என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோபிசெட்டிபாளையம் பகுதியில் சூதாடிய 10 பேர் கைது
    X

    கோபிசெட்டிபாளையம் பகுதியில் சூதாடிய 10 பேர் கைது

    • கோபிசெட்டிபாளையம் பகுதியில் சூதாடிய 10 பேர் கைது செய்யபட்டனர்
    • அவர்களி டம் இருந்து ரூ.2 ஆயிரத்து 440 பறிமுதல் செய்யப்பட்டது.

    கோபி,

    கோபிசெட்டிபாளையம் பகுதியில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினர். இதையடுத்து போலீசார் கோபிசெட்டிபாளையம் அருகே வெள்ள முனிய ப்பன் கோவில் அருகே சோதனை நடத்தினர். அப்போது அங்கு சிலர் அமர்ந்து கொண்டு சூதாடி கொண்டு இருந்தனர். போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் அவர்கள் கோபி யை சேர்ந்த கருப்புசாமி (வயது50), வடிவேல் (40), வெள்ளியங் கிரி (52) உள்பட 5 பேர் சூதாடியது தெரிய வந்தது. இது குறித்து கோபி போலீ சார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்க ளிடம் இருந்து ரூ.5 ஆயிரத்து 30 பறி முதல் செய்யப்பட்டது.

    அதே போல் கோபி அடுத்த வாய்க்கால் பாலம் அருகே சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்த னர். இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரி த்தனர். இதில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த முருக பிரசாத், (42), ஜெய சந்தர் (43), முருகேசன் (49) உள்பட 5 பேர் என தெரிய வந்தது. இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 5 பேரை கைது செய்தனர். அவர்களி டம் இருந்து ரூ.2 ஆயிரத்து 440 பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×