என் மலர்
நீங்கள் தேடியது "had an accident"
- கார் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
- அதிர்ஷ்டவசமாக செந்தில்குமார் காயமின்றி உயிர் தப்பினார்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே ஓடையா கவுண்ட ன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (38). திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அரசு மருத்துவமனை டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை டாக்டர்.செந்தில்குமார் தனது காரில் மருந்து வாங்குவதற்காக ஊஞ்சல்பாளையத்திலிருந்து கோபிசெட்டிபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
ஓட்டர் கரட்டு ப்பாளையம் பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் அந்த பகுதியில் செந்தில்குமார் வந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து கார் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் அதிர்ஷ்ட வசமாக செந்தில்குமார் காயமின்றி உயிர் தப்பினார். அந்த வழியாக சென்றவர்கள் செந்தில்குமாரை மீட்டனர்.
பொக்லைன் எந்திரம் மூலம் கார் பள்ளத்திலிருந்து வெளியே எடுக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் ரோட்டோர பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது.
- பஸ்சில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்டோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அடுத்து மாதம்பாளையம் அருகே தனியார் பஸ் 40-க்கும் மேற்பட்ட பயணி களை ஏற்றிக்கொண்டு புளியம்பட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் ரோட்டோர பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் உட்பட பஸ்சில் பயணம் செய்த 10-க்கும் மே ற்பட்டோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
மேலும் அக்கம் பக்கத்தி னர் விபத்தில் காயம் அடை ந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இரு பெண்களை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தகவல் அறிந்த வந்த இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தனியார் பஸ் விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






