என் மலர்tooltip icon

    ஈரோடு

    • வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
    • தேங்காய்கள் ரூ.50,876-க்கு விற்பனையானது.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.

    ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 4,076 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 24 ரூபாய் 10 காசுக்கும்,

    அதிகபட்ச விலையாக 26 ரூபாய் 69 காசுக்கும், சராசரி விலையாக 25 ரூபாய் 69 காசுக்கும் ஏலம் போனது.

    மொத்தம் 2,103 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.50,876-க்கு விற்பனையானது.

    • விஜயமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    பெருந்துறை:

    விஜயமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

    இதனால் விஜயமங்கலம் துணைமின் நிலையத்திற்குட்பட்ட பெரியவீரசங்கிலி, சின்னவீரசங்கிலி, கைக்கோல பாளையம், வடமலை கவுண்டன்பாளையம், பச்சாகவுண்டன்பாளையம்,

    கினிப்பாளையம், கிரேநகர், கரட்டூர் மற்றும் பாப்பம்பாளையம் ஆகிய அனைத்து பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

    • சந்தேகப்படும்படியாக நின்றிருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.
    • கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஈரோடு:

    பெருந்துறை பங்களா வீதி பவானி சாலை அண்ணா சிலை பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர்.

    அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி ரத்தினவேல் வீதியை சேர்ந்த மோகன வசந்த் (22), அதேபகுதியை சேர்ந்த கவுதம் (22) என்பது தெரியவந்தது.

    அவர்களது உடமைகளை சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து பெருந்துறை போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் ஆப்பக்கூடல் புன்னம் செங்கோம்பாளையம் பிரிவு பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக செதுனாம்பாளையத்தை சேர்ந்த ராமநாதன் (48) என்பவரை ஆப்பக்கூடல் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 120 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

    • வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    ஈரோடு:

    பீகார் மாநிலம் நானேய்யா கிழக்கு பாகாட்டியா பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் பஸ்வான் (22). இவர் காஞ்சிக்கோயில் அருகே உள்ள எருக்காட்டு வலசு பகுதியில் உள்ள மஞ்சள் தூள் தயாரிக்கும் மில்லில் பணியாற்றி வந்தார்.

    சம்பவத்தன்று இரவு அவரது மனைவியுடன் செல்போனில் பேசி கொண்டிருந்தார். பின்னர் ஊருக்கு செல்வதாக கூறி சென்றவர் மில்லின் மதில் சுவர் அருகே உள்ள வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காஞ்சிக்கோவில் போலீசார் ரமேஷ் பஸ்வானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

    இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • இருசக்கர வாகனம் மீது வேன் எதிர்பாராத விதமாக மோதியது.
    • பூங்கொடி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    டி.என்.பாளையம்:

    கோபி அருகே உள்ள கூகலூர் கிரீன் நகரை சேர்ந்தவர் மணி (வயது 55). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பூங்கொடி (50).

    இன்று காலை மணி தனது மனைவியுடன் டி.என்.பாளையம் அருகே உள்ள வாணிப்புத்தூருக்கு வேலைக்காக இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தார். பூங்கொடி இரு சக்கர வாகனத்தின் பின் பகுதியில் அமர்ந்து வந்தார்.

    இதை தொடர்ந்து அவர்கள் டி.என்.பாளையம் கொன்னகொடிக்கால் என்ற பகுதியில் சென்றனர். அப்போது அங்கு ஒரு தனியார் நிறுவனத்திற்கு தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஒரு வேன் பின்னால் சென்றது.

    அந்த வேனை கூகலூர் அருகே உள்ள தாழைக்கொம்புதூர் கொன்னமடையை சேர்ந்த இளையகுமார் (30) ஓட்டினார். திடீரென மணி மற்றும் அவரது மனைவி பூங்கொடி சென்று கொண்டு இருந்த இருசக்கர வாகனம் மீது வேன் எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் மணியின் மனைவி பூங்கொடி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது உடலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    மேலும் தூக்கி வீசப்பட்ட மணி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். காயம் அடைந்த மணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்பு லன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    டி.என்.பாளையம் அருகே இன்று காலை கணவர் கண் முன்னே மனைவி விபத்தில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கணேசன் விழுந்தார்.
    • பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை பங்களாவீதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 63). இவர் ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி. இவர் மகளின் திருமண அழைப்பிதழை உறவினருக்கு கொடு ப்பதற்காக பெருந்துறை ஈரோடு ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது ஒரு மூதாட்டி ரோட்டை கடக்க முயன்றார். இதையடுத்து அவர் மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் போட்டார். இதனால் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கணேசன் விழுந்தார்.

    இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த கணேசன் சிகிச்சை பலன் இல்லாமல் உயிர் இழந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதா பேகம், சப்- இன்ஸ்பெக்டர் தங்கதுரை ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாளை முதல் முறை வைத்து தண்ணீர் திறந்து விடுவதற்கான அட்டவணையை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.
    • ஒரு சில விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாக்கால் பாசனத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம்15-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதன் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 3,500 ஏக்கர் நில ங்கள் பயன்பெற்று வருகி ன்றன. தண்ணீர் திறக்கப்ப ட்டு 54 நாட்கள் கடந்த நிலை யில் நாற்று நடவு மற்றும் நாற்று விடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே பவானி சாகர் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய அளவு மழை பெய்யாததால் அணைக்கான நீர் வரத்து மிகவும் குறைந்துவிட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

    அணையில் 11 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ள நிலையில் தற்போதைய தண்ணீர் இருப்பினை கொண்டு கீழ்பவானி பாசன சேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது.

    எனவே நெற்பயிர்களை காப்பாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் தற்போது அணையில் உள்ள தண்ணீ ரின் இருப்பை வைத்து அனைத்து விவசாயிகளுக்கும் தண்ணீர் கிடைக்கின்ற வகையில் முறை வைத்து தண்ணீர் திறந்து விட பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில் முறை வைத்து தண்ணீர் திறந்து விட ஒரு சில விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள போதும் வேறு வழியின்றி இந்த திட்டத்தை அமல்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் நாளை (வியாழக்கிழமை) முதல் முறை வைத்து தண்ணீர் திறந்து விடுவதற்கான அட்ட வணையை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது. மேலும் முறை வைத்து தண்ணீர் விநியோகக்க வசதியாக 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

    கோபி கால்வாய் உபகோட்டம், ஊஞ்சலூர் பகிர்மான கால்வாய், சென்ன சமுத்திரம் பகிர்மான கால்வாய் என மூன்று பிரிவுகளாக பிரிக்க ப்பட்டு அமல்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ஆசிரிய, ஆசிரியைகள் 50-க்கும் மேற்பட்டோர் கருப்பு பேட்ச் அணிந்து பயிற்சியில் பங்கேற்றனர்.
    • ஆசிரியர்களை முதல்-அமைசசர் மு.க.ஸ்டாலின் அழைத்து பேச வேண்டும்.

    சென்னிமலை:

    சென்னை பள்ளி கல்வி இயக்குனர் அலுவலக வளாகத்தில் பல்வேறு ஆசிரியர்கள் அமைப்பினர் 12 ஆண்டுகளுக்கும் மேலாக பகுதி நேர ஆசிரியராக பணியாற்றுவோரை நிரந்தரம் செய்ய வேண்டும்.

    ஒரே பணி செய்யும் ஆசிரியர்களுக்கு இடையே ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்ற கோரிக்கை களை வலியுறுத்தி ஒரு வாரத்திற்கு மேலாக போராடி வருகின்றனர்.

    இந்த ஆசிரியர்களுக்கு ஆதரவு தெரிவித்து சென்னிமலை ஒன்றியத்தில் ஆசிரியர்களுக்கு நடந்த எண்ணும், எழுத்தும் பயிற்சியில் பங்கு பெற்ற ஆசிரிய, ஆசிரியைகள் 50-க்கும் மேற்பட்டோர் கருப்பு பேட்ச் அணிந்து பயிற்சியில் பங்கேற்றனர்.

    பயிற்சிக்கு முன்பாக வளாகத்தில் திரண்டு கோஷம் எழுப்பிய ஆசியர்கள் ஒரு வாரத்திற்கு மேலாக போராடும் ஆசிரியர்களை முதல்-அமைசசர் மு.க.ஸ்டாலின் அழைத்து பேச வேண்டும், கோரிக்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என கூறினர்.

    • கனி மார்க்கெட் பல இடத்தில் மீண்டும் செயல்பட தொடங்கியது.
    • சில்லரை விற்பனை இன்று 35 சதவீதம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே கனி மார்க்கெட் ஜவுளி கடைகள் செயல்பட்டு வந்தது. இங்கு 200-க்கும் மேற்பட்ட நிரந்தர கடைகளும், 730 வாரச்சந்தை கடைகளும் இயங்கி வந்தன.

    இந்த வளாகத்தில் ரூ.54 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது.

    இந்த புதிய வணிக வளாகத்தில் ஏற்கனவே கனி மார்க்கெட்டில் கடை வைத்திருக்கும் வியாபாரி களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்கப்படும் என முதலில் கூறப்பட்டது.

    ஆனால் மாத வாடகையாக ரூ.31,500-ம், வாய்ப்பு தொகையாக ரூ.8 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் வரை செலுத்த வேண்டும் என கூறியதால் யாரும் கடைக்கு செல்லவில்லை. இதனால் ஒருங்கிணைந்த வணிக வளாகம் செயல்படா மலேயே உள்ளது.

    இதற்கிடையே கனி மார்க்கெட்டில் உள்ள தற்கா லிக கடைகளை நீதிமன்ற உத்தரவுபடி மாநகராட்சி நிர்வாகம் அகற்றியது. தீபாவளி வரை கடை நடத்தி கொள்ள வியாபாரிகள் கோரிக்கை விடுத்தும் மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை.

    இதை எதிர்த்து வியாபாரிகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்நிலையில் வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை பழைய இடத்தில் தற்காலிக கடைகள் செயல்பட சென்னை நீதிமன்றத்தில் வியாபாரிகள் உத்தரவு பெற்றனர்.

    இதையடுத்து சுமார் 40 நாட்களுக்கு பிறகு மீண்டும் அனுமதி பெற்று கனி மார்க்கெட் பழைய இடத்தில் மீண்டும் தற்காலிக கடைகள் அமைக்கும் பணி தொடங்கி நடந்து வந்தது.

    சுமார் 86 கடைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. கட்டுமான பணிகள் முடிவடைந்து மின்சார வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கனி மார்க்கெட் பல இடத்தில் மீண்டும் செயல்பட தொடங்கியது. அதைத்தொடர்ந்து இன்று வாரச்சந்தை நடந்தது.

    பொதுவாக வாரச்சந்தைக்கு மகாராஷ்ட்ரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வெளி மாநில வியாபாரிகள் வருவது வழக்கம்.

    ஆனால் இன்று கூடிய சந்தையில் குறைந்த அளவே வியாபாரி கள் வந்திருந்தனர். இதனால் மொத்த வியாபாரம் சுமாராகவே நடந்தது.

    அதேநேரம் உள்ளூர் மாவட்ட வியாபாரிகள் ஓரளவு வந்திருந்ததால் சில்லரை விற்பனை இன்று 35 சதவீதம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    அடுத்த வாரம் நிறைய புது ரக துணிகள் வர இருப்பதால் வியாபாரம் அடுத்த வாரம் முதல் சூடு பிடிக்க தொடங்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    நீண்ட நாட்களுக்கு பிறகு ஜவுளி சந்தை செயல்பட தொடங்கியதால் அந்த பகுதிகளை கட்ட தொடங்கியுள்ளது.

    • காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து இன்று முதல் மீண்டும் பள்ளிகள் செயல்பட தொடங்கியுள்ளது.
    • இன்று காலை வழக்கு போல் மாணவ-மாணவிகள் தங்களது பள்ளிகளுக்கு உற்சாகத்துடன் கிளம்பி சென்றனர்.

    ஈரோடு:

    பள்ளி மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி காலாண்டு தேர்வு விடுமுறை விடப் பட்டது. விடுமுறையை கொண்டாடுவதற்காக ஈரோட்டில் இருந்து ஏராளமான மாணவர்கள் பெற்றோருடன் சொந்த ஊருக்கு சென்றனர்.

    இந்நிலையில் காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து இன்று முதல் மீண்டும் பள்ளிகள் செயல்பட தொடங்கியுள்ளது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டு ள்ளது.

    அதே நேரம் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகளுக்கு வரும் 9-ந் தேதி முதல் பள்ளிகள் செயல்பட தொடங்கும் என அறிவிக்கப்பட்டு ள்ளது. தனியார் பள்ளிகள் இன்று முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து நேற்று மாலை முதல் ஈரோடு பஸ் மற்றும் ெரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. சொந்த ஊருக்கு சென்றவர்கள் மீண்டும் ஒரே நேரத்தில் குவிந்ததால் ஈரோடு ெரயில் நிலையம், பஸ் நிலையம் ஸ்தம்பித்தது.

    அனைத்து ெரயில்களிலும் முன்பதிவு பெட்டிகள் நிரம்பி விட்டதால் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம் பிடிக்க கடும் போட்டி நிலவியது. இதேப்போல் பஸ்களிலும் இடம் பிடிக்க போட்டி நிலவியது. இதனால் ஈரோடு பஸ்- ரயில் நிலையம் பரபர ப்பாக காட்சியளித்தது.

    இன்று காலை வழக்கு போல் மாணவ-மாணவிகள் தங்களது பள்ளிகளுக்கு உற்சாகத்துடன் கிளம்பி சென்றனர்.

    அரசு பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 2-ம் பருவத்ததற்கான பாட புத்தகம் இன்று வழங்கப்பட்டது. இதனால் இன்று காலை ஈரோடு மாநகர பகுதியில் மீனாட்சி சுந்தர னார் சாலை மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது.

    • கோகுல் தூக்க கலக்கத்தில் திடீரென ரெயிலில் இருந்து கீழே தவறி விழுந்தார்.
    • ரெயில் மெதுவாக சென்றதால் பெரிய அளவில் அடிப்படவில்லை.

    ஈரோடு:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா கிடாரகுளம் கிராமத்தை சேர்ந்தவர் கோகுல் (18). இவர் நேற்று இரவு நாகர்கோவில் ரெயிலில் ஏறி கோவைக்கு வந்து கொண்டிருந்தார்.

    கோகுல் பொதுபெட்டியில் பயணம் செய்தார். கூட்டம் அதிகமாக இருந்ததால் கோகுல் படிக்கட்டில் பயணம் செய்து வந்தார். இந்த ரெயில் இன்று காலை ஈரோடு ரெயில் நிலையம் வந்து பின்னர் சிறிது நேரத்தில் ரெயில் கிளம்ப தொடங்கியது.

    அப்போது படிக்கட்டில் பயணம் செய்து வந்த கோகுல் தூக்க கலக்கத்தில் திடீரென ரெயிலில் இருந்து கீழே தவறி விழுந்தார். ரெயில் மெதுவாக சென்றதால் கோகுலுக்கு பெரிய அளவில் அடிப்படவில்லை.

    இடுப்பு பகுதியில் வலி இருந்ததால் அவரை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அனுமதியின்றி மது விற்ற 54 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
    • ஒரே நாளில் 667 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் முழு வதும் சட்ட விரோதம் மது விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்த ரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று காந்தி ஜெயந்தி முன்னிட்டு மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. எனினும் இந்த உத்தரவை மீறி மது விற்பனை நடைபெறுகிறது என போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு தங்கள் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.

    போலீசாரின் தீவிர சோதனையில் ஒரே நாளில் மாவட்ட முழுவதும் அனுமதியின்றி மது விற்ற 54 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

    மேலும் அவர்களிடமிருந்து ஒரே நாளில் 667 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ×