தனியார் பஸ் பள்ளத்தில் இறங்கி விபத்து

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் ரோட்டோர பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது.பஸ்சில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்டோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
தனியார் பஸ் பள்ளத்தில் இறங்கி விபத்து
Published on

பு.புளியம்பட்டி:

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அடுத்து மாதம்பாளையம் அருகே தனியார் பஸ் 40-க்கும் மேற்பட்ட பயணி களை ஏற்றிக்கொண்டு புளியம்பட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சாலையில் சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் ரோட்டோர பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் உட்பட பஸ்சில் பயணம் செய்த 10-க்கும் மே ற்பட்டோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

மேலும் அக்கம் பக்கத்தி னர் விபத்தில் காயம் அடை ந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இரு பெண்களை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தகவல் அறிந்த வந்த இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தனியார் பஸ் விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com