விபத்தில் ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி பலி

நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கணேசன் விழுந்தார். பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி பலி
Published on

பெருந்துறை:

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பங்களாவீதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 63). இவர் ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி. இவர் மகளின் திருமண அழைப்பிதழை உறவினருக்கு கொடு ப்பதற்காக பெருந்துறை ஈரோடு ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது ஒரு மூதாட்டி ரோட்டை கடக்க முயன்றார். இதையடுத்து அவர் மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் போட்டார். இதனால் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கணேசன் விழுந்தார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த கணேசன் சிகிச்சை பலன் இல்லாமல் உயிர் இழந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதா பேகம், சப்- இன்ஸ்பெக்டர் தங்கதுரை ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com