என் மலர்
கடலூர்
புதுப்பேட்டை அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
புதுப்பேட்டை:
விழுப்புரம் மாவட்டம் ஆனாங்கூரை சேர்ந்தவர் நீலகண்டன் மனைவி சாந்தி(வயது 52). இவர் விழுப்புரம் ரெயில்வே கேட் பகுதிகளில் கொய்யாப்பழம் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் கொய்யாப்பழம் பறிப்பதற்காக கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை அருகே உள்ள வரிஞ்சிப்பாக்கத்துக்கு வந்தார். பின்னர் அவர் அங்குள்ள தயாநிதி என்பவருடைய தோப்பில் கொய்யாப்பழம் பறித்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த தோப்பில் மின்கம்பி ஒன்று அறுந்து கீழே கிடந்துள்ளது. இதை அறியாத சாந்தி, அந்த மின்கம்பியை மிதித்தார். இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில் சாந்தி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாந்தியின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொய்யாத்தோப்பில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து நெல்லிக்குப்பத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
நெல்லிக்குப்பம்:
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து நெல்லிக்குப்பத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு நகர தலைவர் திலகர் தலைமை தாங்கினார். நகர தலைவர்கள் முருகன், நடராஜன், வட்டார தலைவர்கள் சீத்தாராமன், ராமச்சந்திரன், ரமேஷ் ரெட்டியார், குணசேகரன், சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன உரையாற்றினார்.
இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் குமார், மணி, வேல்முருகன், மாவட்ட நிர்வாகிகள் ராஜசேகர், ஓவியர் ரமேஷ், ரவிக்குமார், ராஜேஷ், கிஷோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் முன்னாள் கவுன்சிலர் ரவிக்குமார் நன்றி கூறினார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒருபோதும் அதிமுகவுடன் சேராது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசியுள்ளார்.
நெய்வேலி:
கடலூர் ஒருங்கிணைந்த மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அண்ணாவின் 111-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நெய்வேலி அண்ணாதிடலில் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.கே.பாலமுருகன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் அக்ரி பி.முருகேசன் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தென்னாட்டு காந்தி என்று அழைக்கப்பட்டவர் அண்ணா. பெரியாரின் தத்துவங்களை அரசியல் படுத்தி திராவிட கொள்கைகளை தமிழகத்தில் வேரூன்ற செய்தவர் அண்ணா. 50 ஆண்டுகளுக்கு முன்பு அவர் சொன்ன கொள்கைகள், இன்றும் இந்திய துணை கண்டத்துக்கு பொருத்தமாக உள்ளது.
மத்தியில் இதுவரை காங்கிரஸ் ஆட்சியாக இருந்தாலும், பாரதிய ஜனதா ஆட்சியாக இருந்தாலும், அவர்கள் தமிழ்நாட்டில் இந்தியை எப்படியாவது புகுத்தி விட வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார்கள். இந்தி பேசாத மாநிலங்களில் இருமொழிக்கொள்கையை முதன்முதலில் சட்டமாக்கியவர் அண்ணா. அதனால் தான் தமிழ்நாட்டில் தாய்மொழியை பார்க்க முடிகிறது.
தமிழ்நாட்டில் இந்தியை திணிக்கக்கூடாது என்பது தான் எங்கள் கோரிக்கை. சுதந்திரத்துக்குப்பிறகு தமிழ்நாட்டில் காங்கிரஸ் இந்தியை கொண்டு வந்தது. இதனால் காங்கிரசின் ஆட்சியே போய் விட்டது. காமராஜர் போன்ற சிறந்த நிர்வாகிகள் கூட தேர்தலில் தோற்று போய்விட்டார்கள்.
தமிழ்நாட்டு மக்கள் வந்தாரை வாழவைக்கக்கூடியவர்கள், ஆனால் விருப்பம் இல்லாமல் எதையும் அவர்கள் மீது திணிக்க முடியாது. இங்குள்ள பா.ஜனதா தலைவர்கள், மத்திய அரசிடம் இதை சொல்ல வேண்டும். தமிழக மக்கள் மீது இந்தியை திணித்தால் மக்கள் வெகுண்டெழுவார்கள்.
எந்த ஒரு பிரிவினையும், பாகுபாடும் இன்றி தமிழ்நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்று சேருவார்கள். அரசியல், சாதி, மதத்தை தாண்டி பாகுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து போராடுவார்கள்.
தமிழ்நாட்டில் ஆளும்கட்சி மத்திய அரசின் அடிமையாக இருந்து வருகிறது. பொதுமக்கள் நலன் கருதி மக்களுக்கு தேவையான திட்டங்களை ஓட்டெடுப்பு நடத்தி செயல்படுத்த வேண்டும்.
தற்போது நீட்தேர்வு, ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் போன்றவற்றை மக்கள் விரும்பவில்லை. எனவே இவற்றை உடனே கைவிடவேண்டும்.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க.வுக்கு சிறிய பின்னடைவு ஏற்பட்டது. அதை பயன்படுத்தி சில சுயநலவாதிகள் நம்முடைய கட்சியை விட்டு போய்விட்டார்கள். நம்முடைய கட்சிக்காரர்களை விலை கொடுத்து வாங்குகிறார்கள்.
நாங்களே நீக்கணும் என்று நினைத்தோம் அவர்களே போய் விட்டார்கள். இது அம்மாவின் உண்மையான தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி. உங்களில் ஒருவனாக இருந்து நான் இந்த நிலைக்கு வந்து இருக்கிறேன். தி.மு.க. என்னும் தீய சக்தியை எதிர்த்து போராடும் ஒரே இயக்கம் அ.ம.மு.க.தான்.
என்னை பார்க்கும் சிலர் நான் தி.மு.க.வுக்கு சென்று விடுவேன் என்று வதந்தியை பரப்புகிறார்கள். அம்மாவால் வழிகாட்டப்பட்ட என் உடம்பில் ஓடுவது தி.மு.க. எதிர்ப்பு ரத்தம். அதனால் நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் உள்ள கட்சி அ.ம.மு.க. எதற்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை.
சசிகலா 3 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். அவரை ஆளுங்கட்சியினர் யாரும் போய் பார்க்கவில்லை. இந்த ஆட்சி போனதும் பாதிபேர் தி.மு.க.வுக்கும் பா.ஜனதாவுக்கும் ஓடிப்போய்விடுவார்கள்.
சசிகலாவுடன் சில அமைச்சர்கள் பேசிவருவதாக கூறி வருகிறார்கள். இதுபோன்று ஏதாவது பேசி உங்களை குழப்புகிறார்கள். எப்படி எங்களோடு அவர்கள் ஒன்றாக முடியும். அ.தி.மு.க.வுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒரு போதும் சேராது. வருகிற தேர்தலில் அ.ம.மு.க. ஆட்சியை பிடிக்கும்.
இவ்வாறு டி.டி.வி. தினகரன் பேசினார்.
கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நெய்வேலி நகர செயலாளர் எம்.ஜெயக்குமார், அம்மா தொழிற்சங்கம் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் எம்.மனோகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விருத்தாசலத்தில் தலைமை ஆசிரியை வீட்டின் ஜன்னதை உடைத்து ரூ.12 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆலடி சாலை காமராஜர் நகர் புதிய பள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 63). இவரது மனைவி அம்பிகா (57). இவர் பெண்ணாடம் அருகே உள்ள மேலூர் நடுநிலை பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
அன்பழகனும் அவரது மனைவி அம்பிகாவும் வீட்டை பூட்டிவிட்டு கடந்த 6-ந்தேதி அன்று ஒடிசாவில் உள்ள பூரி ஜெகநாதர் கோவிலுக்கு ஆன்மிக சுற்றுலா சென்றனர்.
இதை அறிந்த மர்ம மனிதர்கள் வீட்டின் சமையல் அறையில் உள்ள ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்பு அவர்கள் அங்கிருந்த பீரோவை உடைத்தனர். அங்கிருந்த 45 பவுன் நகைகள் மற்றும் ரொக்க பணம் ரூ.6 ஆயிரம், கிலோ வெள்ளி பொருட்களையும் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
ஆன்மீக சுற்றுலாவை முடித்துவிட்டு நேற்று இரவு அன்பழகன், அவரது மனைவி அம்பிகா ஆகியோர் வீட்டுக்கு வந்தனர். பின்பு கதவை திறந்து உள்ளே சென்றனர். அப்போது அங்கு பொருட்கள் சிதறிகிடப்பதையும், பீரோ உடைக்கப்பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பீரோவில் இருந்த நகை-பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. மர்ம மனிதர்கள் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. மொத்தம் கொள்ளைபோன நகை பணத்தின் மதிப்பு ரூ.12 லட்சம் ஆகும்
இதுகுறித்து அன்பழகன் விருத்தாசலம் போலீசில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர். பின்பு அவர்கள் கொள்ளை நடத்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் இந்த கொள்ளையில் துப்புதுலக்க விழுப்புரத்திலிருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து சென்றனர். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமை ஆசிரியை வீட்டில் நகை பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

பண்ருட்டியில் மின்னல் வேகத்தில் வந்த லாரியை கவனிக்காமல் சைக்கிளில் சாலையை கடக்க முயன்ற சிறுவனை போலீஸ்காரர் காப்பாற்றினார்.
பண்ருட்டி:
தமிழகத்தில் சாலை விபத்துகள் என்பது தொடர் கதையாகி வருகிறது. தினமும் ஏராளமான விபத்துகள் நடைபெறுகின்றன. இதில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. போக்குவரத்து அதிகமான பகுதியில் ஏற்படும் விபத்துகளை தடுக்க சிக்னல் அமைத்தும், போலீசாரை நியமித்தும் விபத்துகளை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் மின்னல் வேகத்தில் வந்த லாரியை கவனிக்காமல் சைக்கிளில் சாலையை கடக்க முயன்ற சிறுவனை போக்குவரத்து போலீஸ்காரர் பிடித்து தனது பக்கம் இழுத்து அவனது உயிரை காப்பாற்றியுள்ளார். இந்த நெகிழ்ச்சி சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
பண்ருட்டியில் கும்பகோணம்-சென்னை சாலை, கடலூர்-சித்தூர் சாலை மற்றும் காந்தி மார்க்கெட் சாலை ஆகிய சந்திப்பில் போக்குவரத்து சிக்னல் உள்ளது. இங்கு காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் காணப்படுவதால், அங்கு போலீசார் பணியில் இருந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவர்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராஜதீபன்(வயது 32) என்ற போக்குவரத்து போலீஸ்காரர், அங்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி லாரி ஒன்று மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருந்தது. 5 முனை சந்திப்பில் வந்தபோது, அங்கு சைக்கிளில் வந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் திடீரென மார்க்கெட் சாலையில் இருந்து கடலூர் சாலையை கடக்க முயன்றான். இதைபார்த்த போலீஸ்காரர் ராஜதீபன், கண் இமைக்கும் நேரத்தில் அந்த சிறுவனை சைக்கிளுடன் பிடித்து தன் பக்கம் இழுத்துக்கொண்டார்.

ஒருவேளை அந்த போலீஸ்காரர் சிறுவனை சைக்கிளுடன் இழுக்காமல் இருந்திருந்தால், லாரி மோதி உயிர்சேதம் ஏற்படும் நிலை உருவாகியிருக்கும். இதையடுத்து அந்த சிறுவனை போலீஸ்காரர் எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தார். சிறப்பாக செயல்பட்ட போலீஸ்காரரை அங்கிருந்தவர்கள் பாராட்டினர். இந்த வீடியோ காட்சி, பண்ருட்டி 5 முனை சந்திப்பில் உள்ள போக்குவரத்து சிக்னலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.
தற்போது அந்த வீடியோ வாட்ஸ்-அப், முகநூல்(பேஸ்புக்) போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. துரிதமாக செயல்பட்ட போலீஸ்காரர் ராஜதீபனை, பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சட்டப்பிரிவு வழக்கு பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் ஜவ்வாது உசேன் மற்றும் போலீசார் பாராட்டினர்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆயிரங்கால் மண்டபத்தில் ஆடம்பர திருமணம் நடத்தப்பட்டது தொடர்பாக தீட்சிதர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் உலக பிரசித்திபெற்ற சைவ திருத்தலமாகும். அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர் ஆகிய நால்வரால் பாடப்பட்ட திருத்தலம் இது. பஞ்சபூதங்களில் ஆகாயதலம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தோன்றியது.
இந்த கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் ராஜசபை என அழைக்கப்படுகிறது. இங்குதான் ஆடி திருமணம் நடைபெறும். மார்கழி மாதத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தில் நடராஜர்-சிவகாம சுந்தரி அம்பாள் எழுந்தருள்வர்.
புகழ்பெற்ற இந்த ஆயிரங்கால் மண்டபத்தில் ஆகமவிதிப்படி திருமணம் உள்ளிட்ட வேறு எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதிப்பதில்லை. இந்த கோவிலில் உள்ள பாண்டியநாயகர் சன்னதியில்தான் திருமணம் நடைபெறுவது வழக்கம்.
ஆனால் கடந்த 11-ந் தேதி சிவகாசியை சேர்ந்த தொழில் அதிபர் இல்ல திருமண விழா ஆயிரங்கால் மண்டபத்தில் நடந்தது. இதற்காக மின்விளக்குகள், மலர் தோரணங்கள், வண்ண திரைசீலைகள் ஆகியவற்றால் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஒட்டுமொத்தத்தில் நட்சத்திர விடுதியைபோல் ஆயிரங்கால் மண்டபம் ஜொலித்தது.
திருமணத்தையொட்டி கோவில் நுழைவுவாயில், நடராஜர் வீற்றிருக்கும் சித்சபை ஆகிய இடங்களில் பூ, மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டது. திருமணம் நடந்த நாள் அன்று இந்த பகுதிக்குள் வெளி ஆட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. திருமண பேட்ஜ் அணிந்துவந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், ஆகம விதியை மீறி இந்த ஆடம்பர திருமணம் நடந்துள்ளது. இதனால் கோவிலின் புனிததன்மை கெட்டுள்ளது என்று பக்தர்கள் குற்றம் சாட்டினர். இந்த திருமணம் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இதுகுறித்து சிதம்பரம் நடராஜர்கோவில் பொது தீட்சிதர்களின் செயலாளர் பால கணேச தீட்சிதரிடம் கேட்டதற்கு அவர் எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை என்றார்.
திருமண ஏற்பாடுகளை செய்த பட்டு தீட்சிதர் கூறுகையில் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் நடந்த திருமணத்தில் எந்தவித ஆகம விதிமீறல்கள் நடைபெறவில்லை என்றார். இந்த நிலையில் கோவில் டிரஸ்டிகள் அய்யப்பன் தீட்சிதர், சோமகார்த்தி தீட்சிதர், துணை செயலாளர் நவமணி தீட்சிதர் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் திருமண ஏற்பாடு செய்த பட்டு தீட்சிதர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்தனர்.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நகராட்சி ஆணையாளர் மற்றும் ஊழியர்கள் விடிய, விடிய பண்ருட்டியில் அமைக்கப்பட்டிருந்த 150 டிஜிட்டல் பேனர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
பண்ருட்டி:
சென்னையில் டிஜிட்டல் பேனர் விழுந்ததால் கல்லூரி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கோர்ட்டு உத்தரவுபடி டிஜிட்டல் பேனர்கள் அதிரடியாக அகற்றும் பணி நடந்தது.
இதனையொட்டி பண்ருட்டி நகராட்சி சார்பில் பண்ருட்டி நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி தலைமையில் நகரமைப்பு அலுவலர் செல்வம், துப்புரவு அலுவலர் சக்திவேல், துப்புரவு ஆய்வாளர் ஆரோக்கியசாமி, திண்ணாயிரமூர்த்தி, குமார், தேவநாதன் மற்றும் நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் நேற்று நள்ளிரவு முதல் இந்த பணியில் ஈடுபட்டனர்.
அவர்கள் விடிய, விடிய பண்ருட்டி 4 முனை சந்திப்பு, கடலூர் ரோடு, சென்னை சாலை, கும்பகோணம் சாலை, காந்திரோடு, ராஜாஜி சாலை, மற்றும் பண்ருட்டி நகராட்சி பகுதியில் உள்ள 33 வார்டுகளிலும் சாலையோரங்களில் அமைக்கப்பட்டிருந்த சிறிய மற்றும் பெரிய 150 டிஜிட்டல் பேனர்களை அதிரடியாக அகற்றினர். பின்னர் அவற்றை லாரிகள் மூலம் ஏற்றிச் சென்றனர்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குமராட்சி அருகே காதல் திருமணம் செய்த புதுப்பெண் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
காட்டுமன்னார்கோவில்:
குமராட்சி அருகே உள்ள குருவாடி கிராமத்தை சேர்ந்தவர் குமார் மகள் திவ்யா(வயது 25). இவரும், நளன்புத்தூரை சேர்ந்த வீரபாண்டியன் என்பவரும் காதலித்து கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் சம்பவத்தன்று திவ்யா, தனது வீட்டில் உள்ள சிம்னி விளக்கை பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது ஆடையில் தீப்பற்றியது. இதில் தீக்காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி திவ்யா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து திவ்யாவின் தாய் செல்வி குமராட்சி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திவ்யாவுக்கு திருமணமாகி 7 மாதங்களே ஆவதால் சிதம்பரம் சப்-கலெக்டர் விசுமகாஜன், மேல்விசாரணை நடத்தி வருகிறார்.
நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து தி.மு.க.வுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என்று வசந்தகுமார் எம்.பி. தெரிவித்தார்.
கடலூர்:
தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் வசந்த குமார் எம்.பி. கடலூர் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாங்குநேரி சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் வெற்றி பெற்றது. தனித்து நின்று வெற்றி பெறவில்லை. எனவே நாங்குநேரி இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்.
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கைது குறித்து அவரது குடும்பத்தினர் எழுப்பி உள்ள 10 கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை. அவருக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவாக உள்ளது.
இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் உள்ளது என்று பிரதமர் மோடி தனது தேர்தல் பிரசாரத்தில் கூறினார். கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின் போது ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றார்.
ஆனால் ஆட்டோ மொபைல் துறையில் ஏற்பட்டு உள்ள கடும் வீழ்ச்சி காரணமாக லட்சக்கணக்கானோர் வேலை இழந்து உள்ளனர். சம்பளம் இல்லாத விடுமுறையை நிறுவனங்கள் அறிவிக்கின்றன.
கார் தயாரிப்பு என்பது பல்வேறு உதிரிபாகங்கள் தயாரிப்போடு சேர்ந்தது. கார் தயாரிப்பு நின்றதால் பல்வேறு சிறிய அளவிலான நிறுவனங்களும் மூடப்பட்டு உள்ளன. ஆனால் மத்திய அரசு மார்ச் 31-ந் தேதி வரை மட்டுமே சலுகை அறிவித்து உள்ளது. இதுவரையில் உற்பத்தியான கார்களை விற்பனை செய்வதற்கு மட்டுமே இது உதவும்.
நாடு முன்னேற தொழிற்சாலைகள் இயங்க வேண்டியது அவசியம். படித்தால் வேலை கிடைக்காது என்ற அவநம்பிக்கை இளைஞர்களிடம் ஏற்பட்டு உள்ளது. ஆனால் வங்கிகள் மாணவர்களுக்கு வழங்கிய கல்விக்கடன்களை தனியார் நிறுவனங்கள் மூலம் வசூலிக்கும் பணியில் கடுமையாக ஈடுபட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

கீழணையில் இருந்து வடவாறு வழியாக நீர் வரத்து அதிகரித்துள்ளதால் வீராணம் ஏரி நிரம்பியது. இதனால் ஏரியில் இருந்து இன்று 51 கனஅடி தண்ணீர் சென்னைக்கு அனுப்பப்படுகிறது.
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரிஉள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும்.
இந்த ஏரியின் மூலம் காட்டுமன்னார்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு முக்கிய நீர் ஆதாரமாக வீராணம் ஏரி உள்ளது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததாலும், நீர்வரத்து இல்லாததாலும் வீராணம் ஏரி நீர்மட்டம் குறையதொடங்கியது.
கடந்த மாதம் கர்நாடக மாநிலத்தில் பலத்த மழை பெய்ததால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிந்தன. இதன் காரணமாக காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணை வந்தடைந்ததும் அங்கிருந்து கொள்ளிடத்தின் வழியாக கீழணைக்கு தண்ணீர் வந்தது.
கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டது. வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வீராணம் ஏரிக்கு திறந்து விடப்பட்டது. இதனால் ஏரியின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது.
கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு 2,000 கனஅடி தண்ணீர் நேற்று திறக்கப்பட்டது. இன்று வடவாறு வழியாக 2,046 கனஅடி தண்ணீர் வீராணம் ஏரிக்கு வருகிறது. வீராணம் ஏரியின் நீர்மட்டம் நேற்று 47 அடியாக இருந்தது. இன்று ஏரியின் நீர்மட்டம் 47.02 அடியாக உயர்ந்தது. ஏரி நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.
வீராணம் ஏரி நிரம்பியிருந்தபோது ஏரியில் இருந்து சென்னைக்கு 74 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. ஏரியின் நீர்மட்டம் குறைந்தபோது சென்னைக்கு அனுப்பப்படும் குடிநீரின் அளவும் குறைந்துவந்தது. வீராணம் ஏரியின் நீர்மட்டம் கூடும் போது சென்னைக்கு அனுப்பப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்பட்டது.
நேற்று 46 கனஅடி தண்ணீர் சென்னைக்கு அனுப்பப்பட்டது. இன்று 51 கனஅடி தண்ணீர் சென்னைக்கு அனுப்பப்படுகிறது. தொடர்ந்து ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சென்னைக்கு அனுப்பப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வீராணம் ஏரியில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கவேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் எம்.சி.சம்பத் வீராணம் ஏரியிலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்து வைத்தார். வீராணம் ஏரியில் உள்ள 34 மதகுகளில் இருந்தும் வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் நேற்று வெளியேற்றப்பட்டது. இதன் மூலம் காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், சிதம்பரம் மற்றும் புவனகிரி தாலுகாக்களை சேர்ந்த 102 கிராமங்களில் மொத்தம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
காட்டுமன்னார் கோவில், ஸ்ரீமுஷ்ணம், வீராணம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் வீராணம் ஏரியில் இருந்து விவசாயத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. வீராணம் ஏரியில் இருந்து விவசாயத்து இன்று 202 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது.

கடலூரில் மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் கைதான கைதி போலீசாரின் பிடியில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். இவர் நேற்று மதியம் அவரது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வீட்டுக்குள் சென்றார். சிறிது நேரத்தில் காளியப்பன் வீட்டில் இருந்து வெளியில் வந்து பார்த்த போது அவரது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அவரது மோட்டார் சைக்கிளை மர்ம மனிதர் யாரோ திருடி சென்று விட்டது தெரிய வந்தது.
காளியப்பன் அவரது மோட்டார் சைக்கிளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். அப்போது கடலூர் நேதாஜி சாலைக்கு காளியப்பன் சென்றார். அந்த பகுதியில் வாலிபர் ஒருவர் காளியப்பனின் மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்தார்.
உடனே காளியப்பன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து புதுநகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அந்த வாலிபர் கடலூர் மாவட்டம் குறிஞ்சிபாடி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த ஜான்சன் (வயது 24) என்பது தெரிய வந்தது. மேலும் காளியப்பனின் மோட்டார் சைக்கிளை திருடியதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
அவருக்கு வேறு ஏதேனும் திருட்டு சம்பவங்களில் தொடர்பு உள்ளதா என ஜான்சனிடம் தொடர்ந்து போலீசார் விசாரித்து வந்தனர்.
அப்போது ஜான்சன் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று போலீசாரிடம் கூறினார். உடனே ஜான்சனை சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அதன் பின்னர் ஜான்சனை போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர். அப்போது போலீசாரின் பிடியில் இருந்து ஜான்சன் தப்பி ஓடினார்.
உடனே போலீசார் அவரை விரட்டி சென்று பிடிக்க முயன்றனர். ஆனாலும் அவர்களால் ஜான்சனை பிடிக்க முடியவில்லை. அங்கிருந்து அவர் தப்பி ஓடிவிட்டார்.
தப்பி ஓடிய விசாரணை கைதியை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீராணம் ஏரியில் இருந்து பாசனத்துக்காக இன்று காலை அமைச்சர் எம்.சி.சம்பத் தண்ணீர் திறந்து வைத்தார். ஏரியில் உள்ள 34 மதகுகளில் இருந்தும் வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரிஉள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும்.
இந்த ஏரியின் மூலம் காட்டுமன்னார்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு முக்கிய நீர் ஆதாரமாக வீராணம் ஏரி உள்ளது.
கடந்த மாதம் கர்நாடக மாநிலத்தில் பலத்த மழை பெய்ததால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிந்தன. இதன் காரணமாக காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணை வந்தடைந்ததும் அங்கிருந்து கொள்ளிடத்தின் வழியாக கீழணைக்கு தண்ணீர் வந்தது.
கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டது. வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வீராணம் ஏரிக்கு திறந்து விடப்பட்டது. இதனால் ஏரியின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது. அதன் பின்னர் சென்னைக்கு குடிநீருக்கு அனுப்பும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்பட்டது.
கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு 2,120 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46.61 அடியாக இருந்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி 47 அடியாக அதிகரித்தது. ஏரி நிரம்பியது. சென்னைக்கு தொடர்ந்து 46 கனஅடி குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது.
வீராணம் ஏரியில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கவேண்டும் என அந்த பகுதி விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதைத்தொடர்ந்து இன்று காலை அமைச்சர் எம்.சி.சம்பத் வீராணம் ஏரியிலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்து வைத்தார். ஏரியில் மலர் தூவினார். இதில் கலெக்டர் அன்புச்செல்வன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். வீராணம் ஏரியில் உள்ள 34 மதகுகளில் இருந்தும் வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதன் மூலம் காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், சிதம்பரம் மற்றும் புவனகிரி தாலுகாக்களை சேர்ந்த 102 கிராமங்களில் மொத்தம் 44.856 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
அந்த பகுதி விவசாயிகள் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் அவர்கள் அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரை மலர்தூவி வரவேற்றனர்.