகுதியை விட்டு வெளியேறிய 2 யானைகள் குட்டிகளுடன் சாலையோரம் உலா வருகின்றன. வாகன ஓட்டிகள் யானைகளை தொந்தரவு செய்யக்கூடாது. வாகன ஓட்டிகள் ஆர்வம் மிகுதியால் வாகனங்களை விட்டு கீழே இறங்கி போட்டோவோ, வீடி யோக்கள் எடுக்க முயற்சிக்க கூடாது. யானைகள் தாக்கும் அபாயம் உள்ளது. இந்த பகுதிகளை கடக்கும் போது மிகுந்த கவனமுடன் கடக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×